STORYMIRROR

Priya jagan

Others

4.7  

Priya jagan

Others

அழகான அர்த்தம்

அழகான அர்த்தம்

1 min
409


 விஜய் பிசினஸ் விஷயமாக அடிக்கடி டெல்லி வருவதால் டெல்லி ரயில் நிலையத்தில் சென்னை செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ்வண்டிகாக அங்கே காத்துக் கொண்டிருக்கிறார் ரயில் தாமதமாக வருவதால் சுற்றியுள்ள பயணிகள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது அப்பொழுது விஜய் தூரத்தில் கூட்டத்தின் மத்தியில் ஒரு பெண் முகத்தில் காயங்களோடு அழுதுகொண்டே அவள் கணவருடன் வருவதை விஜய் பார்த்தான் அவள் கையில் ஒரு அழகான பெண் குழந்தையும் இருந்தது அவன் ஏதோ அந்தப் பெண்ணை திட்டி விட்டு கோபமாக அவளை ரயில் நிலையத்திலேயே விட்டு சென்றுவிட்டார் அந்தப் பெண் என்ன செய்வதென்று தெரியாமல் அவள் கண்ணில் கண்ணீரோடு நின்றுகொண்டிருந்தாள் நீண்ட நேரமாக இதை கவனித்துக்கொண்டிருந்த விஜய் அவன் செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ் வண்டி வந்து உடனே அவன் லக்கேஜை எடுத்துக்கொண்டு கம்பார்ட்மெண்ட் செல்கிறான்.


அங்கே நின்றுகொண்டிருந்த பெண் அவள் குழந்தையோடும் அவள் லக்கேஜை எடுத்துக் கொண்டு அவள் கம்பார்ட்மெண்ட் தேடி செல்கிறாள் அவள் முதல் முறையாக தனியாக பயணம் செய்வதால் அவளுக்கு எப்படி எங்க ஏற வேண்டும் என்று ஒன்றும் தெரியாமல் நின்றாள் அப்பொழுது அங்கே இருக்கும் சக பயணிகளின் உதவியோடு அவள் கம்பார்ட்மெண்டில் ஒருவழியாக ஏறிக் கொள்கிறாள் அவள் இடத்தைக் கண்டுபிடித்து விட்டு அவள் லக்கேஜை எடுத்துவைக்கை முடியாமல் மேலே தூக்கி வைத்துக் கொண்டு இருந்தாள் இவளுக்கு எதிராக உட்கர்த்துஇருந்த விஜய் உடனே எழுந்து இருங்க நான் உங்களுக்கு எடுத்து வைக்கிறேன் என்று சொல்லி லக்கேஜை மேலே தூக்கி வைக்க உதவி செய்கிறார் உடனே இதற்கு நன்றி கூட சொல்லாமல் அந்தப்பெண் அவள் குழந்தையை மடியில் உட்கார வைத்துக்கொண்டு அவள் இருக்கையில் உட்கார்கிறாள்.


ரயில் கிளம்பியவுடன் ஆரன் சத்தத்தைக் கேட்டு அவள் குழந்தை அழத் தொடங்கியது அவளும் எப்படி எப்படியோ சமாதானம் செய்கிறாள் ஆனால் அந்த குழந்தையின் அழுகை நிற்கவில்லை அவளுடைய கண்களிலும் கண்ணீர் வந்துகொண்டுதான் இருந்தது அவள் சிரமப்படுவதை கவனித்த விஜய் அந்த குழந்தையை சமாதானம் செய்ய அவன் பெக்கிலிருந்து அவள் அக்கா குழந்தைக்காக வாங்கி வைத்த பொம்மையை எடுத்து அந்த குழந்தையிடம் கொடுக்கிறான் அந்த பொம்மையை பர்த்தாதும் குழந்தையும் கொஞ்சம் அழுகையை நிறுத்தி விட்டது இது எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருந்த அவள் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் ஒரு பாட்டி அந்தப் பெண்ணிடம் என்னம்மா ஆச்சு ஏன் வந்ததிலிருந்து நான் உன்ன பாத்துட்டு இருக்க ஒரே பதட்டமா இருக்க முகம் எல்லாம் சிவந்திருக்கு அழுதுட்டே இருக்க உனக்கு என்ன ஆச்சு மா அப்படி என்று கேட்கிறார்கள் அவள் உடனே கண்ணீரோடு அந்தப் பாட்டி இடம் ஆல் சொல்லத் தொடங்குகிறாள்.


