இருண்டது உலகம்
இருண்டது உலகம்
சென்னையில் சுட்டெரிக்கும் வெயிலில் ரகு கையில் ரெஸ்யூம் எடுத்துக்கொண்டு வேலை தேடுவதற்காக அங்குள்ள தொழிற்சாலை பகுதியில் ஒவ்வொரு கம்பெனியாக ஏரி இறங்கி கொண்டிருந்தான் அப்படியே மணி மதியம் ஒன்றானது அதனால் அங்குள்ள கம்பெனிகளில் லஞ்ச் பிரேக் என்பதால் அனைவரையும் சாப்பிட்டு வருமாறு அனுப்பிவிட்டார்கள் அங்குள்ள இன்டர்வியூ அட்டென்ட் செய்ய வந்தவர்கள் அனைவரும் கேண்டின்கு சென்று விட்டார்கள் ஆனால் ரகு அங்கேயே உட்கார்ந்து கொண்டிருந்தான் இதை நீண்ட நேரம் கவனித்துக் கொண்டிருந்த அந்த கம்பெனியில் வேலை புரியும் செக்யூரிட்டி ரகுவரிடம் போய் என்னப்பா இங்கே உட்கார்ந்து கொண்டு இருக்கிறாய், சாப்பிட போலையா இன்டர்வியூ ஸ்டார்ட் ஆகுறதுக்கு இன்னும் முக்க மணி நேரம் இருக்குப்பா என்று சொன்னதும் ரகுவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை ஏனென்றால் ரகுவின் பாக்கெட்டில் வெறும் 50 ரூபாய் மட்டுமே இருந்தது அந்த 50 ரூபா அவன் பஸ்ஸிற்காக வைத்துக் கொண்டிருந்தான் அதனால் ரகு அந்த செக்யூரிட்டி இடம் இல்ல அண்ணா நான் வரும்போதுதான் சாப்பிட்டு வந்தேன் எனக்கு பசி இல்லை சொல்லிவிட்டு அவன் அங்கேயே உட்கார்ந்து கொள்கிறான் வெளியே அவன் அப்படி சொல்லிவிட்டாலும் உள்ளுக்குள்ள அவனுக்கு அதிகமான பசி சாப்பிடாமல் வெயிலில் அவன் அலைந்து திரிந்த கலைப்பு மனதளவிலும் உடலளவிலும் அதிகமான சோர்வு ஆனாலும் அவன் நம்பிக்கையோடு அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தான் எப்படியாவது இந்த வேலை அவனுக்கு கிடைத்து விட வேண்டும் என்று எண்ணத்தில் அதேபோல் அங்கே லன்ச் முடித்துவிட்டு அனைவரும் வந்த பிறகு இன்டர்வியூ தொடர்ந்தார்கள் ரகுவும் அவனால் முடிந்த அளவுக்கு சிறப்பாக கொடுத்து தான் அவர்களும் நீங்கள் இப்பொழுது போகலாம் உங்களை நாங்களே கூப்பிடுவோம் என்று சொன்னார்கள் இந்த வார்த்தை கேட்ட உடனே ரகுவிற்கு அதிகமா வேதனையானது ஏனென்றால் அவன் சென்ற அனைத்து இன்டர்வியிலும் இதே தான் அவர்கள் சொல்வார்கள் இதை கேட்டு கேட்டு அவனுக்கு அலுத்து போய்விட்டது ஆனாலும் ஏதோ ஒரு நம்பிக்கையில் மாற்றம் வந்து விடாதா என்று நினைத்துக் கொண்டே பஸ்ஸை பிடிப்பதற்காக நடந்து கொண்டு இருந்தான்
ரகுவின் வாழ்க்கை
