Priya jaganath

Tragedy Fantasy Inspirational

4.7  

Priya jaganath

Tragedy Fantasy Inspirational

சமுதாயத்தில் ஒரு பெண்

சமுதாயத்தில் ஒரு பெண்

5 mins
297


 நம் சமுதாயமும் அதன் கோட்பாடுகளும் விதிமுறைகளும் காலங்கள் மாறினாலும் இன்னும் நிறைய இடங்களில் தலைதூக்கி கொண்டுதான் இருக்கிறது அதுவும் பெண்கள் மீதான கண்ணோட்டங்கள் மாறாமல் அப்படியேதான் இருக்கிறது பெற்றோர்களே உங்கள் பெண் பிள்ளைகளை பாரமாக நினைக்காதீர்கள் நானும் ஒரு பெண் என்பதால் இந்த சமுதாயத்தின் தாக்கத்தை அதிகமாகவே நான் உணர்ந்து இருக்கிறேன் உணர்ந்து கொண்டுதான் இருக்கிறேன் இன்னமும். ஆனால் என்னை இவ்வாறு சிந்திக்க வைத்த ஒரு சம்பவம் என் வீட்டில் அருகாமையில் இருக்கும் ஒரு பெண் பிள்ளையை நான் நீண்ட நாட்களாக கவனித்திருக்கிறேன் மிகவும் ஏழ்மையான குடும்பம் அந்தப் பெண்ணைப் பார்க்கும் போது நான் மிகவும் சந்தோஷப்பட்டு இருக்கிறேன் ஏனென்றால் அவர் வீட்டில் யாரும் படிக்காதவர்கள் ஆக இருந்தாலும் அவள் குடும்ப சூழ்நிலைகள் . அவள் பெற்றோர்கள் கூட உடல்நிலை பாதிக்கப் பட்டவர்களாக இருந்தார்கள் அப்படியிருந்தும் அவள் குடும்ப பொறுப்புகளை முடித்துவிட்டு தினமும் பள்ளிக்கு செல்வதை நான் பார்த்திருக்கிறேன் அவளோடு அவள் உடன் பிறந்த தம்பியையும்  தங்கையையும் அவள் கூட்டிக்கொண்டு பள்ளிக்கு ஆர்வமாக செல்வதை  பார்க்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும் இப்படி போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் திடீரென்று அந்தப் பெண்ணுக்கு கல்யாணம்  என்று நான் கேள்விப்பட்டேன்  மிகவும்  வருத்தத்தோடு ஆச்சரியப்பட்டேன் ஏனென்றால்அவளுக்கு வெறும் 13 வயது தான் ஆகிறது  பிறகு தொடர்ந்து அவர் குடும்பத்தினரிடம் விசாரிக்க ஆரம்பித்தேன் எங்கே போனாள் அவள் கல்யாணம் என்று கேள்விப்பட்டேன் அப்படியா என்று கேட்டேன் ஆனால் அதற்கு அவர்கள் சரியான பதில் எனக்கு  அவர்களிடமிருந்து கிடைக்கவே இல்லை ஆனாலும் என் மனசு அதை ஒத்துக் கொள்ளவே இல்லை ஏனென்றால் அவள் வயது மிகவும் சிறியவளாக இருந்ததினால் அதுவும் அவர் நன்றாக படித்துக் கொண்டிருந்த ஒரு பிள்ளை பின்பு நான் தொடர்ந்து முயற்சி செய்த பிறகு அவள் பாட்டி கூறியது நாங்கள் மிகவும் வறுமையில் இருக்கிறோம் எங்களால் அந்த பெண் பிள்ளையை பார்த்துக் கொள்ள முடியாதது என்றால் அதுவும் பாதுகாப்பு இல்லாததினால் நாங்கள் இந்த முடிவை எடுத்தோம் என்று கூறினார்கள்  ஆனால் நல்லவேளை அந்த திருமணம் நடைபெறவே இல்லை அவள் வயதை கருதி சிலர் கொடுத்த புகாரை பெற்று அந்த திருமணம் நிறுத்தப்பட்டது இதைக் கேள்விப்பட்டதும் என் மனது சிறிது சந்தோஷம் அடைந்தது பிறகு நான் கேட்டேன் சரி அவள் எங்கே இருக்கிறாள் இப்போ நான் அவளை பார்க்கவே இல்லையே எங்கே என்று கேட்டேன் அதற்கு அவர்கள் இல்லை அவள் அங்கேயே தான் இருக்கிறாள்  அவள் சொந்தக்காரர்கள் வீட்டில்  பிறகு நான் கேட்டேன்  அவள் படிப்பு எப்படி என்று நான் விசாரித்தேன் அதற்கு