STORYMIRROR

hema malini

Inspirational Others

4  

hema malini

Inspirational Others

தனிமையின் பாடல்

தனிமையின் பாடல்

1 min
1

 🎤🎧


நீர்வீழ்ச்சியின் 

சலசலப்பு...அதன் 

தனிமையின் பாடல் 

இரைச்சலின் ஏகாந்தம்..


அலைகளின் 

அணிவகுப்பு...அதன் 

தனிமையின் பாடல் 

ஓம்கார பந்தம்...


காட்டில் 

மூங்கிலால்...அதன் 

தனிமையின் பாடல் 

ரம்மியத்தின் ஒப்பந்தம் 


குயிலின் 

தனிமையின் பாடல் 

தன்துணை நாடலின் 

நளினம்...


பறவைகளின் 

பலநிலைகளில் 

தனிமையின் பாடல் 

தேடலும் ஊடலுமாய்...


தனிமையின் பாடல் 

குளியலறையில் 

குதூகலமாக...


தனிமையின் பாடல் 

காதலில் 

அழைப்பிதழாக...


தனிமையின் பாடல் 

வாடலில் 

ஏக்கமாக...


தனிமையின் பாடல் 

இயற்கையை 

துணைக்கழைக்கும் 

கோரிக்கையாக...


தனிமையின் பாடல் 

களிப்பின் மூழ்கலில் 

இன்ப கேளிக்கையாக...


தனிமையின் பாடல் 

பக்தியில் 

உருக்கமாக...


தனிமையின் பாடல் 

கதவுகளிடையே 

சன்னக்குரலில் 

எண்ணங்கள் அலைபாய 


தனிமை 

ரசிக்க வைத்தால் 

இனிய வசந்தம்...


தனிமை 

ஏங்க வைத்தால் 

துயரகீதம்...


தனிமையின் பாடல் 

துயரில் வேண்டாம் 

தனிமையின் பாடல் 

இனிய சுரத்தில் 

நிலைக்கட்டுமே...


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational