Priya Jaganath

Children Stories Fantasy Inspirational Abstract Drama Classics Tragedy Others Children

4.3  

Priya Jaganath

Children Stories Fantasy Inspirational Abstract Drama Classics Tragedy Others Children

நீதிக் கதை தர்மம்

நீதிக் கதை தர்மம்

6 mins
201


சென்னையில் உள்ள பிரபலமான பிரதான சாலை வழியாக தினமும் லட்சக்கணக்கானோர் கடந்து கொண்டு இருப்பார்கள் அதில் வயதான தோற்றம் கொண்ட 76 வயது கமலா பாட்டி. அந்த வழியாக தான் தினமும் பழங்கள் விற்பதற்காக அவள் செல்வாள் ஆனால் இவன் செல்லும்போது அவளுடைய செயல் அனைவரையும் ஆச்சரியமாக திரும்பி பார்க்க வைக்கும் அப்படி அவள் என்ன செய்வாள் என்றாள் தினமும் அந்த வழியாக பழங்களை விற்பதற்காக செல்லும்போது அந்த சாலையோரம் உள்ள ஒரு டீக்கடையில் சில பிஸ்கட்டுகள் வாங்கி அங்கே உள்ள சில உணவுகளை நாய்களுக்கும் கொடுத்துக்கொண்டே போவாள் இதையே வழக்கமாக செய்து கொண்டிருந்தாள் ஒரு நாள் எப்போதும் போல் கமலா பாட்டி அவள் வீட்டில் இருந்து புறப்பட்டு பழக்கூடை எடுத்துக்கொண்டு அந்த சாலையில் உள்ள அந்த டீக்கடைக்குள் பிஸ்கட்டுகள் வாங்குவதற்காக செல்கிறாள் நீண்ட நாட்களாக கமலா பாட்டி அதே கடையில் பிஸ்கட்டுகளை வாங்குவது வழக்கமாக கொண்டிருந்தாள் அதனால் அந்த கடையின் உரிமையாளர் பாட்டியிடம் 


என்ன பாட்டி வியாபாரத்துக்கு போறீங்களா ஒரு நாளைக்கு எவ்வளவு பாட்டி வருமானம் வரும் என்று எதார்த்தமாக கேட்கிறான் 

அதற்கு அந்த பாட்டி சிறிது புன்னகையுடன் அதுவாப்பா ஒரு 300 ரூபாய் கிடைக்கும் பா அப்படி என்று சொல்கிறாள் அதைக் கேட்ட உடன் அந்தக் கடையின் உரிமையாளருக்கு மிகவும் ஆச்சரியம் 

ஏன் என்றால் இவர்கள் சம்பாதிப்பதும் 300 ரூபா தான் ஆனால் தினமும் அந்த நாய்களுக்காக இவ்வளவு செலவு செய்கிறாள் என்று நினைத்தான் அதனால் உடனே கமலா பாட்டியை பார்த்து என்ன பாட்டி உங்களுக்கு வயசு ஆயிடுச்சு ரூ.300 வருமானத்தில் பாதி இந்த நாய்களுக்கு செலவு செய்றீங்க எதுக்கு பாட்டி வேஸ்ட்டா இப்படி பண்றீங்க என்று கேட்கிறான் 


அதற்கு கமலா பாட்டி முகத்தை பாவமாக வைத்துக் கொண்டு ஐயோ இல்லப்பா அதுவும் ஒரு ஜீவன் தானப்பா நமக்கு வாய் இருக்கு பசிக்குதுன்னு கேட்போம் அதுக்கு அப்படியா ஏதோ நம்மால் முடிந்த ஒரு உதவி என்று சொல்லிவிட்டு பிஸ்கட்டுகளை எடுத்து கொண்டு சென்றுவிட்டாள் 


