தோல்வியில் முடியும் முயற்சி!
தோல்வியில் முடியும் முயற்சி!
சரியான தலைமையில்லாமலும் முறையான திட்டமிடல் இல்லாமலும் செய்கின்ற முயற்சியானது தோல்வியிலே முடியும்!
முறையாகத் திட்டமிடல் இல்லாமல் செய்கின்ற முயற்சியானது பல அறிவில் சிறந்த சான்றோர் உறுதுணையாக நின்று அச்செயலினை முழுவதும் செய்து முடிக்க உதவி செய்தாலும் அந்த முயற்சியானது தோல்வியிலே முடியும்!
எந்த ஒரு செயலையும் அதில் உள்ள நிறை குறைகளை முழுவதும் ஆராயாமல் தொடங்கினால் அந்த முயற்சியானது தோல்வியிலே முடியும்!
எந்த ஒரு செயலையும் நிறைவு செய்யும் வழிமுறைகளை ஆராயல் தொடங்கினால் அந்த முயற்சி தோல்வியிலே முடியும்!
நிர்வாகத்திறன் இல்லாமல் தொடங்கும் முயற்சியானது பலர் சேர்ந்து உறுதுணையாக இருந்து உழைத்தாலும் அந்த முயற்சி தோல்வியிலே முடியும்!
அனுபவம் இல்லாமலும் முறையான திட்டமிடல் இல்லாமல் செய்யும் முயற்சியானது இறுதியில் முடங்கிப் போய்விடும்!