அவள் பெயர் மாயா சென்னையை சேர்ந்தவள் குடும்ப சூழ்நிலைமை காரணமாக ஐந்து வருடங்களுக்கு முன்னாடி அவளுக்கு டெல்லியை சேர்ந்தவர் ஓடு திருமணம் செய்யப்பட்டது அவளும் எல்லா பெண்களைப்போல சந்தோஷமா வாழணும்னு தான் நினைச்சா ஆனா அவன் நினைச்ச மாதிரி தான் வாழ்க்கை இல்லை கொஞ்ச நாட்களிலேயே அவள் கணவரும் அவள் கணவரின் வீட்டாரும் அவளை கொடுமை செய்ய தொடங்குகிறார்கள் கொடுமைகளின் எல்லை மீறி மாயாவின் கணவர் வேறு ஒரு பெண்ணோடு திருமணம் செய்து கொள்ளப் போவதாக சொல்லி அவளிடம் விவாகரத்து கேட்டு தொல்லை செய்து கையெழுத்து வாங்கிக்கொண்டு அவளை காயப்படுத்தி அவள் வீட்டிற்கு அனுப்பி விட்டதாக சொல்லி அழுது கொண்டிருந்தாள் இதை கவனித்த கேட்டுக்கொண்டிருந்த விஜய் மிகவும் கவலைப்பட்டான்.


பிறகு அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள் ஆனால் அவள் கண்களில் வரும் கண்ணீர் நின்றபாடில்லை அப்படியே நேரம் கடந்தது மாயாவின் குழந்தையும் தூங்கி விட்டது பிறகு விஜயும் ஹெட் போன் எடுத்து பாட்டுக் கேட்டுக் கொண்டிருந்தார் ஆனால் அவன் மனதுக்குள் அவள் சொன்ன கதை ஓடிக்கொண்டே இருந்தது சற்று மாயாவை கவனிக்க தொடங்கினான் அவள் கண்கள் எதற்கோ எங்கிக்கொண்டிருந்தது பிறகு போபால் ஸ்டேஷன் வந்தவுடனே எல்லோரும் இறங்கி உணவு வாங்கிக் கொண்டு இருந்தார்கள் விஜயும் உணவு வாங்கிகொண்டு உள்ளே வந்தான் பக்கத்தில் அந்த பாட்டி இல்லாததால் மாயா விஜயைப் பார்த்து ஒரு ரெண்டு நிமிஷம் என் குழந்தையை பார்த்து கொள்கிறீர்களா நான் வெளியே போய் ஏதாவது வாங்கிக்கொண்டு வருகிறேன் என்று சொல்லி வெளியே செல்கிறாள்.


கொஞ்ச நேரத்தில் ரயில் புறப்பட ஆரம்பித்தது ஆனால் வெளியே சென்ற மாயா இன்னும் வரவில்லை பயந்து போன விஜய் பக்கத்தில் உட்கார்ந்திருந்த பாட்டி வந்த உடனே பாட்டி இந்த குழந்தையை பார்த்துக்கோங்க அவங்க வெளிய போனாங்க இன்னும் வரல நான் போய் பார்த்துட்டு வரேன் என்று சொல்லி வெளியே பார்க்க செல்கிறான் ஆனால் ரயில் புறப்பட்டது விஜய்க்கு என்ன பண்றது என்று தெரியாமல் உள்ளே வருகிறான் ஆனால் எதிர் பக்கத்திலிருந்து மாயா வந்து கொண்டிருந்தாள் அவளைப் பார்த்ததும் ஒருவழியாக விஜய்க்கு நிம்மதியாக இருந்தது விஜய் மாயா வைப் பார்த்து கோபத்தோடு எங்க போனீங்க என்று கேட்டாள் அதற்கு மாயா ஒரு பதிலும் சொல்லாமல் அவள் இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டாள்.


மாயா அவள் குழந்தைக்கு மட்டும் ஏதோ வாங்கிக்கொண்டு கொடுத்திருந்தால் ஆனால் அவன் ஒன்றும் சாப்பிடாமல் இருந்தாள் அதற்கு அந்த பாட்டி அவளைப் பார்த்து கேட்டாள் நீ ஏமா சாப்பிடல என்று அதற்கு மாயா இல்ல பாட்டி எனக்கு பசி இல்ல என்று சொல்கிறாள் அவள் மிகவும் கவலையாக இருந்ததால் அந்தப் பாட்டி அவளுக்கு ஆறுதல் சொல்கிறார்கள் நீ பாக்குறதுக்கு ரொம்ப நல்ல பொண்ணு மாதிரி தெரியுற கவலப்படாத மா எல்லாம் சீக்கிரம் சரியாயிடும் இதைக் கேட்டுக் கொண்டிருந்த மாயா கொஞ்சம் கலைப்பா இருந்ததால அப்படியே தூங்க தொடங்குகிறாள் விஜயும் தூங்கி விடுகிறான் ரயில் நிற்காமல் போய்க்கொண்டே இருந்தது யாரோ குளிரில் நடுங்குவது போல் சத்தத்தை கேட்ட விஜய் எழுந்து பார்க்கிறார் பார்த்தாள் மாயா குளிரில் நடுங்கிக் கொண்டிருந்தார்.