ஆனால் பாட்டி பேசியது அந்த கடையின் உரிமையாளர் எதுவும் பெரியதாக பொருட்படுத்திக் கொள்ளவில்லை பிறகு நாட்கள் அப்படியே நகர்ந்தன இதையே கமலா பாட்டி வழக்கமாக செய்து கொண்டிருந்தாள் ஆனால் திடீரென்று மூன்று நாட்களாக கமலா பாட்டி அங்கே காணவில்லை தினமும் வழக்கமாக வந்து கொண்டு இருந்த கமலா பாட்டியை மூன்று நாட்களாக பார்க்காமல் இருந்ததால் அந்தக் கடையின் உரிமையாளருக்கு என்ன ஆனது என்று தெரிந்து கொள்ள விரும்பினார் கமலா பாட்டியின் கூட வியாபாரம் செய்பவர்களில் ஓருவரிடம் அவர் விசாரிக்கிறார்


 எங்கே உங்க கூட இருந்த அந்த கமலா பாட்டி ரெண்டு மூணு நாட்களாக நான் அவங்கள பார்க்கல என்று எதார்த்தமாக கேட்கிறான் அவர்கள் அதுவாப்பா கமலா பாட்டிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை அதான் அவங்க வீட்டிலேயே இருக்காங்க அப்படி என்று சொல்லிட்டு அவங்க வேலையை பார்க்க சென்று விடுகிறார்கள் 


அப்படியே ஓரிரு நாட்கள் சென்றது அந்த சாலையில் உள்ள நாய்களும் இல்லாமல் இருப்பதை அந்த கடையின் உரிமையாளர் கவனிக்க தொடங்கினார் அதனால் கமலா பாட்டிக்கு என்ன ஆனது என்று அவள் வீட்டை கண்டுபிடித்து அவளை சென்று பார்க்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார் அந்த கடை உரிமையாளருக்கு கமலா பாட்டி வசிக்கும் பகுதி எங்கே இருக்கிறது என்று தெரியும் ஆனால் சரியாக அவள் வீடு இருக்கும் இடம் மட்டும் தெரியாது அதனால் அவள் வசிக்கும் பகுதிக்கு சென்று அங்கே உள்ள சிலரை விசாரிக்கிறார் இங்கே பழங்கள் விற்கும் கமலா பாட்டி வீடு எங்க இருக்கு என்று உங்களுக்கு தெரியுமா என்று கேட்கிறார் அதற்கு அவர்களும் உள்ளே நேராக நடந்து சென்று இடது பக்கமாக திரும்பி நேர உள்ளே நடந்து கொண்டே போங்க இந்த தெருவில் இருக்கும் கடைசி குடிசை வீடு கமலா பாட்டியின் வீடு என்று சொல்கிறார்கள் இதேபோன்று அந்த கடையின் உரிமையாளரும் அவள் வீட்டை நோக்கி நடந்து கொண்டே செல்கிறான் அவர்கள் சொன்னதைப் போல் அவள் வீட்டிற்கு அருகில் சென்றவுடன் அவருக்கு மிகவும் ஆச்சரியம் ஏனென்றால் அங்கே அந்த சாலையில் காணாமல் போன நாய்கள் எல்லாம் இங்கே கமலா பாட்டி வீட்டிற்கு முன்பாக உட்கார்ந்து கொண்டிருந்தது அதைப் பார்த்துக் கொண்டே அவர் பாட்டியின் வீட்டிற்குள் செல்கிறார் பாட்டி படுக்கையில் படுத்து கொண்டிருக்கிறார் அவள் அருகில் பக்கத்து வீட்டில் வசிப்பவர்களும் ஓர் இரண்டு பேர்கள் அங்கே இருந்தார்கள் அவர்களைப் பார்த்து கடையின் உரிமையாளர் அவர்களைப் பார்த்து கமலா பாட்டிக்கு என்ன ஆனது என்று வருத்தத்துடன் கேட்டார் அதற்கு அவர்கள் என்னங்க சொல்றது இந்த பாட்டி கொஞ்சம் கூட ஓய்வில்லாமல் ஓடிக்கிட்டே இருப்பாங்க அதான் இப்படியானது சரியா சாப்பிட கூட மாட்டாங்க அதான் எல்லாம் சேர்த்து ஒரே நேரம் வந்துடுச்சு என்று வருத்தமாக சொல்கிறார்கள் அந்த கடையின் உரிமையாளர் அவர்கள் சொல்வதை எல்லாம் கேட்டுக் கொண்டே அந்த பாட்டியின் வீட்டை சுற்றி பார்க்கிற ஒரே ஏழ்மை நிலை காணப்பட்டது சொல்லும் அளவில் அந்த வீட்டிற்குள் ஒன்றும் இல்லை மனிதர்களைப் போல் வீட்டிற்குள் பூனைகளும் நாய்களும் அங்கே அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தது அனைத்தையும் பார்த்துக் கொண்டே கடையின் உரிமையாளர் அந்த பக்கத்து வீட்டு உரிமையாளர்களிடம் கேட்கிறார் 


