Priya jagan

Children Stories Fantasy Inspirational

5.0  

Priya jagan

Children Stories Fantasy Inspirational

முதல் வெற்றி

முதல் வெற்றி

2 mins
467


வெற்றியை நோக்கிய பயணத்தில் பல தோல்விகளுக்கு பின்னால் வெற்றியைக் கண்ட மீராவின் கதை கனவுகள் காண்பதற்கு அதை நிறைவேற்றுவதற்கு எதுவும் தடை இல்லை என்று உதாரணத்தை பதித்தவள் மீரா பெரியதாக படித்தவளும் இல்லை பெரிய பின்னணியை சேர்ந்தவளும் இல்லை ஆனால் அவள் கனவுகள் என்றும் பெரியதாகவே இருந்தது ஆனால் அவளை சுற்றி இருந்தவர்கள் அவள் வாழ்க்கையில் அவள் வெற்றி பெறுவதற்கு அவளிடம் எதுவும் இல்லை என்று எப்பொழுதும் அவளுக்கு நினைப்பூட்டிக்கொண்டே இருந்தார்கள் இதனால் அவள் சாதிக்க வேண்டும் என்று எண்ணங்கள் அவளுக்கு இன்னும் அதிகமாகவே உருவாக்கிக் கொண்டிருந்தது ஆனால் எப்பொழுதும் அவள் தேடல் கனவுகளை நோக்கி இருந்தது அவளின் வெற்றி பாதை எங்கே என்று கண்டு அறிவதற்காக இருந்தது படித்தவர்களால் மட்டும் தான் எதையும் செய்ய முடியும் என்று அநேகர் நினைத்துக் கொண்டிருக்கும் எண்ணத்தை மாற்ற நினைத்தால் அதனால் அவள் மிக சிறந்த எழுத்தாளராக ஆக வேண்டும் என்று முடிவு செய்து அதை நோக்கி ஓடிக் கொண்டிருந்தாள் அவள் எழுத்தாளராக ஆவதினால் அவள் ஆழ் மனதில் தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்த நினைத்ததால் ஆனால் அவளால் அவ்வளவு சுலபமாக ஒரு எழுத்தாளராக ஆக முடியவில்லை அப்பொழுதும் அவளை இந்த சமூகம் அவளை சுற்றி உள்ளவர்களும் ஏளனம் தான் செய்தார்கள்.


அவளால் எதுவும் முடியாது என்று அவளையே சில சமயம் நம்ப வைத்தார்கள் ஆனால் மீரா அவள் விடாமுயற்சியை என்றும் விடவில்லை தொடர்ந்து அவள் முயற்சி செய்து கொண்டே இருந்தால் பல தோல்விகளையும் சந்தித்தால் அவளுக்கான அங்கீகாரம் எங்கவும் கிடைக்கவில்லை அவமானங்களை சந்தித்தபோது அவதாரம் எடுப்பது போல் விடாமுயற்சியை விடாமல் தொடர்ந்தாள் அவள் முயற்சிகள் அநேகருக்கு வேடிக்கையாகவே இருந்தது ஒரு கட்டத்தில் மீராவிற்கு அவர்கள் சொல்வதைப் போல நம்மால் எதையும் செய்ய முடியாது என்று நினைத்துக் கொண்டாள் ஆனாலும் அவள் முயற்சியை அவள் விடவில்லை தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருந்தால் அப்பொழுது எதிர்பாராத விதமாக ஒரு நாள் மீராவிற்கு அவள் மின்னஞ்சலுக்கு ஒரு செய்தி வந்தது அவள் எழுதிய ஒரு புத்தகத்திற்கு பாராட்டு தெரிவித்து விருது வழங்கப்பட்டது அதைக் கண்ட மீராவிற்கு இத்தனை நாள் பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைத்துவிட்டது என்று கண்ணீர் முழுக சந்தோஷப்பட்டால் இறைவனுக்கு நன்றிகளைச் சொன்னால் அவளுக்கு கிடைத்த அந்த முதல் வெற்றியை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளும் போது அப்பொழுதும் அவர்கள் அவளை அவள் வெற்றியை கொண்டாடவில்லை ஆனாலும் மீரா அதை பற்றி துளி கூட கவலைப்படவில்லை ஏனென்றால் அவள் திறமைகள் எங்கே கொண்டாடப்படுகிறது அதை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தாள் இன்று அவளை யார் ஒரு கதை ஆசிரியராக அங்கீகரித்தார்களோ அவர்களுக்காக இன்னொரு கதையாக இதை எழுதி இருக்கிறாள் தொடர்ந்து எழுதுவாள் .



Rate this content
Log in