விஜய் உடனே அவளுடன் இருந்த ஒரு போர்வையை எடுத்து மாயாவிடம் கொடுத்தான் ஆனால் மாயா வேண்டாம் என்று சொல்லிவிட்டாள் அவன் பரவாயில்லை வெச்சுக்கோங்க என்று சொல்கிறான் ஆனால் அதை மாயா வாங்கவே இல்லை அவள் முகத்தை திருப்பிக் கொண்டாள் உடனே விஜய் அவன் மனதுக்குள் யோசித்துக் கொள்கிறாள் நான் எதுவுமே சொல்லலையே ஏன் இவங்க இப்படி ரியாக்ட் பண்றாங்க என்று அவனும் மறுபடியும் தூங்கிவிட்டான் அந்த இரவு அப்படியே முடிந்துவிட்டது விடிந்த வுடன் எல்லோரும் எழுந்து டீ காபி என்று எல்லாம் வாங்கி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் மாயா அவள் மொபைலை எடுத்து சார்ஜ் போட முயற்சி செய்து கொண்டிருந்தார்.


ஆனால் அவள் மொபைல் உடைந்திருந்தது யாருக்கோ கால் செய்ய முயற்சி செய்து கொண்டிருந்தாள் ஆனால் அவள் மொபைல் டிஸ்ப்ளே போனதா வேலை செய்யவில்லை அவள் பக்கத்தில் இருந்த பாட்டியிடம் அவள் கேட்டால் பாட்டில் உங்க மொபைல் இருக்கா எனக்கு ஒரு கால் அர்ஜெண்டா பண்ணனும் என்று கேட்டாள் அந்த பாட்டு என்கிட்ட போன் எல்லாம் இல்லம்மா என்று சொல்கிறாள் தவித்துக்கொண்டிருந்த மாயா வைப் பார்த்து விஜய் மொபைல் வேண்டுமா என்று கேட்கலாமா வேண்டாமா என கேட்க யோசித்துக் கொண்டே இருந்தான் ஆனால் உடனே மாயா விஜயைப் பார்த்து தயங்கி உங்க கிட்ட மொபைல் இருக்கா என்று கேட்டாள் அதற்கு விஜய் ஆமா இருக்கு என்று சொல்லி அவளிடம் கொடுத்தான் மாயா மொபைலை வாங்கிக்கொண்டு அவள் தோழி அனிதாவிற்கு கால் செய்து அவளுக்கு நடந்தவை சொல்லி இனியாவது எப்படி வாழ போகிறார் என்று எல்லாவற்றையும் அவளிடம் சொல்லி அவளே வந்து பிக்கப் செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டாள்.


பிறகு கால் கட் செய்துவிட்டு என்னிடம் கொடுத்து விட்டாள் உடனே ஸ்டேஷன் வந்ததும் எல்லோரும் இறங்கி டிபன் வாங்கினார்கள் மாயாவும் அவள் குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு விஜய் பர்த்துக்க செல்லலாம் ஆனால் விஜய்க்கூ நேற்று நடந்தது ஞாபகம் இருந்ததால் மாயா வைப் பார்த்து இல்ல நீங்க இங்கேயே இருங்க என்ன வேணும் என்று சொல்லுங்க நான் போய் வாங்கிட்டு வரேன் என கேட்கிறார் மாயா உடனே யோசித்துக்கொண்டே சரி குழந்தைக்கு மட்டும் ரெண்டு இட்லி வேணும் என்று கேட்கிறாள் பிறகு விஜய் போய் இட்லி வாங்கிக் கொண்டு வந்து மாயாவிடம் கொடுக்கிறான் அப்படியே நேரம் போய்க்கொண்டே இருந்தது இன்னும் ரயில் சென்னை வந்து சேர 7 மணி நேரம்தான் இருக்கிறது பாட்டு கேட்டுக்கொண்டே இருந்த விஜய் மாயாவை பார்த்தா அவள் ஏதோ யோசித்துக்கொண்டு கண்களில் கண்ணீர் கசிவதை கண்டு மாயாவிடம் பேசலாம் என்று விஜய் அவள் பேச்சு கொடுத்தான்.


