வாசிப்பும் நேசிப்பும்
வாசிப்பும் நேசிப்பும்


பட்டாம்பூச்சிகளாய் துள்ளித் திரியும்
சிறு கிள்ளைகளெலாம்
பட்டுப் பூச்சிகளென
வீடெனும் கூட்டிற்குள்
முடங்கியே - ஆட்டம் பாட்டம் மறந்து
மின்னணு சாதனங்களின் பிடியில்
உணவு உறக்கம் மறந்தே
இயந்திரமென உழல -
வெளியே நோயுமே
தன் பங்கிற்கு ஆட்டம் காட்ட
நாட்களும் ஓடி மறைய
சாதனங்கள் அலுப்பு தட்ட
புத்தகங்கள் - அந்நேரத்தில்
கிள்ளைகட்கு உற்ற துணையாக
பிறந்ததே - வாசிப்பின் மீதே
புதிய நேசமே !