Priya Jaganath

Inspirational

5.0  

Priya Jaganath

Inspirational

தனிமை ஓர் வரம்

தனிமை ஓர் வரம்

4 mins
133



தனிமை இந்த நிலையை நாம் அனைவரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது உணர்ந்திருப்போம் ஒவ்வொரு தனிமை நிலைக்கு பின்னால் நிச்சயம் ஒரு கசப்பான அனுபவம் இருக்கும் நீங்க யாரும் சந்தோஷத்துல தனிமை தேடுவதில்லை அவர்களுக்கு கிடைத்த அந்த தனிமையில் தான் அந்த கசப்பான நினைவுகள் அவர்கள் நினைவுக்கு வந்து அந்த தனிமையை இன்னும் அதிகமாக பாரமாகி விடுகிறது ஆனால் உண்மையை சொல்லப் போனால் தனிமை ஒரு மனிதனுக்கு கிடைத்த வரம் அதை நமக்கு கடினமாக்குவதும் நம்முடைய கசப்பான நினைவுகள் தான் அதை நாம் எப்படி மேற்கொள்கிறோம் என்பது மிகவும் முக்கியம். அதற்கு முன்பு

தனிமையைப் பற்றி தெரிஞ்சிக்க வேண்டிய முக்கியமான இரண்டு விஷயங்கள் உள்ளன  


1 நம்மை நாமே தனிமையில் வைப்பது


2 மற்றவர்கள் நம்மை தனிமைப்படுத்துவது 


ஒருவர் தனிமையில் இருப்பதற்கு இந்த இரண்டு முக்கியமான காரணங்களாக இருக்கிறது


  முதலில் நம்மை நாமே தனிமைப் படுத்திக் கொள்வதை பற்றி பார்க்கலாம் 


ஒருவர் அவரை சுற்றியுள்ள மற்றவர்களின் நிஜ முகங்களை பார்க்கும் போது இவர்களால் வரும் ஏமாற்றங்களை சந்திக்கும்போதும் அதிகமாக நம்பிக்கை வைத்திருக்கும்  ஒருவர் அவர்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்யும் போது எல்லாவற்றையும் வெறுத்து மற்றவர்களிடமிருந்து அவர்களை அவர்களே தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள் இன்னும் ஒரு சிலர் அவர்கள் அதிகமாக நேசிக்கும் ஒரு நபர் அவர்களை விட்டு நிரந்தரமாக பிரிந்து இருந்தால் அல்லது அவர்களது மரணம் அவர்களை மீள முடியாத சோகத்தை அடைகிறார்கள் காரணமாக எதன் மீது பிடிப்பில்லாமல் யாரிடமும் நெருங்க மனமில்லாமல் தனிமைப் படுத்திக் கொள்கிறார்கள


இரண்டாவது மற்றவர்கள் ஒதுக்கி காயப்படுத்தி தனிமையில் தள்ளி விடுவது 

 

இதற்குக் காரணம் இவர்கள் மற்றவர்களுக்கு பார்வையில் ஏளனமாக தெரியலாம் அவர்களுக்கு முக்கியமில்லாத நபராக தோன்றலாம்  ஒரு சில சமயங்களில் நம்மை சுற்றி இருக்கும் ஒரு சிலர் அவர்கள் தேவைக்கேற்ப நம்மை பயன்படுத்திக் கொண்டு அவர்கள் தேவை முடிந்த பிறகு நம்மை ஒதுக்கி விடுகிறார்கள் நம்மிடமிருந்து அவர்களுக்கு ஒரு பலனும் இல்லை என்று அவர்கள் அறிந்தால் நம் மீது கவனம் செலுத்துவது நிறுத்தி விடுகிறார்கள் இது போன்ற சூழ்நிலைகளை சந்திப்பவர்களுக்கு மிகவும் வேதனைக்கு ஆளாக்கி விடுகிறது அவர்களுக்கு பிடித்தவர்கள் அவர்களை ஒதுக்கி விடுவதை பார்க்கும் போது அவர்களும் அவர் வாழ்க்கையில் எல்லாவற்றையும் வெறுத்து அவர்களை அவர்களே தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள் 