குழந்தையை சிரிக்க வைத்து விளையாடினான் இதைப் பார்த்துக் கொண்டிருந்தாள் மாயா உடனே விஜய் மாயா வைப் பார்த்து உங்கள் குழந்தை பெயர் என்ன என்று கேட்டார் அதற்கு மாயா இவ பெயர் அபி என்று மாயா சொன்னாள் அப்படியே விஜய் கொஞ்சம் கொஞ்சமாக மாயாவிடம் பேச்சு கொடுக்க ஆரம்பித்தான் மாயாவும் அவள் கவலையை மறந்து மாயா அந்த பாட்டி மூன்றுபேரும் பேசிக்கொண்டே இருந்தார்கள் பாட்டி ஏதோ பேச மாயா சிரிக்க ஆரம்பிச்சா இதைப்பார்த்த விஜய்க்கு மிகவும் சந்தோஷமா இருந்தது ஏனென்றால் அவன் மாயாவை முதல்முறை பார்த்ததிலிருந்து இப்போ வரைக்கும் அவள் கண்ணில் கண்ணீர் மட்டும்தான் இருந்தது அவள் ஏதோ ஒரு கவலையில் தான் இருந்தாள் ஆனால் அவள் முதல்முறையாக சிரிப்பதை விஜய் பார்த்ததும் ஆச்சரியமாக இருந்தது இப்படி பேசிக்கொண்டு இருந்த சமயத்தில் பக்கத்திலிருந்த பாட்டி மாயாவைப் பார்த்து நீ சென்னைக்கு போனதும் என்ன பண்ண போகிறாய் என்று கேட்டாள்.


அதைக்கேட்டதும் மாயா அமைதியாகி விட்டாள் பிறகு பாட்டியை பார்த்து சொன்னாள் தெரியல பாட்டி நான் என்ன பண்ண போறேன்னு சொல்லி அமைதியாகவே இருந்தார் இதைப்பார்த்த விஜய்க்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது ஐயோ இவ்ளோ கஷ்டப்பட்டு இந்த பொண்ண சிரிக்க வச்ச இந்த பாட்டி ஒரே கேள்வியில் திருப்பியும் அழவைத்ததே என்று மனதிற்குள் சொல்லிக் கொள்கிறான் மறுபடியும் விஜய் ஏதோ பேசி மாயாவை சிரிக்க வைக்க முயற்சி செய்தான் ஆனால் மாயா அதில் ஆர்வம் காட்டாமல் அமைதியாகவே இருந்தாள் அப்படியே மதியம் ஆகிவிட்டது மாயா சாப்பிடாமல் இருந்தால் அந்தப் பாட்டி அவளைப்பார்த்து கேட்டாள் இப்பையாவது சாப்பிடுமா சாப்பிடாமல் இருந்தால் என்ன ஆகும் என்று கேட்டாள் அதற்கு மாயா இல்ல வேணாம் என்று சொன்னாள் ஆனால் விஜய்க்கு மனசு கேட்கவில்லை அவளை எப்படியாவது சாப்பிட வைக்க வேண்டும் என்று சாப்பாடு வாங்கிக்கொண்டு வந்தான் ஆனால் மாயா வேணாம் என்று சொல்லி முகத்தை மறுபடியும் திருப்பிக் கொண்டாள்.


 ஆனால் விஜய்யால் அப்படி சாதாரணமாக விட முடியவில்லை மாயா வைப் பார்த்து கோபமாக சொன்னான் நீங்க சாப்பிடாம இருந்தா ஒன்னும் மாறப்போவதில்லை உங்க குழந்தைய பாத்துக்க நீங்க நல்லா இருக்கணும் உங்கள கஷ்டப்படுத்தி சாப்பிடாம இருந்தா என்ன ஆகபோது நல்லா சாப்டா தான நீங்க ஏன் எப்படி இருக்கீங்க என சொன்னதும் விஜயின் கோபத்தை பார்த்த மாயா உடனே அதை வாங்கி சாப்பிட்டால் விஜய் மாயாவிடம் ஏதும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தான் மாயாவும் விஜயை பார்த்துக்கொண்டு அமைதியாக இருந்தாள் விஜய் யோசிக்க ஆரம்பித்தான் ந ஏன் அவங்கள அப்படி திட்டிட்டேன் ஏற்கனவே இவங்க கஷ்டத்துல இருக்காங்க நானும் வேற அவங்கள இப்படி பேசிட்டேன் என்று கவலைப்பட்டான் சரி மாயாவிடம் மன்னிப்பு கேட்கலாம் என்று பேச தொடங்கினான் உடனே மாயா அவள்&

nbsp;முகத்தை திருப்பிக் கொண்டாள் இதைப் பார்த்த விஜய்க்கு ஒரே சிரிப்பு என்ன இவங்க எது பேசினாலும் இப்படி முகத்தை திருப்பிக்கொள்ளறாங்க சின்ன குழந்தை மாதிரி நினைத்துக்கொண்டான்.


