காட்டு ராஜா 🦁
காட்டு ராஜா 🦁
கூட்டு ராஜாக்களின்
அரசியல் கும்மாளம்...இதில்
யார் நல்லவர் யாரென
நீ...வாக்களித்து
காட்டுராஜா...
வல்லவனுக்கு
வல்லவன் நீயென
வாழ்ந்து காட்டுராஜா
காட்டிற்கு
ராஜா சிங்கமா புலியா
இவைகளையே
இறந்தால் உண்ணும்
எறும்புகளே ராஜாதிராஜா...
வல்லூறு பறந்தால்
வானூர்தி அஞ்சும்
பறப்பதில் சிறப்பதாய்
நீ பறந்து காட்டுராஜா
அரச வித்தில்
எத்தனை கோடி
கனிகளும் விதைகளும்
அதை எண்ணியவர்
யாரென நீ
காட்டுராஜா...
நீ சீட்டுக்கட்டு ராஜாவா
சீமை ராஜாவா
ரோஜாவின் ராஜாவா
வெத்துவேட்டு ராஜாவா
உன் பிறப்பில்
உன் வாய்ப்பில்
நீ செயலில்
காட்டுராஜா...
காட்டுராஜா
சர்க்கஸ் கூடாரத்தில்
அடிமை ராஜாவாகலாம்
நாட்டுராஜா
வறுமை வட்டாரத்தில்
கூஜா தூக்கியாகலாம்
எல்லாவற்றையும்
எண்ணி
நீ நிமிர்ந்து காட்டுராஜா
அறிவின் திறனை
ஆக்கிகாட்டு ராஜா
அடிமை விலங்கொடியட்டும்...
பயிற்சியின் திறனை
ஊக்கிகாட்டுராஜா
பதக்கங்கள் தோளேறட்டும்...
ஆண்டவன் அமர
ஐந்தறிவு
காட்டுராஜா...
நம்மை ஆட்டிபடைக்க
பணத்தில் சின்னமாய்
சிங்க காட்டுராஜா
உலகையே
உன் கையடக்க
நீ ஆறறிவு
பகுத்தறிவாளன்
என உணர்ந்து
வென்று காட்டுராஜா🙌🏻👈🏻💪🏻
🦁🦁🦁🦁🦁🦁🦁🦁🦁