ரகுவை பற்றி சொல்ல வேண்டும் என்றால் எதனால் அவனுக்கு இந்த நிலைமை என்று பார்க்கலாம் ரகுவிற்கு விதவை அம்மா அவன் அப்பா ரகு சின்ன பிள்ளையாக இருந்த பொழுது இறந்து விட்டார் அவன் அம்மா அவனை மிகவும் கஷ்டப்பட்டு படிக்க வைத்து வளர்த்தால் அவள் பட்ட கஷ்டம் வீண் போகாத அளவுக்கு ரகுவும் நல்ல மதிப்பெண்களோடு படித்து முடித்து விட்டான் ஆனால் அவன் இருக்கும் கிராமத்தில் வேலை வாய்ப்புகள் அவ்வளவாக இல்லாததினால் சென்னைக்கு வேலை தேடி இங்கே வந்திருக்கிறான் ஆனால் அவன் எதிர்பார்த்ததைப் போல் இந்த சென்னையும் அவனுக்கு ஏமாற்றத்தை தான் தந்தது சின்ன வயதிலிருந்தே ஏமாற்றத்தையும் கஷ்டங்களையும் அனுபவித்து வளர்ந்தவன் தான் ரகு ஆனாலும் அவன் அம்மா சொல்லும் வார்த்தையை அவன் எப்போதும் மறப்பதில்லை கடவுள் எப்பொழுதும் நம்மளை கைவிட மாட்டார் நம்முடைய வாழ்க்கை நிச்சயம் மாற்றுவார் இதை மட்டும் தான் ரகு எப்பொழுதும் மனதிற்குள் நினைத்துக் கொண்டே இருப்பான் எவ்வளவு கஷ்டங்களும் துயரங்களும் வந்தாலும் நல்ல வேலை கிடைக்கும் வரை அவனே அவன் பார்த்துக் கொள்வதற்காக அவன் வசிக்கும் இடத்திற்கு அருகிலே ஒரு ஹோட்டலில் பார்ட் டைம் வேலையை பார்த்துக் கொள்கிறான் அதில் அவன் சம்பாதிக்கும் காசையும் அவன் அம்மாவுக்கு கொஞ்சத்தை கொடுத்துவிட்டு மிச்சத்தை அவன் வைத்து அப்படியே ஒரு நல்ல வேலை கிடைத்து விடாதா அவன் அம்மாவை நல்லபடியாக வாழ வைக்க முடியாதா என்று அலைந்து திரிந்து தேடிக் கொண்டே இருக்கிறான் இப்பொழுது கூட பார்ட் டைம் வேலை செய்வதற்காகத் தான் ரகு போய்க் கொண்டிருக்கிறான் ஒரு வழியாக அந்த ஹோட்டலுக்கு செல்கிறாள் வேலை பார்ப்பதற்காக அங்கே இருக்கும் முதலாளி ரகுவை பார்த்து என்னப்பா இன்னைக்கு லேட்டா வந்திருக்க அதுவும் களைப்பா இருக்க என்று கேட்கிறார் அதுவா சார் இன்னிக்கு ஒரு இன்டர்வியூ போய் அட்டென்ட் பண்ணிட்டு வந்தேன் சார் என்று தாழ்மையுடன் சொல்கிறான் சரிப்பா போய் வேலைய பாரு என்று அவர் சொல்லிவிட்டு அவர் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் ரகுவும் உள்ளே சென்று உடையை மாற்றிக்கொண்டு அவன் வேலை பார்க்கத் தொடங்கி விட்டான் அங்கே அவன் வெயிட்டர் வேலை செய்து கொண்டிருந்தார் ஏற்கனவே ரகு பசியாக களைப்பாக இருந்ததால் அவனுக்கு மிக சோர்வு ஏற்பட்டிருந்தது அதையும் தாங்கிக் கொண்டே அப்படியே அங்கு இருக்கும் வேலைகளை செய்து கொண்டே இருந்தார் அந்த நாள் அப்படியே முடிந்தது ரகு ஓட்டலில் வேலை செய்வதால் அவன் அங்கே சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்து விடுவான் அன்னைக்கு தினம் முழுதும் மிகவும் அலைந்து திரிந்ததால் எப்போதையும் விட இன்று ரகு அதிகமாக சோர்வாக இருந்தான் அதனால் அவன் ரூமிற்கு வந்த உடனே மொட்டை மாடிக்கு சென்று படுத்துக் சொல்கிறான் அவன் வாழ்க்கை மாறிவிடாதா இப்படியே