 அவள் குழந்தை விஜய் கொடுத்த பொம்மையை வைத்துக் அழகாக விளையாடிக்கொண்டிருந்தது அதைப்பார்த்த விஜய் குழந்தையை விளையாட வைத்து ரசித்துக்கொண்டிருந்தன் ஆனால் மாயா விஜய்யை பார்த்து முறைத்துக் கொண்டே இழுத்து மேலே வைத்துக் கொண்டாள் விஜய்க்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது விஜய் உடனே பக்கத்தில் இருந்த பாட்டியை பார்த்து பாட்டி பெரியவங்க மேல இருக்குற கோவத்தை சின்ன குழந்தைகள் கிட்ட காட்டக்கூடாது என்று சொல்றான் விஜய் இப்படி சொன்னதை கேட்டு மாயா க்கு ரொம்ப கோபம் வந்தது விஜய் பார்த்து முழிச்சுக்கிட்டு முகத்தை திருப்பிட்டாள் இதைப் பார்த்த உடனே விஜய்க்கு சிரிப்பு அடக்க முடியாமல் சிரித்துவிட்டான் பிறகு விஜய் பாத்ரூம் போவதற்காக எழுந்து போகிறான் அப்பொழுது அவனுக்கு மாயாவின் தோழி அனிதா கால் செய்கிறாள் விஜய் உடனே அதை அட்டென்ட் செய்து யார் என்று கேட்கிறான் அனிதா நான் மாயா பிரண்ட் பேசுறேன் கொஞ்சம் அவ கிட்ட பேச முடியுமா என்று கேட்கிறாள் அதற்கு விஜய் இருங்க ஒரு ரெண்டு நிமிஷம் என்று சொல்லி வேகவேகமாக மாயாவிடம் போய் மொபைலை கொடுப்பதற்காக மாயாவி கூப்பிடுகிறார்.


 ஆனால் மாயா விஜய் சொல்வதை கொஞ்சம் கூட காது கொடுத்து கேட்காமல் ஜன்னல் பக்கமாக பார்த்துக் கொண்டிருந்தாள் விஜய் உடனே நக்கலாக பாட்டியைப் பார்த்து பாட்டி அனிதானு யாரோ கால் பண்ணாங்க மாயா னு ஒருத்தங்க கிட்ட பேசணுமா என்று சொல்கிறான் உடனே மாயா பாட்டியிடம் பட்டி அது என்னுடைய பிரண்டு தான் என் கிட்ட பேசுறதுக்கு கால் பண்ணி இருப்பா குடுக்க சொல்லுங்க நான் பேசணும் அப்படி என்று சொல்கிறாள் உடனே விஜய் அவர் மொபைல் பழைய கடன் கொடுக்கிறான் மாயா அதை வாங்கி அவ பிரண்ட் உடன் பேசிக் கொண்டிருக்கிறாள் அபியை தூக்கி விஜய் விளையாடிக்கொண்டிருந்தான் மாயா பேசி முடித்த பிறகு மொபைலில் விஜயிடம் கொடுத்தாள் மாயா ஏதாவது சொல்ல போறாள் என்று விஜய் அபியை இறக்கிவிட்டான்.


 ஆனால் மாயா எதுவுமே சொல்லாமல் அமைதியாகவே இருந்தாள் உடனே அந்த பாட்டி விஜயிடம் கேட்கிறாள் ஏன்பா சென்னை போறதுக்கு இன்னும் எவ்வளவு நேரம் ஆகும் என்று அதற்கு விஜய் கடிகாரத்தைப் பார்த்து காலையில விடிஞ்ச சென்னையில இருப்போம் பாட்டி என்று சொல்கிறான் அதற்கு மாயா விஜய் பார்த்து இவ்ளோ நேரம் ஆகுமா என்று ஆச்சரியத்தோடு கேட்டாள் அதற்கு விஜய் எதுமே சொல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டாள் இதைப் பார்த்ததும் மாயா சின்னதாக சிரித்துக்கொண்டே அமைதியாக இருந்தாள் பிறகு மாயா பாத் ரூம் செல்வதற்காக செல்கிறாள் அவள் சென்று வந்தவுடனே பாட்டியிடம் ஏதோ சொல்லிக் கொண்டே இருந்தாள் அவள் பாத்ரூம் போனபோது அங்கே வட நாட்டுக்காரர்கள் அவளைப் பார்த்து ஏதோ ஒரு மாதிரியாக பேசி சிரித்துக் கொண்டே இருந்தார்கள் என்று அதற்கு பாட்டி அந்த வடநாட்டு காரர்களைபற்றி திட்டிகொண்டிருந்தாள் இதைக் கேட்ட விஜய் கோவமாக மாயா வைப் பார்த்து நீங்க சும்மா வந்தீங்க நல்லா அவங்கள கேக்க வேண்டியதுதானே என்று கேட்கிறான்.


