வாழ்க்கையின் புரிதல்!
வாழ்க்கையின் புரிதல்!
வாழ்க்கைப் பயணத்தை வேண்டுமானால் வருடங்கள் முடிவு செய்யலாம்! ஆனால் நேர்மையான வாழ்க்கைப் பயணத்தினைத் தீர்மானிப்பது நாமாக இருப்போம்!
வாழ்க்கையின் அனுபவத்தால் உணர்ந்த அனுபவ அறிவுதான் அழகாகவும் ஆழமாகவும் இருக்கும்!
வாழ்க்கையில் நிகழும் அனைத்து செயல்களும் கடவுளின் செயல்தான் என்று நம்புவது உண்மை அறிய விரும்பாத பகுத்தறிவு இல்லாத மனிதனின் அடையாளமே!
நமக்கான உலகத்தினை நாமே வடிவமைத்துக்கொள்ள வேண்டும்!
நம்முடைய வாழ்க்கைப் பயணத்தில் அன்னியர் யாரையும் உள் நுழையவோ, பிரவேசிக்கவோ அனுமதிக்கக் கூடாது!
நம்முடைய வாழ்க்கையில் நாம் சொந்தக் கருத்துடன் இல்லை என்றால் ஒவ்வொரு சிறிய செயல்களுக்கும் நாம் மற்றவர்களையே நாடி இருக்க வேண்டிய நிலை வரும்!
வாழ்க்கையில் அதிகம் நல்லவனாக இருந்தால் நம்மை நடிகனாக்கி விடுவார்கள்!
வாழ்க்கையில் அதிகம் பொறுமையுடன் நடந்தால் நம்மைப் பைத்தியமாக்கி விடுவார்கள்!
வாழ்க்கையில் எல்லோரையும் நம்பிவிட்டால் நம்மை ஏமாற்றிவிடுவார்கள்!
வாழ்க்கையில் கோபப்படாமல் இருந்தால் நம்மைக் கோமாளியாக்கி விடுவார்கள்!
வாழ்க்கையில் நாம் வெற்றி பெற்றிட நாம் எப்பொழுதும் நாளைக்காகச் சிந்திக்க வேண்டும்!
ஆனால் வாழ்க்கையில் வெற்றி பெற இன்றே செயல்படத் தொடங்க வேண்டும்! நம்முடைய உயர்ந்த எண்ணங்கள் தான் நமது வாழ்க்கையினை முடிவு செய்யும்!