போய் விடுமோ என்று ஏக்கத்தோடு அந்த வானத்தைப் பார்த்து கடவுளிடம் பேசுகிறார் கடவுளே இன்னும் எத்தனை நாள் தான் நானும் என் அம்மாவும் இவ்வளவு கஷ்டப்படணும் நீங்க எங்கள பாத்துட்டு தானே இருக்கீங்க ரொம்ப கஷ்டமா இருக்கு கடவுளே எப்படி ஆச்சு எனக்கு ஒரு நல்ல வேலையை கொடுங்க நானும் என் அம்மாவும் உங்கள மட்டும் தான் நம்பிகிட்டு இருக்கோம் இப்பயும் நீங்க நிச்சயமா எங்க வாழ்க்கை மாத்துவிங்கன்னு நான் முழுமையா நான் நம்புறேன் கடவுளே அப்படின்னு கடவுளிடம் அழுது கொண்டே அன்றைய நாள் உறங்கி விடுகிறான் இப்படியே நாட்களும் நகர்ந்தன தினமும் வேலையை தேடுவதும் பார்ட்டையும் வேலைக்கு சென்று வேலை பார்ப்பதும் மொட்டை மாடிக்கு வந்து படுத்துக்கொண்டு கடவுளிடம் புலம்புவதும் என இப்படியே போய்க்கொண்டிருந்தது ரகுவின் நாட்கள்
ரகுவின் வாழ்க்கை இருண்டது
திடீரென்று ஒரு நாள் ரகுவிற்கு உலகமே இருண்டு போகும் அளவிற்கு ரகுவின் அம்மாவிற்கு ஆக்சிடென்ட் ஆகிவிட்டது அதனால் நீ ஊருக்கு சீக்கிரம் வா என்று அழைப்பு வருகிறது இதைக் கேட்ட உடனே ரகுவிற்கு தலையில் இடியே விழுந்தது போல் இருந்தது அதனால் உடனடியாக அவன் பார்த்தேன் வேலை பார்த்து இருக்கும் அந்த முதலாளியிடம் சொல்லிவிட்டு அவசர அவசரமாக கிளம்புகிறார் அவரும் கையில் சிறிது பணமும் கொடுத்து அனுப்புகிறார் ரகு பதட்டத்துடன் கோயம்பேட்டில் உள்ள அவன் ஊருக்கு செல்லும் பஸ்ஸில் ஏறி உட்கார்ந்து கொள்கிறான் அவன் உறவினர்களுக்கு போன் செய்து விசாரிக்கிறான் அவன் அம்மாவின் உடல் நலத்தை குறித்து ஆனால் அவர்கள் எதையும் தெளிவாக சொல்லாமல் நீ சீக்கிரம் வா அதுல ஒன்னும் இல்ல அது போன்று சூட்சமாகவே பதில் சொல்கிறார்கள் இதை கேட்ட ரகுவிற்கு மனதில் எதுவும் சரியாக படவில்லை அவன் அம்மாவிற்கு ஏதோ ஆகிவிட்டது என்று அவன் மனம் சொல்லிக் கொண்டே இருந்தது ஆனாலும் அவனுக்குள் அவன் சொல்கிறான் அம்மா ஒன்றும் ஆகாது அம்மாவிற்கு எதுவும் இல்லை என்று அவனை அவனே சமாதானப்படுத்திக் கொள்கிறான் ஆனாலும் அவன் தொடர்ந்து ஊரில் உள்ள நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் கால் செய்து கொண்டே இருக்கிறான் அவர்களும் கடைசிவரை அவனுக்கு சரியான பதிலை எதுவும் சொல்லவில்லை அவன் அம்மாவிடம் பேச வேண்டும் என்று சொன்னாலும் கூட அவள் அம்மாவிடம் இப்போதைக்கு பேச முடியாது அவர்கள் உள்ளே இருக்கிறார்கள் நீ எப்போது வருகிறாய் சீக்கிரம் வா என்று மட்டும் சொல்லிவிட்டு போனை கட் செய்கிறார்கள் ஒரு வழியாக பயணத்திற்கு பிறகு அவன் ஊர் பஸ் ஸ்டாப்பில் இறங்குக