 அதற்கு மாயா சோகத்தோட விஜய் பார்த்து எனக்கு கேட்க தெரிந்து இருந்தால் நான் என் கணவரைக் கேட்டிருப்பேன் என்று சொல்லி அமைதியாகிவிட்டார் இவள் இப்படி சொன்னதை கேட்ட விஜய்க்கு மிகவும் கஷ்டமாகி விட்டது அவள் மேல் ஏதோ ஒரு அக்கறை உண்டாகியது அவளைப் பற்றி அதிகமாக யோசித்துக் கொண்டே இருந்தார் இவ்வளவு நல்ல பெண்ணாக இருக்கிறாளே ஏன் கடவுள் இவனுக்கு இப்படி ஒரு நிலைமையை வைத்தான் என்று பிறகு அப்படியே நேரம் போனது இந்த இறை பயணம் முடிய இந்த ஒரு இரவு தான் இருக்கிறது விடிந்த உடனே இந்த ரயில் சென்னை சேர்ந்துவிடும் அப்படியே விஜய் மாயாவின் குழந்தையோடு பேசிக்கொண்டே இருந்தாள் அவள் குழந்தையை அபியும் விஜய்யுடன் நெருக்கமாகி விட்டாள் விஜய்க்கு அபியை ரொம்ப பிடித்து விட்டது இப்படியே போய்க் கொண்டிருந்த சமயத்தில் ஸ்டேஷன் வந்தவுடனே விஜய் சாப்பாடு வாங்குவதற்காக போகிறான் மாயா விஜய் ஏதாவது கேட்பான் என்று நினைக்கிறாள் ஆனால் மாயாவிடம் எதுவுமே கேட்காமல் போகிறான் பக்கத்தில் பாட்டியும் இல்லாததால் மாயா வால் போக முடியவில்லை பிறகு விஜய் கையில் சாப்பாடு வாங்கிக்கொண்டு வருகிறான்.


 விஜய் வந்தவுடனே மாயா ரெண்டு நிமிஷம் பார்த்திருக்கீங்களா நான் போய் வாங்கிட்டு வரேன் என்று சொல்கிறாள் ஆனால் விஜய் அதெல்லாம் ஒன்னும் வேணாம் நான் உங்களுக்கும் சேர்த்து தான் வாங்கிட்டு வந்தேன் என்று சொல்கிறான் இதைக்கேட்டதும் மாயாவிற்கு ஒரு மாதிரியாக ஆனது அவளுக்கு என்ன வேண்டும் என்று அவள் சொல்லாமலே ஒருவர் அவள் மீது அக்கறை காட்டி அதை செய்கிறார்கள் என்று பிறகு எல்லோரும் உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள் சாப்பிட்ட பிறகு மாயா பாத்ரூம் செல்வதற்காக போகிறாள் மாயா போனவுடன் விஜய் பாத்ரூம் பக்கத்தில் இருக்கும் கதவுகிட்ட சென்று நின்று கொள்கிறான் மாயா அவளிடத்தில் உட்காருவதற்கு உள்ளே செல்கிறாள் பின்னாடியே விஜயும் செல்கிறான் பிறகு மாயாவுடன் பாட்டி ஏதோ பேசிக்கொண்டே இருந்தார்கள் திடீரென்று பாட்டி விஜயைப் பார்த்து அவனைப் பற்றி கேட்டுக்கொண்டிருந்தாள் அதற்கு விஜய் அவனைப்பற்றி சொல்லத் தொடங்குகிறான்.


