STORYMIRROR

hema malini

Others

4  

hema malini

Others

ஏகாந்த வேளை🤗🤗

ஏகாந்த வேளை🤗🤗

1 min
8


கூடி உண்ணும் 

நிலைமாறி 

தனித்து உண்ணும் 

நிலையில் ...அது 

பசி நீக்கும் ஏகாந்தவேளை...


காதல் நிலையில் 

காமம் கழித்து 

இறைவனை காண்பது 

ஏகாந்த வேளை...


கானகம் காணாத 

ஏகாந்த வேளை 

தனித்த தவத்தில் 

நிகழலாம்...


கர்வம் அழித்த 

ஏகாந்த வேளை 

உறவின் பகையில் 

நிகழலாம் 


ஆர்வம் மிகுந்த 

ஏகாந்த வேளை 

ஆராய்ச்சியில் 

கைகூடலாம்...


பேசா மலருடன் 

பேசும் ஏகாந்த வேளை 

இன்பமாகலாம் 


இரகசியத்தோடு 

உறவாடும் 

ஏகாந்த வேளை 

ஞானியாக்கலாம் 


சுயநலத்தோடு 

உறவாடும் 

ஏகாந்த வேளை 

சூனியமாக்கலாம் 


தரமற்றதோடு 

உறவாடும் 

ஏகாந்த வேளை 

மனநோய் ஆக்கலாம் 


ஏகத்தில் 

அந்தமாயிருப்பது 

நிலையில்லா ஏகாந்தம் 

இங்கு வேளைக்கு வேலையில்லை...


அந்தத்தில் 

ஏகமாயிருப்பது 

நிலையான ஏகாந்தம் 

இங்கு ஏகாந்தத்திற்கு 

வேளை என்பதே கிடையாது 


அறிவில் ...

ஏகாந்த வேளை 

அற்புதம் செய்யலாம்

[18/06, 12:37 pm] Rakkan Thattu Lipi: வெயிலில் 

நிழலில் பெறுவது 

ஏகாந்த வேளை 


வறுமையில் 

செல்வம் கொழிப்பது 

ஏகாந்த வேளை 


பதவியால் 

சுகம் பல பெறுவது 

ஏகாந்த வேளை

[18/06, 1:25 pm] Rakkan Thattu Lipi: பறவைக்கு ஏகாந்தம் இன்ப குரல் ஒலிப்பிலே


பாமரருக்கு ஏகாந்தம் பசி தீர்ந்த சிரிப்பிலே


வனத்திற்கு ஏகாந்தம் மதியொளியில் வீசும் தென்றலிலே


நல்லோர்க்கு ஏகாந்தம் துயர் அற்றோர் காண்பதிலே...


இறைவனுக்கு ஏகாந்தம் தான் படைத்தவன் நன்றி மறவா... நிலையிலே


எங்கும் நிறைந்த ஏகாந்தம் இயற்கை எழிலிலே


நாம் தேடும் இறைவனின் ஏகாந்தம் அந்த இயற்கையின் மறைவிலே..

🎉🎉🎉🎉🎉😊😊😊😊


Rate this content
Log in