ிறான அவர் பெரியப்பாவிற்கு போன் செய்து கேட்கிறான் அம்மா எங்கே இருக்கிறார் இப்போ என்று அவர் அங்கே உள்ள பெரிய அரசு மருத்துவமனைக்கு வரும்படி சொல்கிறார் இவனும் வேகவேகமாக அங்கே ஓடுகிறான் அங்கே சென்று விட்டு அவர்களுக்கு கால் செய்து மறுபடியும் கேட்கிறான் நான் இங்கே ஹாஸ்பிடல் உள்ளே வந்து விட்டேன் எந்த பிரிவிற்கு நான் வரவேண்டும் என்று ஆனால் அவர்கள் நீ ஹாஸ்பிடலுக்கு பின்புறம் வருமாறு அவர்கள் சொல்கிறார்கள் அவனும் மறுபடியும் ஹாஸ்பிடலுக்கு பின்புறம் ஓடுகிறான் அங்கே போனால் ரகுவின் நண்பர்களும் ஊர்காரர்களும் சொந்தக்காரர்களும் அங்கே நின்று கொண்டிருந்தார்கள் எனக்கு ஒன்றும் புரியவில்லை ஏன் இவ்வளவு பேர் அங்கே நிற்கிறார்கள் என்று நான் அருகில் செல்கிறேன் ஆனாலும் என் மனம் அதிகமாக வலித்தது என் அம்மாவிற்கு ஏதோ ஆகிவிட்டது என்று மறுபடி மறுபடி என் மனதிற்குள் தோன்றி கொண்டே இருக்கிறது அவர்கள் அருகில் சென்று எங்கே என் அம்மா என்று கேட்டான் அதற்கு அவர்கள் நின்று கொண்டிருந்த பின்புறம் இருக்கும் அறையைக் காட்டினார்கள் நானும் அதை எட்டிப் பார்த்தேன் பார்த்தால் அது ஒரு பிணவரை ரகுவிற்கு அதை பார்த்தவுடன் இதயமே வெடித்து விட்டது அவனால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை பைத்தியம் பிடித்தது போல அவன் அவர்களை கேட்கிறான் எங்கே என் அம்மா ஏன் இந்த அறையை காட்டுகிறீர்கள் என் அம்மாவிடம் என்னை கூட்டி போங்கள் என்று புலம்பிக்கொண்டே அழுகிறான் அவன் அம்மாவை பிணவறையில் இருந்து அங்கே வேலை பார்ப்பவர்கள் வெளியில் ஸ்ட்ரக்சரில் எடுத்துக் கொண்டு வருகிறார்கள் அவன் அம்மாவிற்கு முழுவதும் பிரேத பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது அதனால் வெள்ளை துணியால் முழுவதும் சுற்றி மூடப்பட்டிருந்தது அதைப் பார்த்து கதறி அழுது கொண்டே அவன் உறவினர்களையும் ஊர்காரர்களையும் பார்த்து ரகு கேட்கிறார் உங்களை நம்பி தானே என் அம்மாவை நான் விட்டுப் போனேன் இப்படி ஆகிவிட்டீர்களே நானும் என் அம்மாவும் என்ன பாவம் செய்தோம் அந்த கடவுளுக்கு கருணையே இல்லையா எனக்கு நீ இருந்தது என் அம்மா தானே என் அம்மாவே என்கிட்டே இருந்து படிச்சிக்கிட்டே நீ இன்னும் என்னை எவ்வளவு சோதிக்க போற இப்ப நான் என்ன பண்ணுவேன் எனக்காக யாரு இருக்கா இந்த உலகத்துல அப்படின்னு அவன் கத்திகிட்டே புலம்பிக்கொண்டே அழுதுகிட்டே இருந்தான் இதைப் பார்த்த அங்கே இருந்த அனைவருக்கும் மனசு உடைஞ்சு போச்சு ஒரு மகன் அவன் தாயின் இறப்பை பார்த்து கதறும் காட்சி இந்த உலகத்தில் யாருக்கும் அதை