 அவளும் சென்னையை சேர்ந்தவன் தான் அவன் இம்போர்ட் எக்ஸ்போர்ட் பிசினஸ் செய்து பிசினஸ் வேலையாக அடிக்கடி டெல்லி வந்து போய் போய்க் கொண்டிருப்பான் அவனும் அவன் அப்பா அம்மா சென்னையில் வேளச்சேரியில் வசித்துக் கொண்டிருக்கிறான் அவன் அக்கா திருமணம் ஆகாத அவன் குடும்பத்தோடு தனியாக வசித்துக் கொண்டிருப்பதாக சொல்கிறான் பாட்டியுடன் என்னப்பா உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா என்று கேட்கிறாள் அதற்கு விஜய் என்ன பாட்டி எனக்கு இப்போதைக்கு கல்யாணம் எல்லாம் இல்லை என்று சொல்கிறான் அதற்கு பாட்டி ஏன்பா கல்யாணம் வேணாம்னு சொல்ற கேட்கிறார் அதற்கு விஜய் எனக்கு பிடித்த மாதிரி ஒரு பொண்ணு கிடைக்கிற வரைக்கும் கல்யாணத்தைப் பற்றி யோசிக்கிறது இல்ல என்று சொல்கிறான் இதையெல்லாம் பக்கத்திலிருந்த மாயாவும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறாள் அப்படியே கொஞ்ச நேரம் பேசி முடித்த பிறகு தூங்க செல்கிறார்கள்.


விஜய் அப்படியே படுத்துக் கொள்கிறான் அவளுக்கு எதிராக மாயவன் படுத்துக் கொள்கிறார் குழந்தையோடு மாயா படுத்தவுடனே தூங்கிவிட்டாள் நீண்ட நேரமாகி விஜய்க்கு தூக்கம் வரவில்லை அவள் படுத்துக் கொண்டே மாயாவின் குழந்தை அபியை பார்த்து மனசுக்குள் நினைக்கிறான் இப்படி ஒரு அழகான குழந்தையை நல்ல மனைவியை அவனால் எப்படி விட மனசு வந்தது பாக்க ரெண்டு பேருமே குழந்தையா இருக்காங்க கடவுள்தான் இந்த பொண்ணுக்கு இவள் குழந்தைக்கு ஏதாச்சு பன்னி அவள் வாழ்க்கை சரி ஆகணும் என்று நினைத்துக் கொள்கிறார் பிறகு அப்படியே அவளும் தூங்கி விடுகிறார் கொஞ்ச நேரம் போக மாயா திடீரென்று தூக்கத்திலிருந்து முழித்துக்கொள்கிறள்.


 அவளும் அப்படியே படுத்துக் கொண்டேன் விஜய் பார்த்தால் அவளைப் பார்த்து அவள் மனதுக்குள் நினைத்துக் கொள்கிறாள் இவர் யார் என்று தெரியவில்லை தெரியாத எனக்கு இவர் இப்படி உதவி செய்யுறார் இவருக்கு வர மனைவிய நல்ல பாத்துப்பாரு கண்டிப்பா இவரு கல்யாணம் பண்ணிக்க போற பொண்ணு ரொம்ப குடுத்து விச்சவலா இருப்பா கடவுளே இவரு நல்ல மனசுக்கு நல்ல பொண்ணு குடுங்க என்று அவளும் நினைக்கிறாள் அப்படியே நேரம் போகப் போக சென்னை வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கிறது அதனால் எல்லோரும் எழுந்து அவர்கள் லக்கேஜ் எடுத்து வைத்துக் கொண்டிருந்தார்கள் அப்பொழுது மாயாவின் லக்கேஜ் எடுக்க விஜய் தான் உதவி செய்கிறான் சென்னை கிட்ட நெருங்கி கொண்டு இருக்கும் போது விஜய்க்கு மிகவும் கஷ்டமாக இருந்தது அந்த இரண்டு நாள் அவன் அபியோடு மிகவும் நெருக்கமாகி விட்டான் அவள் சென்று விடுவாள் என்று கவலையோடு நினைத்துக் கொண்டிருக்கிறான்.


