Priya jaganath

Inspirational Others Children

4.8  

Priya jaganath

Inspirational Others Children

பெண்ணாக இருந்தால் என்ன ?

பெண்ணாக இருந்தால் என்ன ?

8 mins
476


செல்வி இடம் அவள் அப்பாவும் அம்மாவும் அறிவுரைகளை கொட்டிக் கொண்டே இருந்தார்கள். அதைக் கேட்டுக் கொண்டிருந்த செல்வி அவள் குழந்தையுடன் பரபரப்பாக அவள் கணவர் வீட்டுக்கு செல்வதற்காக கிளம்பி கொண்டிருந்தாள். அவர்கள் என்னதான் அறிவுரைகளை கொட்டிக் கொண்டிருந்தாலும் அதைக் கேட்டுக் கொண்டிருந்த செல்வி ஏதோ ஒரு தயக்கத்தோடு தான் இருந்தாள். ஏனென்றால் சில மாதங்களாகவே செல்விக்கும் அவரது கணவருக்கும் இடையே சில பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருந்தது. அதில் ஒரு முக்கியமான பிரச்சனை அவள் குடும்ப சூழ்நிலைமை குறித்தே இருந்தது செல்வி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவளாக இருந்தாலும் அவன் அவள் அழகை பார்த்து திருமணம் செய்து கொண்டான். காலப்போக்கில் அழகு அவன் கண்ணிற்கு தெரியவில்லை அவள் இயலாமை மட்டும்தான் அவன் பார்த்தான் ஒவ்வொரு நாளும் அவனும் அவன் தாயும் அவளை வார்த்தைகளால் வேதனைக்கு உள்ளாக்கினார்கள் சில சமயங்களில் அவன் செல்வியை உடல் அளவிலும் மனதளவிலும் காயப்படுத்திக் கொண்டே இருந்தான் பொறுத்துக் கொள்ள முடியாமல் செல்வி அவள் பெற்றோர் வீட்டிற்கு வந்து விட்டாள் ஆனால் இங்கவும் அவள் நிம்மதியாக இருக்க முடியவில்லை அவள் உணர்வுகளைப் பற்றி யாரும் யோசிக்காமல் உனக்காக இல்லை என்றாலும் உன் பிள்ளைக்காக உன் கணவர் வீட்டிற்கு சென்று நீ வாழ தான் வேண்டும் என்று நஞ்ஜீனார்கள் இதில் செல்வியின் தாயார் நீதான் பொறுத்துக் கொள்ள வேண்டும் செல்வி உன் கணவர் வீட்டில் என்ன நடந்தாலும் அதை நீ எங்களிடம் சொல்லக்கூடாது  எல்லாவற்றையும் பொறுத்துக் கொள் என்று இவளை பற்றி யோசிக்காமல் பேசுவதை கேட்ட என்ன செய்வது என்று தெரியாமல் அவள் பெற்றோர்கள் சொல்வதைப்போல் அவள் கணவர் வீட்டுக்கு செல்வதற்காக ஒத்துக்கொள்கிறாள் ஒரு வழியாக அவள் கணவர் வீட்டுக்கு வருகிறாள் அவள் அப்பா அம்மா உடன் வந்த அவள் அப்பாவும் அம்மாவும் அவளுக்கு நடந்த பிரச்சனைகளையும் அநியாயங்களை பற்றியும் ஒரு வார்த்தையும் கூட அவள் கணவர் வீட்டாரிடம் கேட்காமல் செல்வி செய்த தவறுக்காக நாங்கள் மன்னிப்பு கேட்கிறோம் என்று அவர்களிடம் கெஞ்சிக் கொண்டிருந்தார்கள் இதை பார்த்துக் கொண்டிருந்த செல்விக்கு மிகவும் வருத்தம் ஆனாலும் அது அனைத்தையும் பொறுத்துக் கொண்டு அவள் கணவருடன் வாழ்வதற்கு அவள் மனதை தயார் படுத்திக் கொண்டால் நாளுக்கு நாள் அவள் பிரச்சனைகள் அதிகமாகிக் கொண்டே தான் இருந்தது சொல்லாலும் செயலாலும் அவள் கணவர் விட்டார் அதிகமாக அவளை காயப்படுத்திக் கொண்டே இருந்தார்கள் நாளடைவில் அவள் எதை செய்தாலும் அவள் கணவர் அதில் ஒரு குற்றத்தை கண்டுபிடித்துக் கொண்டே