பார்க்கும் வாய்ப்பை கூட கடவுள் கொடுக்கக் கூடாது என்று அனைவரும் நினைத்துக் கொண்டார்கள் அவன் அம்மாவின் இறுதி சடங்குகளுக்கு அவன் உறவினர்களும் ஊர் காரர்களும் ரகுவிற்கு துணையாக நின்றார்கள் ஆனாலும் ரகு சுயநினைவையை இழந்து அவனே அவன் மறந்து அவன் அம்மாவின் கால் அருகிலேயே உட்கார்ந்து அழுது கொண்டே இருந்தான் சின்ன பிள்ளையைப் போல் இறுதி நிமிடங்கள் வந்தது அவன் அம்மாவை அடக்கம் செய்வதற்காக ஆனால் ரகு அதற்கு சுலபமாக ஒத்துழைக்கவில்லை அவன் அவன் அம்மாவை இறுக்கி கட்டி அணைத்துக் கொண்டான் ஆனாலும் அவன் ஊர் காரர்களும் உறவினர்களும் அவனை சமாதானம் செய்து அவன் அம்மாவின் இறுதி சடங்கை அவர்களே முடித்து வைக்கிறார்கள் அவனும் அவன் அம்மாவும் இருந்த வீட்டில் அவன் அப்படியே படுத்துக்கொண்டு அழுது கொண்டே இருந்தான் ஓரிரு நாட்கள். இதைப் பார்த்த ஊர்க்காரர்கள் ஒரு சிலர் ரகுவிடம் வந்து ஆறுதல் சொல்வதற்காக பேசுகிறார்கள் நீ இவ்வளவு அழுகிறாய் உன் கஷ்டம் எங்களுக்கு நல்ல புரிகிறது உன் அம்மாவுடைய ஆசை நீ நல்ல வேலைக்கு சென்று நல்ல நிலைமைக்கு வருவது தான் அதற்காக அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டாங்க தெரியுமா உனக்கு தெரியாதது ஒன்னும் இல்ல அவங்க இருக்குறதுக்கு கடைசி நிமிடங்கள் கூட உன் பேரை சொல்லிக்கிட்டே தான் அவங்க இறந்துட்டாங்களா ஹாஸ்பிடல்ல சொன்னாங்க அதுக்கு ரகு என் அம்மாக்கு என்ன ஆச்சு என்று அழத் தொடங்குகிறான் அதற்கு அவர்கள் அவன் அம்மவிற்கு ஏன் அப்படியானது என்று சொல்கிறார்கள் ரகுவின் அம்மா கொஞ்ச நாளாகவே ரகுவிற்காக நல்ல உடைகள் வாங்க வேண்டும் என்று தவித்துக் கொண்டே இருந்ததாக அவர் வீட்டு பக்கத்து வீட்டாரிடம் கேட்டிருக்கிறாள் அவளுக்கு மரம் வெட்டும் வேலை வேண்டும் என்று அதற்கு அவர்கள் இப்பொழுது உனக்கு என்ன அவசரம் ஏன் மரம் வெட்டும் வேலைக்கு போக வேண்டும் என்று கேட்கிறாய் உனக்கு கழனி வேலையில வர வருமானம் இருக்கு உன் மகனும் உனக்கு அப்பப்போ ஏதோ ஒரு பணம் அனுப்புறான் உனக்கு என்ன தேவை இருக்கு என்று கேட்டதற்கு அவள் இல்ல என் மகன் சென்னையில இருக்கான் நாலு இடம் போயிட்டு வரணும் வயசு பையன் வேற நல்ல துணி இருக்கோ இல்லையோ அவனுக்கு கொஞ்சம் துணி எடுத்துக் கொடுக்கலாம் என்று தான் கேட்கிறேன் அப்படி என்று கேட்டிருக்கிறாள் அதற்கு அவர்களும் சரி என்று சொல்லி மரம் வெட்டும் வேலைக்கு கூட்டி சென்று இருக்கிறார்கள் அங்கே அவள் தொடர்ந்து பத்து நாள் வேலை பார்த்து சிறிது பணத்தை சேர்த்து துணிகளை எல்லாம் வாங்கிக் கொண்டு