இந்தப் பாட்டிற்கு பிள்ளைகள் சொந்தக்காரர்கள் யாரும் இல்லையா என்று அதற்கு அவர்கள் எல்லாம் இருக்கிறார்கள் பாட்டி ரொம்ப கஷ்டப்பட்டு அவர்கள் பிள்ளைகளை படிக்க வைத்து ஆளாக்கினார்கள் ஆனால் அவர்களுக்கு இறக்கை முளைத்த உடனே பாட்டி அவர்களுக்கு பாரம் என தெரிந்தது அதனால் பாட்டி அவர்களுக்கு பாரமாக இருக்கக் கூடாது என்று தனியாக வந்து இங்கே பல வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் அதற்குள் கமலா பாட்டி தூங்கிக் கொண்டிருந்தவள் முழித்துக் கொண்டாள் அந்தக் கடையின் உரிமையாளரை பார்த்து சிரிப்புடன் நீ எங்கப்பா இங்க அப்படி என்று கேட்கிறாள் அந்தக் கடை உரிமையாளர் உங்களைப் பார்க்கத்தான் பாட்டி வந்தேன் என்று சொல்கிறார் அந்த முடியாத கூட கமலா பாட்டி அந்த கடையின் உரிமையாளரை பார்த்து ஏம்பா முடிஞ்சா எனக்கு ஒரு உதவி பண்ணுப்பா இன்று தாழ்மை உடன் கேட்கிறாள் அதற்கு அவர் சொல்லுங்கள் பாட்டி என்னால் முடிந்தது நான் செய்கிறேன் என்று சொல்கிறான் உடனே கமலா பாட்டி அந்த சாலையில இருக்கிற நாய்களுக்கு உன்னால் முடிஞ்சா சாப்பிட ஏதாச்சும் வாங்கி கொடுப்பா என்னால அதுங்களுக்கு எதுவுமே கொடுக்க முடியல வாய் இல்லாத ஜீவன் பா அப்படின்னு கேக்குறாங்க அதற்கு அந்த கடையின் உரிமையாளர் சிரித்துக்கொண்டே எங்க பாட்டி நீங்க வராம இருந்திங்களோ அப்பத்தில் இருந்து அந்த நாய்களே அங்க இல்ல இங்க வந்து பார்த்தா எல்லா நாய்களும் இங்க உங்க வீட்டு வாசல்ல உங்களுக்காக காத்துகிட்டு இருக்கு அதைக் கேட்டதும் கமலா பாட்டி சந்தோஷத்தோட மெல்லமாக எழுந்து உட்கார்ந்து அவரைப் பார்த்து பாத்தியா அப்பா மனுஷங்க கூட நாம செய்ற தர்மத்தையும் உதவியும் மறந்துவிடுறாங்க ஆனால் ஜீவராசிகள் நாம் அவைகளுக்கு சிறியதாக ஏதாவது செய்தாலும் கூட நம்மை அவைகள் வாழ்நாள் முழுவதும் மறப்பதில்லை நன்றி உணர்வோடு எப்போதும் இருக்கும் என்று சொல்கிறாள் பாட்டி இதுபோன்று பேசியதே கேட்ட கடையின் உரிமையாளருக்கு மனதில் ஏதோ ஒரு மாதிரியானது கமலா பாட்டியிடம் நான் போயிட்டு வருகிறேன் பாட்டி என்று சொல்லிவிட்டு செல்கிறார் அன்னைக்கு முழுவதும் அவருக்கு அதே யோசனையாகவே இருந்தான் இரவு முழுவதும் தூங்காமல் அதைப்பற்றி யோசித்துக் கொண்டிருந்தார் ஒரு நாள் அப்படியே போனது 