இருந்தான் எல்லாவற்றையும் குழந்தைக்காக பொறுத்துக் கொண்டிருந்த செல்வி அப்படியே ஒரு சில நாட்கள் போனது ஒரு நாள் தீபாவளி கொண்டாட்டத்திற்காக நாத்தனார் அவளுடைய குடும்பமும் வருகிறார்கள் அப்பொழுது அங்கே எல்லா வேலையும் அவளே செய்து கொண்டே இருந்தால் குழந்தையை தூக்குவதற்கு கூட நேரமில்லாமல் உழைத்துக் கொண்டே இருந்தால் அப்படியே இரவு ஆனது அனைவரும் டின்னர் சாப்பிடுவதற்காக ஒன்று கூடுகிறார்கள் அப்பொழுது அனைவரும் கேலி கிண்டலாக பேசிக் கொண்டிருந்த தருணம் நாத்தனாரின் பார்வை செல்வியின் இடம் திரும்ப உணவை பரிமாறிக் கொண்டிருந்த செல்வியைப் பார்த்து என்ன நீங்க கோச்சிக்கிட்டு உங்க அம்மா வீட்டுக்கு போனீங்லாமே அப்புறம்ஒரே வாரத்தில் திரும்பி வந்துட்டீங்க நீங்களா வந்தீங்களா இல்ல அவங்களே துரத்திட்டாங்களா என்று வேடிக்கையாக கேட்க அதை பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் சிரித்தார்கள் அதற்கு செல்வியின் கணவர் அவள் எங்கே அங்கே இருக்க முடியும் அங்கே சாப்பிடுவதற்கு அவர்களுக்கு கஷ்டம் ஒரு வாரம் அங்கே தங்கி இருந்ததே கஷ்டம் தான் அதான் ஓடி வந்துட்டா என்று சொல்கிறாள் இதை பார்த்துக் கொண்டிருந்த செல்விக்கு காயத்திற்கு மேல் காயம் படுவதைப் போல் அதிகமான வலியை உணர்ந்தால் இதற்கிடையில் நாத்தனாரின் கணவர் செல்வியின் இடம் என்னம்மா செல்வி உங்கள் வீட்டில் இருந்து தீபாவளி பரிசாக உனக்கும் உன் குழந்தைக்கு என்ன கொடுத்தார்கள் என்று கேட்கிறாள் அதற்கு அவள் மாமியார் நீங்க வேற அவ வீட்டில அவங்களுக்கு இப்போ சாப்பிடுவதற்கு இருக்கோ இல்லையோ இதுல வேற பரிசுகள் இவளுக்கு ஒன்னும் பண்ணலன்னாலும் பரவால்ல தம்பி ஒரு மாப்பிள்ளைக்கு கொடுக்க வேண்டும் மரியாதையை கொடுக்கணும் இல்ல நல்ல நாள் அதுவுமா அதெல்லாம் நாம அவங்க கிட்ட எதுவும் எதிர்பார்க்க கூடாது என்று செல்வியை பார்த்து புலம்பிக்கொண்டே அவளை திட்ட தொடங்கினால் இது எல்லாவற்றையும் தாங்க முடியாமல் செல்வி அவள் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டு ஓவென்று அழுகிறாள் இத்தனை நாள் அவள் அதிகமாக பொறுத்துக் கொண்டாள் ஆனால் இந்த முறை அவளை மற்றவர்களுக்கு முன்பாக இழிவு படுத்தி அவள் சுயமரியாதையை பேசுவதை செல்வியால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை ஆனால் திரும்பவும் அவள் அம்மா வீட்டிற்கு சென்றாலும் அவர்களால் அதை புரிந்து கொள்ள முடியாது என்னை பெற்றவர்களே என்னை புரிந்து கொள்ளாத போது இவர்கள் எங்கே என்னை புரிந்து கொள்வார்கள் என்று அவர் மனதிற்குள் சொல்லிக் கொள்கிறாள் கடவுளிடம் அழுது கொண்டே உறக்கமாக பேசுகிறாள் கடவுளே என் நிலைமை புரிந்துகொள்ள இங்கு யாரும் இல்லை எனக்கு இந்த மாதிரி சூழ்நிலை என்ன செய்யறதுன்னு எனக்கு தெரியல என் சுயமரியாதை இழந்து நான் இங்கு வாழணும்னு என்னால முடியல அப்ப அவ அதிகமாக யோசிக்கிறா சுயமரியாதையை