 அதனால் விஜய் எப்படியாவது மாயாவிடம் அவள் தொலைபேசி எண்ணை வாங்க வேண்டும் என்று நினைக்கிறான் ஆனால் மாயம் மீது அவனுக்கு எந்த தவறான எண்ணமும் இல்லாத போதும் மாயாவிற்கும் அவள் குழந்தை அபியிருக்கும் ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணம் அவனுக்குள் ஓடிக் கொண்டே இருந்தது அதனால் தைரியத்தை வர வைத்துக் கொண்டு அவளிடம் பேசுகிறான் மாயாவிடம் உங்களை பிக்கப் செய்ய உங்க பிரண்டு வருவாங்களா என்று கேட்கிறான் அதற்கு மாயா அவ வருவா என்று நினைக்கிறேன் இதைக் கேட்டதும் விஜய் நான் வேணும்னா உங்களை ட்ராப் செய்யவா என்னுடைய கார் இங்கே வெளியே பார்கிங்ல தான் இருக்கு என்று சொல்கிறான் விஜய் இப்படி சொன்னதும் மாயாவிற்கு விஜய் மேல் தவறான எண்ணம் தோன்றியது அவள் விஜயை பார்த்து நீங்கள் எனக்கு ஏற்கனவே செய்த எல்லா உதவியும் போதும் உதவி எல்லாம் இங்கேயே முடியட்டும் எது முகத்தில் அடித்த மாதிரி சொல்கிறாள் இதைக் கேட்ட உடனே விஜய்க்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது விஜய் மாயாவை பார்த்து நீங்க என்ன தவறா புரிஞ்சிக்கினிங்கனு நினைக்கிறேன்.


 நீங்க குழந்தையை வைத்துக்கொண்டு கஷ்டப்படுவீங்க என்று நினைச்சு தான் நான் கேட்டேன் என்று சொல்கிறான் இதற்கு மாயா விஜய பார்த்து கண்களில் கண்ணீரோடு என் வாழ்க்கையில் நான் கஷ்டப்படுவதற்காகவே பிறந்து இருக்கிறேன் என்று சொல்கிறாள் இப்படி கேட்ட உடனே விஜய்க்கு கஷ்டமாகிவிட்டது மாயா ஆழ் மனதில் எவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கிறாள் என்று அவனால் உணர முடிந்தது ஒன்றும் பேசாமல் அமைதியாகவே நின்று கொண்டிருந்தான் குழந்தையை பார்த்து சிறிது நேரத்தில் சென்னை ரயில் நிலையம் இவர்களின் ரயில் வந்து சேர்ந்தது விஜயும் அவனது லக்கேஜை எடுத்துக் கொண்டு மாயாவிற்கு பின்னால் கூட்டத்தில் நகர்ந்து கொண்டே இருந்தான் இறங்குவதற்காக மாயா கொஞ்சம் கூட விஜய் பக்கம் பார்க்கவே இல்லை ரயில் நின்றவுடன் மாயா கீழே இறங்கி அவள் தோழி இருக்கிறாளா என்று தேடிப் பார்த்துக் கொண்டிருந்தாள் கூட்டத்தில் அவலால் அவள் தோழியை கண்டுபிடிக்க முடியவில்லை.


 விஜயும் இறங்கியவுடன் போகாமல் தேடிக் கொண்டிருப்பதை கண்டு ஒரு பக்கமாக நின்று கொள்கிறான் இதை கவனித்த மாயா ஒரு மாதிரியாக முகத்தை திருப்பிகொண்டு அவள் தோழியை தேடிக் கொண்டிருந்தாள் சிறிது நேரத்தில் கூட்டங்கள் கலய அவள் தோழியை கண்டுபிடித்து விடுகிறான் அவளைப் பார்த்ததும் மாயா கட்டிப்பிடித்துக் கொண்டு அழத் தொடங்கினால் அவள் தோழி எதுவும் பேசாமல் சமாதானம் செய்ய அவள் லக்கேஜ் எடுத்துக்கொண்டு மாயா அவர் தோழியோடு திரும்பி கூட பார்க்காமல் போய்க் கொண்டே இருந்தால் பிறகு விஜயும் அவன் லக்கேஜை எடுத்துக்கொண்டு அவன் கார் பார்க்கிங் செய்து இருக்கும் இடத்திற்கு சென்று காரை எடுத்துக் கொள்கிறான்.


 கார் பார்க்கிங் டோக்கன் பணம் கட்டுவதற்காக விஜய் நின்று கொண்டிருந்தாள் அந்தப் பக்கமாக மாயா தோழியோடு ஆட்டோவில் உட்கார்ந்து அந்த பக்கமாக கடந்து கொண்டிருந்தார்கள் அதைப் பார்த்துக் கொண்டிருந்த விஜய் மாயாவி குழந்தை அவனைப் பார்த்து சிரித்துக் கொண்டே இருந்தது அதைப் பார்த்ததும் விஜய்க்கு ஏதோ மாதிரி ஆகியது பிறகு விஜயும் அவன் காரை எடுத்துக் கொண்டு அவன் வீட்டிற்கு செல்கிறான் இந்த பயணம் இதோடு முடிந்து போவதில்லை இந்த பயணம் மறுபடியும் எப்பொழுது தொடங்கப் போகிறது என்று பார்க்கலாம்

தொடரும் ...............


Rate this content
Log in