விழிகளில் உன் முகம்
விழிகளில் உன் முகம்


நான் தேடிய பரஸ்பரம் அன்பு அனைத்தும் உன்னிடத்திலே கண்டேன்..
எப்பொழுதுமே நினைத்துக் கொண்டிருந்த கற்பனை காதல் காவியமாய் ஒருநாள் என்னிடத்திலே நீயே தேடி வந்தாய் வாழ்க்கையில் காதல் எவ்வளவு ஆழமானதென்று அன்பிலே உணரவைத்தாய்..
அழுத்தமாய் என்னுளே மறைந்து கொண்டிருக்கிருக்கும் வலிகளை உன் சிரிப்பிலே வெளியே தூக்கி எறிந்தாய்..
இதுதான் காதலா என்று உள்ளுணர்வு மெய்க்கும்படி தன்னை மறந்து மெய்சிலிர்க்க செய்தாய்..
தமக்கென்று தனி உலகம் கொண்டோம் பேசிய உரையாடல்களும் காத்திருந்த பல நேரங்களை நினைத்து உன் நினைவின் மிதப்பிலே கிடந்தேன்..
உண்மை காதலுக்கு என்றும் மறைவில்லை..
விழிகள் மூடாத என் பார்வையில் காதல் முகமே தெரிகிரிகிறது என் ஆருயிர் காதலனே..