அவர்கள் அவள் அங்கேயே படித்துக் கொள்வாள் என்று சொன்னார்கள்  இந்த சம்பவம் என் மனதில் மிகவும் பாதிக்கப்பட்ட ஒன்றாக இருக்கிறது  நம்  சமுதாயத்தில் சில இடங்களில் பெண் பிள்ளைகளுக்கு கூட பாதுகாப்பு இல்லை என்று நினைக்கும் போது வறுத்தப்பட வைக்கிறது பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு இல்லை என்று திருமணம் எனும் வட்டத்துக்குள்  தள்ளி விட முயற்சி செய்கிறார்கள் ஆனால் அந்தப் பெண் பிள்ளை அதனுடைய வாழ்க்கை எந்த அளவு பாதிப்படையும் என்று ஒருநாளும் அவர்கள் அறிவதே இல்லை என் கேள்வி என்னவென்றால் திருமணம் என்னும் வட்டத்துக்குள் தள்ளப்பட்ட பிறகு அந்தப் பெண் பாதுகாப்பாக இருக்கிறாளா என்று தான் ஏன் நம் பார்க்கும் நிறைய பெண்கள் திருமணத்துக்கு பிறகு கூட அநேக விதமாக பாதிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறார்கள் ஏன் ஒரு சரியான கணவர் அமையாத போதிலும் ஒரு பெண் வேதனையோடு தான் வாழ்கிறாள் இதிலிருந்து நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் திருமணம் ஒரு பெண்ணுக்கான முடிவு அல்ல  முதலில் நம் சமுதாயத்தில் பெண்களுக்கு பாதுகாப்பான ஒரு சூழ்நிலையை நாம் அமைக்க வேண்டும் ஒரு பெண் எங்கே போனாலும் எந்த எல்லைகளை கடந்தாலும் அவள் ஏதோ ஒரு விதத்தில் நாம் சமுதாயத்தினால் பாதிக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறாள் இதற்கு ஒரு தீர்வு வரவேண்டும் என்றாள் அதில் முக்கிய பங்கு ஒரு பெற்றோர்களுக்கு தான் இருக்கிறது பெற்றோர்களே உங்கள் பெண் பிள்ளைகளை நான் சொன்னதைப் போல பாரமாக நினைக்காதீர்கள் அவள் பலம் அற்றவளாக கறுதாதீர்கள் ஆண்களை விட பெண்கள் மிகவும் மன வலிமை கொண்டவன் நீங்கள் உண்மையாகவே பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தாள் முதலில் உங்கள் வீட்டில் இருக்கும் ஆண் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுங்கள் பெண்களை எவ்வாறு நடத்த வேண்டும் என்று பெண்களின் அருமையை அவர்களுக்கு  உணர்த்துங்கள் உங்கள் வீட்டில் இருக்கும் பெண் பிள்ளைகளை நீங்கள் நடத்தும் விதத்தை கவனிக்கும் ஒரு ஆண்பிள்ளை அவனும் அதை கடைபிடிக்க ஆரம்பித்துவிடுவான் அவ்வாறு அவன் செய்தாள் அவன் வாழ்க்கையில் அவன் வீட்டில் இருக்கும் பெண்கள் ஆக இருக்கட்டும் சமுதாயத்தில் பார்க்கும் பெண்கள் ஆக இருக்கட்டும் அவன் நல்லவிதமாக நடத்த மரியாதை கொடுக்க கற்றுக் கொள்வான் பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகளை பேசுவதை முதலில் நிறுத்துங்கள் ஒரு கெட்ட வார்த்தை பேசினால் கூட அதில் பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகள் ஆகத்தான் இருக்கிறது ஒரு ஆணை திட்டும் போது கூட அவன் வீட்டில் இருக்கும் பெண்களைத்தான் நாம் திட்டுகிறோம் இப்படி நாம்  செய்வதினால் பெண்களைத் தான் நாம் இழிவு படுத்துகிறோம்  பெற்றோர்களே உங்கள் வளர்ப்புதான் நாளை நம் சமுதாயத்தின் பாதுகாப்பு உங்கள் பங்கை நீங்கள் சரியாக செய்தால் நம் சமுதாயத்தில் பாதுகாப்பாக பெண்களுக்கு என்றும் கைகொடுக்கும்  நம் உலகில் எந்தப் பெண்களும் தவறானவர்கள் இல்லை சில சூழ்நிலை காரணங்களால் அவர்கள் அந்த கட்டத்துக்குள் தள்ளப்படுகிறார்கள் கட்டாயத்தின் பேரில்  அவர்கள் சிதைந்து போகிறார்கள்  பெண்கள் நம் நாட்டின் கண்கள் என்று சொல்வார்கள் அது உண்மைதான் அவர்கள் கண்களாக இருப்பதினால் தான் அந்தக் கண்ணீர் அவர்களோடு என்றும் இருக்கிறது  சில பெண்கள் அவர்களிடம் இருக்கும் மனவலிமையை உணராததினால் தான் அவர்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார்கள  முதலில் பெண்கள் பாதிக்கப்படும் விஷயங்களை குறித்து ஏளனமாகப் பேசாதீர்கள் அவள் வாழ்க்கை அவ்வளவுதான் என்று நினைக்காதீர்கள் எந்தக் கட்டத்திலும் ஒரு பெண் எழுந்து நிற்கக் கூடிய வலிமை அவளுக்கு இருக்கிறது முடிந்துபோன விஷயங்களையும் அவளால் முடித்துவிட்டு மீண்டும் புதிய அத்தியாயத்தை தொடங்கும் முடியும் என்று நம்புங்கள் ஒரு பெண் விவாகரத்து பெற்றுக் கொண்டால் என்றால் அவள் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைக்காதீர்கள் அவள் மறுபடியும் அவள் வாழ்க்கையை அவள் பார்த்துக் கொள்ள முடியும் விவாகரத்து முடிவும் ஒரு பெண்ணுடன் வாழ்க்கையின் கடைசி என்று நினைக்காதீர்கள் அவளால் மீண்டும் எழுந்து நிற்க முடியும் அவள் வாழ்க்கை அவள் தன்னம்பிக்கையோடும் வாழமுடியும் அவளுக்கு விருப்பப்பட்டால் அவளால் மறுமணமும் செய்து கொள்ள முடியும் இதைப் பற்றி ஏளனமாக பேச ஒன்றுமில்லை அதை நினையுங்கள் அவள் தனியாக வாழ நினைத்தால் தயவு செய்து அவளை அவள் வாழ்க்கையை தனியாக நிம்மதியாக வாழ விடுங்கள் இதை நான் ஆண்களுக்கும் தான் சேர்த்து சொல்கிறேன் ஒரு பெண் விவகாரத்து பெற்று விட்டால் அவள் தனியாக இருக்கிறாள் என்று சந்தர்ப்பத்தைத் தேடாதீர்கள்  ஒருவேளை கணவரோடு வாழும் பெண்களாக இருந்தால் கணவர்களுக்கு நான் சொல்வது என்னவென்றால் உங்கள் மனைவிகளை மரியாதையோடு நடத்துங்கள் அவளுக்கு அவளுடைய உணர்வுகளை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் அவளுக்கு பாதுகாப்பான உணர்வை கொடுங்கள் நீங்கள் நடத்தும் விதத்தை கவனிக்கும் உங்கள் பிள்ளைகளும் அதை புரிந்து கொள்வார்கள் பெண்களின். முக்கியத்துவத்தை  உணர்வார்கள்  உங்களை சுற்றி இருக்கும் ஆண்களும் அதைப் பார்த்து அவர்கள் மனைவியை எப்படி நடத்த வேண்டும் என்று கற்றுக் கொள்வார்கள்  ஆண்களை முடிந்த அளவுக்கு நீங்கள் உங்கள் வாழ்க்கையில் சந்திக்கும் பெண்களுக்கு அவள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள உதவி செய்யுங்கள் நம் நாட்டின் பெண்களின் பாதுகாப்பு ஆண்களின் கைகளில் தான் இருக்கிறது முதலில் நீங்கள் மாறினால் நிச்சயம் நம் நாட்டில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பை பெறுவார்கள்  பெண்களுக்கு நான் என்ன  சொல்கிறேன் என்றாள் பெண்களை நீங்கள் எந்த விதத்திலும் குறைந்தவர்கள் இல்லை உங்களால் எட்ட முடியாத எல்லையும் இல்லை  ஒரு பிரச்சினையில் இருந்து இன்னொரு