அடுத்த நாள் உரிமையாளர் பாட்டி பார்ப்பதற்காக செல்கிறார் அவருடனே கூட சில பிஸ்கட்டுகளை பார்ட்டிக்காக சில உணவுகளையும் வாங்கிக் கொண்டு செல்கிறார் அங்கே அமைதியாக படுத்துக் கொண்டிருக்கும் நாய்களுக்கு பிஸ்கட்டுகளை போடுகிறார் அந்த பிஸ்கட்டுகளை நாய்கள் சீண்ட கூட வில்லை அவர் நீண்ட நேரம் முயற்சி செய்கிறார் நாய்கள் பிஸ்கட்டை சாப்பிட வைப்பதற்காக என்ன செய்தாலும் அந்த நாய்கள் அதை பார்க்க கூடவில்லை ஒன்றும் புரியவில்லை அதனால் உள்ளே சென்று கமலா பாட்டியை பார்க்கிறார் அங்கே கமலா பாட்டியின் உடல்நிலை மிகவும் மோசமாகி கொண்டே இருந்தது பார்த்து கடையின் உரிமையாளருக்கு மிகவும் வருத்தமானது அதனால் அவர்கள் பக்கத்து வீட்டாரிடம் கேட்கிறார் இவர்களுடைய பிள்ளைகள் எங்கே இருக்கிறார்கள் அவர்களை தொடர்பு கொள்ள முடிகிறதா ஏன் அவர்களுக்கு இன்னும் நீங்கள் இதைப்பற்றி சொல்லவில்லை என்று கேட்கிறார் அதற்கு அவர்கள் நேற்று அவர்களை தொடர்பு கொண்டோம் ஆனால் அவர்கள் எங்களுக்கு எதும் தெரியாது நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள் பணம் வேண்டும் என்றால் நாங்கள் தருகிறோம் என்று சொன்னார்கள் வெளிநாட்டில் இருப்பதால் அவர்களுக்கு அவ்வளவு சுலபமாக இங்கே வருவது காரியம் இல்லை என்று சொன்னார்கள் இதைக் கேட்டவுடன் அவருக்கு மிகவும் கோபம் என்ன இந்த மனிதர்கள் இப்படி இருக்கிறார்கள் என்று வருத்தம் அப்படியே அந்த நாய்களை பார்க்கிறார் அவை இந்தப் பாட்டி செய்த நன்றி உணர்வை காட்டுவதற்காக இந்த பாட்டியின் கடைசி கால கட்டத்தில் அவர்களுடன் இருந்து அவள் துக்கத்தை பங்கு கொண்டிருக்கின்றன என்று நினைத்துக் கொண்டு அங்கே இருந்து சென்று விட்டார் இந்த விஷயம் அவருக்கு மிகவும் ஆழ்மனதை பாதித்துவிட்டது கடவுளிடம் ஜெபிக்கிறார் இப்படி நல்லவர்களுக்கு ஏன் கடவுளே நீங்கள் சோதிக்கிறீர்கள் இதுபோன்று கெட்ட ஆட்களை இன்னும் ஏன் இப்படி வைத்திருக்கிறீர்கள் என்று புலம்பிக் கொண்டே இருந்தார் அன்றைய நாள் முழுவதும் மறுநாள் கடையை திறப்பதற்காக அவர் செல்கிறார் அங்கே அவருக்கு காத்திருந்தது அதிர்ச்சியான விஷயம் பாட்டி இறந்துவிட்டார் என்று அவர் கடையில் வேலை செய்யும் ஒருவன் சொல்கிறதை கேட்டு மனம் உடைந்து உடனடியாக அவசர அவசரமாக அவள் வீட்டை நோக்கி ஓடுகிறார் அவர் அங்கே சென்று பார்த்தல் 