ஆசையாக சந்தோஷத்தோடு சாலையில் கடக்கும் போது வேகமாக வந்த தனியார் பேருந்து ஓட்டுனரின் கவனக்குறைவால் அவள் அம்மா மீது மோதி படும் காயங்களோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள் அவளை ஆம்புலன்ஸில் கொண்டு செல்லும்போது கூட என் மகனுக்கு நான் வாங்கி வைத்த உடைகள் இருக்கிறது தயவு செய்து அவனிடம் கொடுத்து விடுங்கள் என்று அவள் முணுமுணுத்துக் கொண்டு அவள் உயிர் போனதா அவள் விழுந்து கிடந்த அருகில் இருந்த அந்த புது உடைகளை எல்லாம் அவர்கள் பத்திரமாக எடுத்து எங்களிடம் ஒப்படைத்தார்கள் நாங்கள் அதை உன் அம்மாவின் அறையில் வைத்திருக்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள் இதைக் கேட்டதும் அவனுக்கு துக்கத்துக்கு மேல் துக்கம் வருவதைப் போல் அவன் அம்மாவின் படத்தைப் பார்த்து அழுது கொண்டு கேட்கிறான் அம்மா நீ உயிரோடு இருக்கும் வரைக்கும் எனக்காக நீ எவ்வளவு போராடி இருக்க நான் உனக்கு ஒரு நல்ல மகனா இருந்ததே இல்லம்மா உனக்காக நான் எதையுமே செய்யல நீ உயிரை விடும்போது கூட நீ எனக்காக இவ்வளவு செஞ்சுட்டு இவ்ளோ கஷ்டப்பட்டு நீ உயிரை விட்டிருக்க அம்மா இவ்ளோ பண்ணு நீ ஏன்மா என்ன தனியா விட்டு போயிட்ட என்னை ஏன்மா உன் கூட கூட்டிட்டு போகல என்ன கூட்டிட்டு போமா அப்படி என்று பயங்கரமாக கத்தி அழுதான் இதை பார்த்த பக்கத்து வீட்டார்கள் அவனை சமாதானம் செய்யும் விதமாக அவனை உட்கார வைத்து பேசுகிறார்கள் உன் வேதனை எங்களுக்கு புரிகிறது ரகு என்ன பண்றது நடந்து முடிந்து விட்டது உன் அம்மா சந்தோஷமா இருக்கணும் அப்படின்னா நீ உன் லைஃப்ல சீக்கிரமா முன்னேறு அப்பதான் அவங்க ஆத்மா சாந்தி அடையும் எங்களால முடிஞ்ச உதவி நாங்க உனக்கு பண்றோம் நீ சென்னைக்கு போ உன் புது வாழ்க்கையை நீ ஆரம்பி உன் அம்மா எப்பவும் உன் கூட தான் இருக்காங்க அப்படின்னு சொல்லி அவன் ஆறுதல் படுத்துறாங்க விரக்தியின் உச்சத்தில் இருந்த ரகுவிற்கு அவர்கள் சொல்வது நியாயமாகப்பட்டது ஆனாலும் அவன் மனசு வலித்துக் கொண்டே இருந்தது அவன் அம்மாவை நினைத்து ஆனாலும் அவன் இருக்கும் போது தான் அவன் அவளுக்கு எதுவும் செய்யவில்லை அவள் ஆசைப்பட்டதையாவது நிறைவேற்ற வேண்டுமென்று அவன் அதை ஏற்றுக் கொண்டு சென்னைக்கு வருவதற்காக கிளம்புகிறான் இக்கதை இத்துடன் முடியவில்லை ரகு சென்னைக்கு வந்த பிறகு அவன் அம்மாவின் ஆசையை எப்படி நிறைவேற்ற போகிறான் பல தோல்விகளையும் ஏமாற்றங்களையும் பார்த்த ரகுவிற்கு மாற்றம் வருமா என்று அடுத்த பகுதியில் பார்க்கலாம்
புதிய விடியலை நோக்கி ரகுவின் பயணம்
தொடரும்