பிரச்சினைகளுக்குள் சிக்கிக் கொள்ளாதீர்கள் சில சமயங்கலில் ஒரு பெண் இன்னொரு பெண்ணால் கூட பாதிக்கபடுகின்றனர் பெண்கள் ஒற்றுமையாக இருந்தால் தான் அவர்களுக்கு எதிரெ நடக்கும் குற்றங்கலை கூட எதிர்க்க முடியும் இளம் பிள்ளைகளுக்கும் நான் சொல்வது என்ன உங்கள் வாழ்க்கையில் நீங்கள் முதலில் உங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள் தன்னம்பிக்கையோடு நீங்கள் வாழ தயாராகுங்கள் யாரையும் எதற்கும் சார்ந்து இருக்காதீர்கள் உங்கள் படிப்புகளை கவனம் செலுத்துங்கள் தற்காலிகமாக வரும் உணர்வுகளுக்கு கவனம் செலுத்தி உங்கள் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி கொள்ளாதீர்கள் உங்களோடு கூட காலம் முழுவதும் உதவியாக இருக்கப் போகிறது உங்கள் படிப்பும் உங்கள் தன்னம்பிக்கையும் தான் எந்த ஒரு இலக்கும் இல்லாமல் இருக்காதீர்கள் வாழ்க்கையின் இலக்குகளை தேட ஆரம்பியுங்கள் அதற்காக உங்கள் முழு முழு முயற்சிகளையும் போடுங்கள் நிச்சயம் நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்களாக இருப்பீர்கள் நம் சமுதாயத்தில் என்னதான் பிரச்சினைகளை நாம் சந்தித்தாலும் நம்மளுடைய முன்னேற்றம்தான் அதற்கான முதல் அடியாக இருக்கும் உங்கள் முழு கவனத்தையும் உங்கள் முன்னேற்றத்தின் மீது பதிய வையுங்கள் என்ன தான் மற்றவர்களால் உங்களுக்கு பாதுகாப்பு கிடைத்தாலும் உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ள இது உங்களுக்கு மிக முக்கியமாக இருக்கும் உங்கள் வாழ்க்கை மிகவும் அழகானது அதை நீங்கள்தான் அழகாக வடிவமைக்க வேண்டும் நீங்கள் வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டுமென்றால் முக்கியமாக பொய்யான கருத்துக்களை காட்டுவோர் இடம் காது கொடுத்து அவர்கள் பேச்சுக்களை கேட்காதீர்கள் அவர்கள் உங்களை பலவீனமாக்கி விடுவார்கள் உங்கள் பலத்தை உணர முடியாமல் போய்விடும் உங்களை சுற்றி நல்ல விஷயங்களாக நிரப்புங்கள் கஷ்டங்கள் வரும்போது சோர்ந்து போய் விடாதீர்கள்  முடிவாக பெற்றோர்களே உங்கள் பெண் பிள்ளைகளுக்கு முதலில் நீங்கள் கற்றுக் கொடுக்க வேண்டிய விஷயம்  அவள் எவ்வளவு  மனவலிமை மிக்கவள் என்று  ஒரு பெண் நம் சமுதாயத்திற்கு எவ்வளவு முக்கியம் என்று அவளுக்கு கற்றுக் கொடுங்கள்  அவள் அவளை கவனித்துக் கொள்ளும் திறனை வளர்த்து விடுங்கள் பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்று நீங்களும் நம்புங்கள்  பெண்கள் பிரச்சனைகளுக்கு கல்யாணம் தான் ஒரே தீர்வு என்று உங்கள் மனதில் இருந்து தூக்கி எறியுங்கள் பிள்ளைகளை வளர்ப்பதில் மிகவும் கவனம் செலுத்துங்கள் நீங்கள் நல்ல விதைகளை விதைத்தால் நிச்சயம் நல்ல கனி கொடுக்கும் மரங்களாக வளர்ந்து நிற்பார்கள் எதிர்காலத்தில் இந்த விஷயத்தில் ஒவ்வொரு பெற்றோர்களும் கவனம் செலுத்தினால் நிச்சயம் நம் சமுதாயத்தில் மாற்றங்களை நாம் எதிர்காலத்தில் காணலாம்.., 

 

 உங்களுடன்  

 priya jaganath

 நன்றி

 

 

 


Rate this content
Log in

Similar tamil story from Tragedy