கமலா பாட்டி சடலம் அவள் வீட்டிற்கு முன்பாக வைக்கப்பட்டிருந்தது அங்கே அவளை சுற்றி சில பேர் நின்று கொண்டிருந்தார்கள் அவர்கள் அனைவரும் அவர் வீட்டில் பக்கத்தில் இருப்பவர்களும் அவளுக்குத் தெரிந்தவர்களும் மட்டுமே அவள் சொந்த ரத்த சொந்தம் என்று யாரும் வரவில்லை ஆனால் அவரைச் சுற்றி நிறைய நாய்களும் பூனைகளும் அங்கே இருந்தன கமலா பாட்டி இறந்ததை குறித்து அந்த ஜீவராசிகள் வருத்தப்படுவது என்னால் அங்கு உணர முடிந்தது மனதில் அதிகமாக வேதனையாக இருந்தது இறுதி சடங்கு முடியும் வரை அவர் எங்கே இருந்தார் நாய்களும் பூனைகளும் கமலா பாட்டியை எழுந்துக்க சொல்லுமாறாக அங்கும் கத்திக் கொண்டே அவரை சுற்றி சுற்றி திரிந்தன இதை பார்த்துக் கொண்டிருந்த அனைவருக்கும் கண்கள் கலங்கியது ஒரு வழியாக எல்லா சடங்குகளும் முடிந்தவுடன் அவரவர் வீட்டிற்கு வந்து விடுகிறார் அவர் வீட்டிற்கு வந்து அவரால் நிம்மதியாக இருக்க முடியவில்லை ஏனென்றால் அந்தப் பாட்டி அவர் வாழ்க்கைக்கு ஒரு நல்ல பாடத்தை கற்றுக் கொடுத்து விட்டு சென்று விட்டால் என்று அவர் நினைத்தார் பாட்டியை பார்ப்பதற்கு முன்பாக தர்மம் என்றால் மனிதர்களுக்கு மட்டும் செய்வது என்று அவர் நினைத்தார் பாட்டி தெள்ளத் தெளிவாக அவருக்கு புரியவைத்துவிட்டால் 


தர்மம் என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல உயிருள்ள எந்த உயிரினத்திற்கும் நம்மால் முடிந்தால் தர்மம் செய்ய வேண்டும் ஏன் மனிதர்களை விட ஜீவன்கள் நாம் செய்யும் தர்மங்களை என்றும் மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டு நமக்கு எப்பொழுதும் நன்றி உணர்வை காட்டுகிறது என்று தெள்ளத் தெளிவாக அவர் புரிந்து கொண்டார் அதனால் பாட்டி செய்தவைகளை அவர் பின்பற்ற நினைத்தார் அவரும் கமலா பாட்டியை போல் தர்மங்களை செய்வதற்காக ஆசைப்பட்டார் அதுவும் வாயில்லாத ஜீவன்களுக்கு அதிகமாக செய்ய நினைத்தார் அதனால் கமலா பாட்டி செய்ததைப் போல் தினமு அவரால் முடிந்த அனைத்தையும் அவர் செய்தார் உணவுகளை கொடுத்தார் இந்த அளவிற்கு நல்ல பார்த்துக் கொண்டார் இப்போ வரைக்கும் பார்த்துக் கொண்டே இருக்கிறார் அவர் மூச்சிருக்கும் வரை அவர் செய்யப் போகிறார் என்று குறிக்கோளாக இருந்தார் இக்கதையில் இருந்து நாம் தர்மம் செய்வது பற்றி கற்றுக் கொள்ளலாம் 


அனேகர் தர்மம் என்பது மனிதர்களுக்கு மனிதர்கள் செய்யும் உதவியது தான் தர்மம் என்று நினைக்கிறோம் கமலா பாட்டியின் கதையிலிருந்து நாம் என்ன கற்றுக் கொள்ளலாம் என்றால் தர்மம் என்பது உயிருள்ள எந்த ஜீவன்களுக்கும் நம்மால் முடிந்தால் அவைகளுக்கு நாம் தர்மம் செய்ய வேண்டும் அவைகள் நிச்சயம் நன்றி உணர்வோடு நமக்கு நன்றியாக எப்பொழுதும் இருக்கும், 


தர்மம் செய்வதர்க்கு தகுதி தேவை இல்லை மனம் இருந்தால் போதும் 

தர்மத்தை பெற்றுக்கொள்வதற்க்கு தராதரம் தேவை இல்லை தேவை இருந்தால் போதும்


Rate this content
Log in