  1. இது போன்ற சூழ்நிலைகளுக்கு முக்கியமான காரணம் அன்பு இங்கு அனைவருக்கும் உண்மையான அன்பு அவர்களின் வாழ்க்கையில் கிடைப்பதில்லை இது போன்ற நிலை காதலிப்பவர்களுக்கு மட்டும் நடப்பதில்லை ஒரு சிலர் குடும்பங்களிலும் நடக்கிறது ஒரு வேலை நம் நிலை தவறும் போது நம்முடைய சொந்தக்காரர்கள் அல்லது நம்முடன் பிறந்தவர்கள் நம்மை ஏளனமாக பார்க்கலாம் அவர்கள் நேரடியாக நம்மை தனிமைப்படுத்தவில்லை என்றாலும் அவர்களின் ஒரு சில செயல்களும் பேச்சுக்களும் நம்மை ஒதுக்கி வைத்து தனிமை படுத்துவது போல் நம்மை உணர வைக்கலாம் இவ்வாறு நம்மை உணர வைப்பவர்கள் நிச்சயம் நமக்கு மிகவும் பிடித்தவர்களாகத்தான் இருப்பார்கள் மிகவும் பிடித்தவர்கள் அவர்கள் நமக்கு மிகவும் முக்கியமானவர்கள் என்று நினைப்பவர்கள் இவ்வாறு செய்வதன் மூலம் நம்மை அவர்கள் தனிமைப்படுத்தும் போது அந்த வேதனைக்கு அளவு இல்லை இதுபோன்ற தனிமை உணர்விலிருந்து மீண்டு வந்த ஒருவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை பற்றி பார்க்கலாம் பிரியா என்ற ஒரு பெண் அவள் வாழ்க்கையில் அவள் குடும்பத்தாரால் அவள் தனிமை நிலைக்கு தள்ளப்படுகிறாள் அவள் குடும்பத்தில் உள்ளவர்கள் அவள் அம்மா அப்பா அவள் கூட பிறந்த சகோதரிகள் இவள் வாழ்க்கை நிலையைப் பற்றியும் அவள் ஏழ்மையில் இருப்பதை பற்றியும் மறைமுகமாக அவளை எப்பொழுதும் காயப்படுத்திக் கொண்டே இருப்பார்கள் அவமானப் படுத்துவது போல் சில சமயங்களில் நடந்து கொள்வார்கள் அவள் மனதளவில் மிகவும் வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள் அவளுக்கு ஆறுதல் சொல்வதற்கும் அரவணைத்துக் கொள்வதற்கும் நண்பர்களும் யாரும் அவளுக்கு கிடையாது காலப்போக்கில் அவள் குடும்பத்தில் உள்ளவர்களை பார்த்து பயந்தால் எங்கே அவர்கள் அவளை இழிவுபடுத்தி காயப்படுத்தி விடுவார்களோ என்று அதனால் அவர்களை பார்ப்பதையோ பேசுவதையோ குறைத்துக் கொண்டால் என்னதான் அவர்களிடம் அதிகமாக பேசாமல் பார்க்காமல் இருந்தாலும் அவள் மனதளவில் வேதனையில் இருந்தால் அவளுக்குள் அதிகமாக தாழ்வு மனப்பான்மை ஏற்பட்டது அதனால் அவளை அவளே தனிமைப்படுத்திக் கொண்டு அவளை ஒரு கூண்டுக்குள் அடைத்துக்கிட்டாள் அந்த தனிமையில் இருந்த நாட்கள் அவளுக்கு அவள் யார் என்று உணர்த்தியது நிறைய விஷயங்களைப் பற்றி அவள் கற்றுக் கொண்டாள் அவள் கற்றுக்கொண்ட விஷயங்கள் அவளுக்கு இருந்த தாழ்வு மனப்பான்மை படிப்படியாக குறைந்தது தன்னம்பிக்கை அதிகரித்தது அவள் வாழ்க்கை முறையை பற்றியும் அவள் ஏழ்மையைப் பற்றியும் இழிவு படுத்தியவர்களை நினைத்து வருந்துவதில் எந்த பலனும் இல்லை என்று அவள் உணர்ந்தால் நம் நிலைமை என்னவாக இருந்தாலும் நாம் அதில் சந்தோஷமாக இருக்கிறோமா என்பது தான் முக்கியம் மற்றவர்களுக்காக வாழ நினைப்பது அவர்களுக்காக வாழ்க்கை மாற்றி அமைத்துக் கொள்வதும் எப்பொழுதும் நிலைக்காது