சீரியல் நடிகையை ஏமாற்றி வரவைத்து.. ஹோட்டலில் அட்டகாசம்
சீரியல் நடிகையை ஏமாற்றி வரவைத்து.. ஹோட்டலில் அட்டகாசம்
சென்னை: சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் செய்வது எல்லாம் சாதாரணம்பா என்று சொல்லும் அளவிற்கு ஆகிவிட்டது. முன்பெல்லாம், நடிகைகள் அட்ஜெஸ்ட்மென்டுக்கு ஒருவன் அழைத்தால் என்று சொல்வதற்கே சங்கடப்பட்டு அதைப்பற்றி வாய் திறக்காமல் இருந்தனர். ஆனால், இப்போது இருக்கும் நடிகைகள் அனைவரும் தங்களுக்கு நடக்கும் பாலியல் ரீதியிலான சீண்டல்கள் தொல்லைகள் பற்றி துணிந்து பேசுகிறார்கள்.
அந்த வகையில், அனைவருக்கும் பிடித்தமான சீரியல் நடிகை ஒருவர், தனக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து பேசி துணிச்சலாக பேசி உள்ளார். சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய கனவு, இதற்காக நான் பலவிதமான முயற்சிகளை செய்தேன். அதன் பலனாக பெரிய நடிகரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் எனக்கு நல்ல ரோல் தான் என்றாலும், அடுத்தடுத்து எனக்கு சினிமா வாய்ப்பு வரவில்லை. இதனால், எப்படியாவது பிழைப்பை நடத்தியே ஆக வேண்டும் என்கிற கட்டாயம் இருந்ததால், சின்னத்திரை பக்கம் வந்தேன்.
மோசமான விஷயம்: நம்பி வந்தேன், சின்னத்திரை என்னை கைவிடவில்லை எனக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்தன. அதில் அடுத்தடுத்து நடித்து நல்ல நடிகை என பெயர் எடுத்தேன். அதுமட்டுமில்லாமல், என் உடல் வாகுக்கு வில்லி ரோல் நன்றாக பொருந்தி இருந்ததால், தொடர்ந்து அது போன்ற ரோலில் நடித்து வருகிறேன். நான் வில்லியாக நடித்தாலும், மக்களுக்கு என் தனி பிரியம் உண்டு. ஆனால், என் வாழ்க்கையில் ஒரு முறை ஒரு மோசமான விஷயத்தை சந்தித்தேன். ஒருநாள், எனக்கு போன் வந்தது, அதில், நகைக்கடை திறப்பு நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்றனர். நானும் தேதி, நேரம் எல்லாத்தையும் கேட்டுக்கொண்டேன், நிச்சயம் வருகிறேன் என்றேன். அதன் பின் அந்த மேனேஜர் எனக்கு ஃபோன் செய்து, உங்களுக்கு தனிப்பட்ட மேனேஜர் இருக்கிறாரா என்று கேட்டார். நான் இல்லை என்று சொன்னதும், சரி மேடம், இந்த ஓட்டலில் ரூம் போட்டு இருக்கிறோம் என்று சொன்னார்.
ஹோட்டலில் அட்டகாசம்: நானும் சரி சார், வந்துவிடுகிறேன் என்று சொல்லிவிட்டு, ஓட்டல் அறையில் தங்கினேன். விடியற் காலையில் கடை திறப்பு என்பதால், ஓட்டலில் தங்க வேண்டிய சூழ்நிலை இருந்தது. அப்போது, அந்த மேனேஜர் மீண்டும் எனக்கு போன் செய்து, ஓட்டலில் வசதியாக இருக்கா என்று கேட்டார். நான் ஒரு குறையும் இல்லை சார், நன்றாக இருக்கிறது என்றேன். அதைத்தொடர்ந்து, அந்த நபர், மேடம், நகைக்கடை அதிபர் உங்களை பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். இன்னும் கொஞ்ச நேரத்தில் ஓட்டலுக்கு வருவார் என்று சொன்னார். நான், நாளை நிகழ்ச்சியில் சந்திக்கலாமே இப்போது எதற்கு என்றேன். அப்போது அந்த நபர், அவர் உங்களின் ரசிகர், உங்களுக்காக கிஃப்ட் வாங்கி வைத்து இருக்கிறார். உங்களை சந்திக்க ஆசைப்படுகிறார் என்றார்.
தூக்கமே வரல: நானும், சரி வரட்டும் என்றேன். அறைக்கு வந்தவர் போவது போல தெரியவில்லை தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்தார். அதன் பிறகு தான் அவர் போச்சில் இருக்கும் அந்த எண்ணம் எனக்கு தெரிந்தது. உடனே நான் சுதாரித்துக்கொண்டு, மிகவும் சோர்வாக இருக்கிறேன், கிளம்புறீங்களா என்று கேட்டேன். அப்போது அந்த நகைக்கடை அதிபர் கிளம்பவில்லை. கடைசியில் நேரடியாகவே எனக்கு விருப்பம் இல்லை என்று சொல்லி வெளியில் அனுப்பினேன். அன்று இரவு முழுக்க எனக்கு தூக்கமே வரவில்லை, இப்படி எல்லாம் கூடவா ஏமாற்றுவார்கள் என மிகவும் நொந்துபோனேன் அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது என்று பேசி உள்ளார்.