இழந்து இங்கே வாழ்வது அவள் இறந்த நிலையில் இருப்பதைப் போல் அவள் உணர்கிறாள் உயிர் இல்லாமல் இங்கே வாழ்வதை விட உயிருடன் சுயமரியாதையோடு நான் என் பிள்ளையோடு தனியாக வாழ்ந்து விடுகிறேன் என்று யோசிக்கிறாள் அவள் தைரியத்தை வர வைத்துக் கொண்டு அவள் கணவரிடமும் அவன் வீட்டாரிடமும் பேசுகிறாள் நான் இங்கு வாழ்வதற்கு விருப்பப்படவில்லை எங்கே எனக்கு சுயமரியாதை கிடைக்கவில்லையோ அங்கே நான் இருப்பது இறந்த பிணத்திற்கு சமம் இப்படி நான் பிணமாக இங்கு வாழ்வதற்கு எனக்கு எந்த அவசியமும் இல்லை மரியாதை காத்துக் கொள்வதற்காக என் பிள்ளையோடு தனியாக வாழ விரும்புகிறேன் என்று சொல்கிறாள் கேட்டு அவள் கணவர் சிரித்துக்கொண்டே இந்த வட்டி எத்தனை நாள் உன்னுடைய ட்ரிப் என்று கேட்கிறார் அதற்கு பதில் ஏதும் சொல்லாமலே செல்வி அமைதியாகவே இருந்தாள் உடனே அவள் மாமியார் எல்லாருக்கும் முன்பாக செல்வியை பார்த்து இவளுக்கு இதே வேலை ஆகிவிட்டது அவள் அம்மா வீட்டிற்கு போவதும் வருவதும் இதனால் எங்களுக்கு குடும்பம் மானம் தான் பாதிக்கிறது கொண்டே செல்வியின் கணவரிடம் அவனுடைய அம்மா இவள் உனக்குத் தேவையில்லை இதற்கு மேல் போதும் இவளிடம் நாம் பொறுத்துக் கொண்டது அப்பவே சொன்னேன் இவளை நீ திருமணம் செய்து கொள்ளாதே இவளிடம் ஒன்றும் இல்லை இவள் நம்ம தகுதிக்கு ஏற்றவள் இல்லை என்று படித்து படித்து சொன்னேன் உடனே செல்வியின் கணவர் அம்மா நீ ஏன் கத்தி உன் உடம்பை கெடுத்துக்குற இவளை பத்தி தெரிஞ்ச விஷயம் தானே சரியான பைத்தியத்தை நம்பி ஏமாந்து கல்யாணம் பண்ணிட்டேன் என்று தேவையில்லாமல் கண்ணா பின்னான்னு பேசுறான் கோபத்துடன் செல்வியை பார்த்து உனக்கு எத்தனை வாட்டி பட்டாலும் புரியாதா உன் வீட்டுல கூட உன்ன ரெண்டு நாளைக்கு மேல வச்சிக்கிறது இல்ல நீ போறதுக்கு வேற இடம் இல்ல அப்ப கூட திமிரா நீ இவ்ளோ ஆட்டம் ஆடுறியே அப்படின்னு கேட்கிறான் உடனே செல்வின் நாத்தனார் ஆமா அண்ணா இவ எப்படியும் போயிட்டு ரெண்டு நாள்ல திருப்பி வருவா அங்க சாப்பிடறதுக்கும் இருக்கிறதுக்கும் இடம் இல்லாம அப்பவும் நீ சேத்துக்கிட்டா என்ன நீ தான் ஒரு பெரிய முட்டாள் அப்படின்னு அவங்க அண்ணனுக்கு ஏத்தி விட்டுட்டே இருந்தா இது எல்லாத்தையும் கேட்டுகிட்டே இருந்த செல்வி பொறுமையை இழந்து அவள் கணவரை பார்த்து ஆமா நீங்க சொல்றது எல்லாம் சரிதான் எனக்கு போறதுக்கு இடம் இல்ல எனக்குன்னு ஒன்னும் இல்ல எல்லாம் நான் ஒத்துக்குறேன் ஆனா என் சுயமரியாதையை தொலைச்சுக்கிட்டு இங்க ஒரு நடை பிணமாக நான் வாழ நான் விரும்பல அதனாலதான் நான் போறேன் அப்படின்னு தைரியமாக சொல்லிட்டு அவ பொண்ணோட கைய பிடித்துக் கொண்டு அங்க இருந்து கிளம்புறா அவள் இப்படி திமிராக பேசிக்கொண்டு போவதை கண்ட அவள் கணவரும் அவளுடைய மாமியாரும் பொறுத்துக் கொள்ள முடியாமல் அவளை திட்டிக் கொண்டே நீ போ உன் அம்மா எப்படி உன்னை சேர்த்துக் கொள்கிறாள் என்று