உயிர்கொல்லி
உயிர்கொல்லி
பொக்கிஷசாமி தனது கல்லாப்பெட்டியின் அருகே சிகரெட் பாக்கெட்டுகளை வைத்து விற்றுக் கொண்டிருந்தான். அவனது மகன் ரஜினி ஸ்டைலில் வாயில் போட்டு பிடிக்கிறேன் என சிகரெட்டை தூக்கிப்போட்டுப் பிடித்ததைக் கண்டதும் பளீரென யாரோ எலும்புக்கூடால் மண்டைணை உடைப்பது போல் இருந்தது.
ரோடில் யாரோ ஒரு பாட்டி சிகரெட் புகை பட்டு கரோனா அதிகமாகி இறந்துட்டாங்களாம் என பொக்கிஷசாமி காதுபட கத்திவிட்டுப் போனாள். பயந்து போன பொக்கிஷசாமி சிகரெட் அனைத்தையும் அருகில் இருந்த சாக்கடையில் வீசி எறிந்துவிட்டு தனது மகனை அணைத்தபடி சோப்பு போட்டு கைகளைக் கழுவி விட்டான்.