வருவாயா
வருவாயா


தன்னைப் பார்க்கவென புறப்பட்டு வரும் காதலொன்றை நினைவுபடுத்தும் இம்மழைவாசனைக்கு உன் நிறம்.
நீ வருகிறாயா?
நீ வருவாயா?
நீ வந்துவிடுவாய் தானே?
என்ற கேள்விகளை உன்னிடம் போலவே இம்மழையிடமும் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
காற்று சில்லிடும்போதெல்லாம் எச்சில் விழுங்கிக்கொள்கின்றன ஞாபகங்கள்.
முடிக்கப்படாத கட்டிடத்தின் ஆஸ்படாஸ் கூரையொன்று ஜன்னலுக்கு வெளியே தெரிகிறது. "என்ன பண்ற" என்கிற உன் குறுஞ்செய்திபோல், மழை விழுந்தால் கூப்பிடும் தானே?
உடைந்தழச்செய்யும் உன் குரல் போலவே, அடைபட்டுக்கிடக்கும் காதுகளுக்கு மழையோசை என்பது வலி நிவாரணி.