நாங்கள் பார்க்கிறோம் கோபமாக கத்திக் கொண்டே இருந்தார்கள் இது எதையும் செல்வி கேட்காமல் அவள் போய்க்கொண்டே இருந்தால் அதற்குள்ளதாக செல்வின் கணவர் அவளுடைய மாமியாரும் செல்வையினுடைய அப்பா அம்மாவை தொடர்பு கொண்டு செல்வியைப் பற்றி இல்லாத பொல்லாததையும் சொல்கிறார்கள் உங்க பொண்ணுக்கு ஏதோ மனநிலை பிரச்சனை இருக்கு பாவம் உன்ன பார்த்து கல்யாணம் பண்ணி இப்படி ஒரு வசதியான வாழ்க்கையை நாங்கள் கொடுத்தால் வாழத் தெரியாமல் இப்படி அவ வாழ்க்கையா கெடுத்துக்குறா உங்க பொண்ணு கிட்ட நாங்க பட்டதெல்லாம் போதும் உங்க பொண்ண நீங்களே உங்க வீட்ல வச்சுக்கோங்க என்று சொல்லிவிட்டார்கள் இதைக் கேட்டதும் செல்வேன் அம்மா அப்பாவிற்கு கடும் கோபம் அவள் மீது அவள் எதற்காக இப்படி செய்திருப்பாள் என்று கூட அவர்கள் யோசிக்கவில்லை அவள் மீதுதான் தப்பு இருக்கும் என்று முடிவு செய்து அவள் வருகைக்காக காத்துக் கொண்டிருந்தார்கள் சில மணி நேரங்கள் கழித்து செல்வி அவள் வீட்டிற்கு வந்து விடுகிறாள் அவள் வீட்டிற்குள் நுழைவதற்குள் அவள் அம்மா அப்பா வாசல் அருகே கடும் கோபத்துடன் நின்று கொண்டிருந்தார்கள் செல்வியைப் பார்த்ததும் அவள் அம்மா கர்த்தா தொடங்கி விட்டாள் அதற்கு பதில் எதுவும் சொல்லாமல் செல்வி அவள் மகளுடன் வீட்டுக்குள் சென்று தண்ணீரைக் குடித்துவிட்டு உட்கார்ந்து கொள்கிறாள் அவள் பின்னாடியே சென்று அவள் அம்மா கேட்கிறார் உன்னை போன்ற அடங்காப்பிடாரியை பெற்றதற்கு நான் வேதனைப்படுகிறேன் உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை கிடைத்தது என்று எவ்வளவு சந்தோஷமாக நானும் அப்பாவும் இருந்தோம் உனக்கு அங்க என்ன குறை இருக்கிறது இப்படி அடங்காம தெரிஞ்சிக்கிட்டு இருக்க திட்டுகிறாள் செல்வின் அப்பா அவளிடம் சென்று பொறுமையாக கேட்கிறான் செல்வி நீ ரொம்ப தைரியமான பொண்ணு நல்லவன்னு நான் நினைச்சேன் இப்படி சுயநலமா நீ உன் பெண்னை பத்தி யோசிக்காம இப்படி நீ பண்நுறியே நான் நினைச்சு கூட பாக்கல உன் குழந்தை மீது உனக்கு அக்கறை இருந்தால் இப்படி செய்திருக்க மாட்டாய் அப்படி என்று அவன் அப்பா கேட்கிறார் இவ்வளவு நேரம் பொறுத்துக் கொண்டிருந்த செல்விக்கு இந்த வார்த்தை கேட்டதும் கோபம் உச்சத்துக்கு ஏறியது உடனே செல்வி எழுந்து நின்று அவன் அப்பாவை பார்த்து என்னப்பா சொன்ன அக்கறை எனக்கு இருக்கிறதா என்று கேட்கிறாயா அந்த அக்கறை உனக்கு இருந்திருந்தால் இவ்வளவு நாள் நான் இப்படி கஷ்டப்பட்டு இருந்திருக்க மாட்டேன் ஒரு ஒரு முறையோ நாங்க கவலைப்பட்டு வேதனைப்பட்டு இங்கு நான் ஓடி வரும்போது எல்லாம் அவங்க சொல்றதெல்லாம் கேட்டு என் மேல தான் தப்பு இருக்குன்னு நெனச்சு என்னையே குற்ற படுத்தி பேசினீங்களேப்பா அது தான் அக்கறையா அவங்களுக்கும் உங்களுக்கும் என்னப்பா வித்தியாசம் இத்தனை வருஷத்துல எத்தனை முறை நான் இங்க வந்து இருப்பேன் வேதனையோட