அப்பப்போ பூஸ்ட் தேவை.. நான் சொல்றவரை அடுத்த படத்தை கமிட் பண்ணாத..
அப்பப்போ பூஸ்ட் தேவை.. நான் சொல்றவரை அடுத்த படத்தை கமிட் பண்ணாத..
சென்னை: டாப் நடிகையாக தொடர்ந்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வந்த நடிகைக்கு அவர் எதிர்பார்த்த பேரும் புகழும் கொஞ்சம் கூட கிடைக்கவில்லையாம். பதிலுக்கு, தொடர்ந்து அவரது பெயர் டேமேஜ் ஆகும் விஷயங்களே அரங்கேறி வரும் நிலையில், கொஞ்ச காலம் நடிப்பதையே நிறுத்தி வைக்க முடிவு செய்திருப்பதாக ஒரு பக்கம் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இன்னொரு பக்கம் நடிகை குறித்த ஷாக்கிங் காசிப்களும் காதை குடைகின்றன.
ஏற்கனவே அந்த பிரபல ஹீரோவுடன் நடிகை ரகசிய வாழ்க்கையை நடத்தி வருகிறார் என ஏகப்பட்ட பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், நடிகை எந்தவொரு ரியாக்ஷனும் கொடுக்காமல் தொடர்ந்து தான் உண்டு தன் வேலை உண்டு என படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தார்.
ஹீரோவும் பிசியாக நடித்துக் கொண்டிருந்த நிலையில், நடிகையை தாராளமாக நடிக்க வைத்தார் என்றும் ஆனால், தற்போது நடிகை புதுப்படங்களில் கமிட்டாகாமல் இருக்க காரணமே நடிகர் தான் என அதிர்ச்சியை கிளப்புகின்றனர்.
பாப்புலர் ஜோடி: சினிமாவில் இருவரும் இணைந்து நடித்தாலே படங்கள் சூப்பராக ஓடும் அளவுக்கு ரசிகர்களின் ஃபேவரைட் ஜோடியாக இருந்த பலரும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்வது, காதலித்து சேர்ந்து வாழ்வது என உறவை மேம்படுத்தி விடுவது வழக்கம். ஒரு சில இடங்களில் நடிகருக்கு ஏற்கனவே திருமணம் ஆகியிருந்தாலும், இடையே சில நடிகைகள் தங்களது அதீத காதலை வெளிப்படுத்த நடிகர்களும் மயங்கி விழுவது சினிமாவில் பல முறை பார்த்த விஷயங்கள் தான். அப்படித்தான் தற்போதும் ஒரு ஜோடி புறாக்கள் ரகசியமாக வாழ்க்கையை நடத்தி வருவதாக கிசுகிசுக்களை தாண்டி பகிரங்க பேச்சுக்களும் பல மேடைகளில் ஒலித்து வருகின்றன.
நோ சொல்லும் நடிகை: ரொம்பவே பிசியாக நடிகை மாறுவதற்கு காரணமே அந்த நடிகர் தான் என்றும் அதனால் தான் தற்போது அவருடன் ரொம்பவே நடிகை நெருக்கமாக இருந்து வருகிறார் என்கின்றனர். அதே போல நடிகை விருப்பத்துக்கு ஏற்ப அனைத்து பெரிய படங்களின் வாய்ப்புகளையும் நடிகைக்கு அப்படியே திருப்பி விட்டதே நடிகரின் கை வண்ணம் தான் என்கின்றனர். இந்நிலையில், திடீரென நடிகை புதிய படங்களில் ஏதும் நடிக்க மாட்டேன் என நோ சொல்ல காரணமே நடிகரின் உத்தரவு தான் என்கிற பகீர் கிசுகிசுக்கள் கிளம்பி உள்ளன.
நீ தான் என்னோட பூஸ்ட்: பல பஞ்சாயத்துகளில் நடிகர் ரொம்பவே தலையை பிய்த்துக் கொண்டிருக்கும் சூழலில் தானே மாட்டிக் கொண்டார். அதன் காரணமாக அடிக்கடி மண்டை ரொம்பவே சூடாகி விடுகிறதாம். இந்நிலையில், தனக்கு ஆறுதலுக்காகவும் தன்னை பூஸ்ட் பண்ணவும் ஒருவர் கூடவே இருக்க வேண்டும் என்கிற முடிவை எடுத்த நடிகர் அந்த நடிகையை சில மாதங்களுக்கு பக்கத்திலேயே ஆதரவாக இருக்க வேண்டும் என்றும் உன்னோட அரவணைப்பு இருந்தால் போதும், என்னோட அனைத்து டென்ஷன்களும் ஃப்ரீயாகி விடும் என கேட்க, நடிகையும் தனக்கும் கொஞ்சம் ரெஸ்ட் தேவை என்பதை புரிந்துக் கொண்டு ஓகே சொல்லிவிட்டார் என்கின்றனர். கூடிய சீக்கிரமே நல்ல செய்திகளும் வெளியாக வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர். என்ன ஆகப்போகிறதோ வெயிட் பண்ணிப் பார்ப்போம்.