என்பதை அவள் அறிந்து கொண்டாள் அவள் தனிமையில் கிடைத்த தன்னம்பிக்கையால் இந்தப் பதிவை உங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறாள் ஆமாம் நான் தான் அந்த பிரியா இது என்னுடைய வாழ்க்கையில் ஏற்பட்ட அனுபவம் சொல்லப்போனால் என் வாழ்க்கையை மாற்றி அமைத்த தருணம் என்னை அன்று குடும்பத்தில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தாவிட்டால் இன்று என்னால் ஒரு கதை ஆசிரியராக இருந்திருக்க முடியாது அவர்கள் எனக்கு கொடுத்த அந்த தனிமையின் வலி என்று என் வாழ்க்கைக்கான ஒளியாக மாறிவிட்டது இந்தப் பதிவை நான் உங்களிடம் பகிர்ந்து கொள்வதற்காக முக்கியமான காரணம் தனிமையில் இருப்பதால் வரும் வலி என்னவென்று என்னால் உள்ள பூர்வமாக உணர முடியும் அந்த சமயங்களில் ஆறுதலுக்காக நான் நிறைய ஏங்கி இருக்கிறேன் ஆனால் எனக்கு எந்த ஆறுதலும் எங்கேயும் கிடைக்கவில்லை தனிமையின் நிலையை நான் அனுபவிக்க தொடங்கினேன் நான் ஏற்றுக் கொண்டேன் பலனாக எனக்கு தன்னம்பிக்கை தான் அதிகரித்தது அதனால் உங்களுக்கு நான் என்ன சொல்ல வருகிறேன் என்றால் நாம் தனிமையில் இருக்கும் போது யாராவது நமக்கு உதவி செய்வீர்களா என்பதை யோசிப்பதை விட நாம் நமக்கு என்ன செய்யப் போகிறோம் என்ன செய்ய வேண்டும் நம் வாழ்க்கையை மேலும் எப்படி மேம்படுத்தலாம் என்பதைப் பற்றி எல்லாம் யோசித்துப் பார்க்கலாம் வாழ்க்கையை யாரும் எதற்கும் தீர்மானிக்க முடியாது நமக்கு இருக்கும் இந்த ஒரு அழகான வாழ்க்கையை நமக்கு பிடித்த மாதிரி அழகாக மாற்றியமைக்க நம்மால் மட்டும்தான் முடியும் அதில் நாம் கவனம் செலுத்தலாம் யாரும் நம்மோடு இறுதி வரைக்கும் வருவதில்லை அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் ஆனாலும் இவை அனைத்தையும் தனிமையில் இருக்கும்போது செய்வது அவ்வளவு சுலபம் அல்ல ஆனால் நாம் முயற்சி செய்யலாம் நாம் தனிமையில் சோகத்தில் தவிக்கும் போது அதை ஊக்குவிக்கும் வகையில் சோகப்பாடல்களை கேட்பது சோகமான விஷயங்களை பார்ப்பது அதைப்பற்றிய யோசித்துக் கொண்டிருப்பதை தவிர்க்கலாம் அதற்கு மாறாக நம்மை ஊக்குவிக்கும் நல்ல விஷயங்களைப் பற்றி பார்க்கலாம் கேட்கலாம் அதை பற்றி சிந்திக்கலாம் நம் ஆழ் மனதில் நமக்கு இருக்கும் ஆசைகளைப் பற்றி சிந்தித்துப் பார்க்கலாம் நம்முடைய வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எப்படி கொண்டு போகலாம் என்பதைப் பற்றி எல்லாம் ஆராய்ந்து பார்க்கலாம் உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்வதற்கு இவை அனைத்தும் உதவி செய்யும் தன்னம்பிக்கை மட்டும் நமக்கு கிடைத்து விட்டால் நம்மை யாராலும் எதற்கும் விழித்த முடியாது இந்தப் பதிவு உங்களுக்கு நிச்சயம் உபயோகமாக இருக்கும் என்பதை நான் நம்புகிறேன் 


Rate this content
Log in

Similar tamil story from Inspirational