ஒரு முறையாவது என்னை கேட்டிருப்பீங்களா எனக்கு என்னதான் பிரச்சனை நடந்துக்கிட்டு இருக்குன்னு என் பக்கு நியாயம் இருக்கான்னு கேட்டு இருப்பீங்களா இதற்கு பதில் எதுவும் இல்லாததால் செல்வியின் அப்பா அமைதியாகவே நின்று கொண்டிருந்தான் அதற்கு உடனே செல்வி என் அம்மா அவளைப் பார்த்து நீ சொல்றதெல்லாம் சரிதான் உனக்கு அந்த மாதிரி ஒரு வசதியான வாழ்க்கை கிடைச்சிருக்குன்னு நீ தான் பொறுத்து போகணும் நாம இருக்க நிலைமைக்கு இப்படி ஒரு வாழ்க்கை என்றால் ஊரே உன்ன பார்த்து பொறாமை பட்டுக்கொண்டு இருந்துச்சி இப்ப நம்ம சொந்தக்காரங்களுக்கு அக்கத்து பக்கத்துல தெரிந்த எவ்வளவு கேவலமா நினைப்பாங்க அதற்கு செல்வி ஆமாம்மா நீ சொல்றதெல்லாம் சரிதான் நாம பண காசு இல்லாதவங்க தான் நமக்கு இப்படி ஒரு வாழ்க்கை ஒரு பெரிய விஷயம் தான் நா ஒரு பெண்ணா இருந்துகிட்டு என் சுயமரியாதையை இழந்து அப்படி ஒரு வசதியான வாழ்க்கையை இந்த ஊருக்காகவும் நம்ம உறவினர்களுக்காகவும் நான் வாழனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை இப்ப வந்த ஒருவர் சொல்றத நீங்க நம்புறீங்க உங்க கூடவே உங்க நிழலில் வாழ்ந்துட்டு இருந்த இத்தனை வருஷமா உங்க பொண்ணு சொல்றத நீங்க எப்பயாச்சும் ஒரு வாட்டி காது கொடுத்து கேட்டு இருப்பீங்களா என் மேல தப்பு இருக்காது சிறிதாவது நம்பிக்கை வைத்தீர்களா இல்ல நீங்க அப்படி ஒருநாளும் செய்யல அதற்கு உடனே செல்வின் அம்மா செல்வியை பார்த்து நீ பேசுற இந்த வீர வசனங்கள் எல்லாம் பேசுறதுக்கு தான் நல்லா இருக்கும் வாழ்க்கைக்கு நல்லா இருக்காது ஒரு பொண்ணு அதுவும் கல்யாணம் ஆன பொண்ணு அவ கணவரை விட்டு இப்படி தனியா எப்படி வாழ முடியும் அதுவும் இல்லாம காலகாலமா எல்லா பொம்பளைங்களும் அவன் கணவர் கிட்டயும் அவர் கணவர் வீட்டுல நடக்குற விஷயங்களை பொறுத்துக்கிட்டு தான் வாழனும் நானும் அப்படித்தான் வாழ்ந்த உடனே செல்வி ஆமா அப்படித்தான் நிறைய பொண்ணுங்க இருக்காங்க ஆனா நா அவங்கள்ல ஒருத்தன் இருக்க விரும்பல ஒரு பொண்ணா பொறந்ததுனால சுய மரியாதையை இழந்து வாழனும்னு பொண்ணுங்களுக்கு எந்த அவசியமும் இல்லை நான் எதுலயும் குறைந்தவை இல்லை உடனே செல்வி அம்மா செல்வி எங்கள் நிலைமை உனக்கு நல்லாவே தெரியும் நாங்களே இங்க எவ்வளவு கஷ்டப்பட்டுகிட்டு இருக்கோம்னு இப்படி சொன்னதும் செல்வி அவள் அம்மாவை பார்த்து சிறு புன்னகையோடு மா நான் இங்க என்னோட சர்டிபிகேட்ஸ் எடுக்க தான் வந்தேன் சொல்லிவிட்டு சர்டிபிகேட்டை எடுத்துக் கொண்டிருந்தால் பின்னாடியே சென்று அவள் அம்மா நான் அதை அர்த்த படுத்தவில்லை செல்வி சொன்னதும் அம்மா எனக்கு எல்லாம் தெரியும் செல்வி சொல்லிவிட்டு அவள் சில பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டால் அவள் அம்மா அப்பாவை பார்த்து அம்மா அப்பா இந்நாள் வரைக்கும் நீங்கள் செய்த எல்லாவற்றுக்கும் நான் ரொம்ப கடமைப் பட்டு