பால்ய நண்பர்கள்🤗🥰
பால்ய நண்பர்கள்🤗🥰
நெஞ்சில் பால் வார்த்த
பால்ய நண்பர்கள் சிலர்
வாயில் பாலூற்ற நினைத்த
பால்ய நண்பர்கள் பலர்
அவரவர் குடும்ப சூழல்
தூரமாகவும் துயரமாகவும்
பால்ய நண்பர்கள்
சந்திப்பில்...
தன் மனைவியிடம்
நட்புபற்றி உயர்வாக
நண்பனென்றால் உயிராக பாசம் காட்டும்
பால்ய நண்பர்
குசேலனென்றால்
கூப்பிட்டாலும்
காது கேட்காததாய்
மறையும் பால்ய நண்பர்கள் ஏராளம் ..
பால்ய நண்பர்களாக
பெயரை சொல்லி
அழைக்கும் உரிமை
தெய்வீக நட்பே...
தன் பெருமை பேசி
நண்பனின் முகம்
வாட வைப்பவர்
பால்ய நண்பர்களாகவே
இருக்க வேண்டாம்
நட்பு காட்டி
இடுப்புவேட்டி உருகும்
பால்ய நண்பர்களிடம்
எச்சரிக்கையாகவே
இருக்க வேண்டிய நிலை...
பால்ய நண்பர்கள்
உதவிநாடி வந்தால்
வாசலிலேயே பேசி
வழியனுப்பிவிடும்
சுயநல பாசமும் வேஷமே...
பாசாங்கிற்கே பிறந்தவர்கள்
பால்ய நண்பர்களாக
இருப்பது வீணே...
பால்ய நண்பர்கள்
பங்களிப்பு
விருந்திலும்
மது அருந்தலிலும்
மனம்விட்டு பேசி
வாய்விட்டு சிரித்திட
வாய்ப்புதான்...
பால்ய நண்பர்கள்
பலர் விலாசம்
இப்போது மாறிவிட்டது
விசுவாசமும் மறந்துவிட்டது...
ஒன்றாய் விளையாடிய
பால்ய நண்பர்கள்
சிலர் சாமியாராக
சிலர் மனையாளின்
கொத்தடிமையாக...
ஒன்றாய் படித்த
பால்ய நண்பர்கள்
சிலர் அதிகாரியாக
சிலர் ஆணவமுள்ளவராக...
ஒன்றாக பணியாற்றிய
பால்ய நண்பர்கள்
கடன் கேட்க விசுவாசியாக
கடன் வாங்கியதும்
பகையாளியாக...
கைதூக்கி விடும்
பால்ய நண்பர்கள்
கண் கண்ட தெய்வமாக
கையை உதறிவிடும்
பால்ய நண்பர்கள்
நெஞ்சில் பதிந்த காயமாக...
பால்ய நண்பர்கள்
பள்ளி கல்லூரியில் எடுத்த
புகைப்படமாக ...
எங்கோ என்றோ
சந்தித்தால்
மகிழ்வோம்
பிறவியில் பெற்ற
பாக்கியமாக...
பால்ய நண்பிகள்
பற்றிய குறிப்புகள்
சிலருக்கு
உள்ளக்கிடங்கில் கொந்தளிப்பாக...
நண்பியால் வெம்பிய
நினைவாக
ஆயுளுக்கும் மறவா
ஆற்றாமையாக
யாவுமே
பால்ய நட்பின்
பங்களிப்பாக
பரிசாக பாக்கியமாக
வாழ்வில் வசந்தமாக
நட்பின் உயிர்ப்பில்
மறுபிறவி எடுப்போமே..
🥰😊🤗🥰🥰🤗🥰🥰🥰