இருக்கேன் இதுக்கு மேல நான் என் மகளும் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பவில்லை என்னை நான் பாத்துக்குற அளவுக்கு நீங்க என்னை நல்லா படிக்க வச்சிருக்கீங்க அது போதும் எனக்கு உடனே செல்வியின் அம்மா நீ அவசரப்பட்டு முடிவு எடுக்கிறாய் கொஞ்ச நேரம் யோசித்துப் பார் என்று சொல்கிறார்கள் அதற்கு செல்வி அம்மா நான் இதைப் பற்றி நல்லாவே யோசிச்சிட்டேன் நான் என்னோட பொண்ணுக்கு ஒரு சிறந்த அம்மாவாக இருக்க நினைக்கிறேன் நான் ஏன் சுயமரியாதையை இழந்துட்டு எப்படி என் பொண்ணுக்கு சுயமரியாதை பற்றி கற்றுக் கொடுக்க முடியும் என்னை பார்த்து என் பொண்ணுக்கு நான் ஒரு தவறான எடுத்துக்காட்டாக எப்பவும் இருக்க கூடாது அப்பா கூட உன் பொண்ணு மேல உனக்கு அக்கறை இல்லையா என்று கேட்டார் அதிகமா அக்கரை இருக்கிறதுனால தான் ஒரு பொண்னுக்கு சுய மரியாதை எவ்வளவு முக்கியம் என்று காட்டுறன். ஒரு பெத்தவங்க ஒரு பொண்ணு நல்லா படிக்க வைத்து அவளுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்ததும் அவங்க கடமை முடிஞ்சிருச்சுன்னு நினைக்காம அவள் சிறு வயது முதல் அவர்களது முக்கியதுவம் மற்றும் மதிப்பை சொல்லிகொடுங்கள் அவளின் சுய மரியாதைய் எவ்வளவு முக்கியம் என்று சொல்லுங்கள் ஒருவேளை பொண்ணு கல்யாணம் ஆகி போயிட்டா அவ அவ்வளவுதான் வேற வீட்டு பொண்ணு அவளுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் இல்லாத மாதிரி நடந்துக்காதீங்க எப்பவும் அம்மா அப்பாவோட சப்போர்ட் அந்த பொண்ணுக்கு இருக்கும் அவ கூட நீங்க எப்பவும் இருக்கீங்க அப்படி என்ற நம்பிக்கையை குடுங்க நான் செய்ற இந்த காரியத்துக்கு இந்த ஊரும் இந்த உலகமும் எனக்கு என்ன வேணா பேர் வைக்கட்டும் அத பத்தி எனக்கு கவலை இல்லை ஒரு பெண்ணாய் இருக்கிற என் சுயமரியாதையை காப்பாற்றிக் கொள்வதற்காக நான் இந்த முடிவை எடுத்ததுல எனக்கு எந்த வருத்தமும் இல்லை கடைசியாக ஒரு புன்னகையோடு அவள் குழந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு அவள் அங்கு இருந்து சென்று விட்டாள் இக்கதை ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையில் கொண்டது இன்று நம் உலகில் பெண்கள் அநேக இடங்களில் சுயமரியாதை இழந்து ஊருக்காகவும் உறவுகளுக்காகவும் அவர்களை அவர்களை ஏமாற்றிக் கொண்டு நடைப்பிணமாக தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் இந்த சமுதாயமும் அது போன்ற விஷயங்களை தான் பெண் பிள்ளைகளுக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் திணிக்கிறது நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் ஒரு பெண் அவள் சுயமரியாதையையும் தன்மானத்தையும் காத்துக் கொள்வதற்காக எல்லா விஷயங்களையும் கவனமாக இருக்க வேண்டும் இக்கதை எழுதுகிற நானும் ஒரு பெண் என்பதில் எனக்கு பெருமை 



Rate this content
Log in

Similar tamil story from Inspirational