பசியெனும் அரக்கன்🧟
பசியெனும் அரக்கன்🧟
பசியெனும் அரக்கன்
பன்முக வர்க்கன்...அவன்
வதைக்க பிறந்த உயிர்கோடி...அவனை
வதைக்க நீள்வதே
அன்னமிட்ட கைகள்...
பசி தன்னுடமை குடலியக்கம் ...
பட்டினி பொதுவுடமை தர்க்கம் ...
பஞ்சம் காலநிலை
இயக்கம் ...
பசியெனும் அரக்கன்
வறுமையிடம் முடக்கம்...
பசி ருசியறியாது
அகோரப்பசி..
களவறியாது
கோரப்பசி
குலமறியாது
வாட்டும் பசி
வம்சமறியாது
பசியெனும் அரக்கன்
புலவர்களின் தோழன்
பசியெனும் அரக்கன்
குரோதங்களின் கூட்டாளி...
பாவிகளின் பங்காளி...
அஹிம்சையின் எதிராளி...
பசியெனும் அரக்கன் ...
அன்னதானத்தின் எதிரி
அட்சய பாத்திரத்தின் அபகரிப்பாளன் ...
அதர்மத்தின்
அங்கிகாரன்...
பசிப்பிணி இல்லாது
மானிடம் காப்போம்...
பசியெனும் அரக்கனை
சம்ஹாரம் செய்வோம்...
உழவை மேம்படுத்தி
பல்லுயிர் காப்போம்...
அன்னத்தில்
மனம் வைத்து
நல் எண்ணத்தில்
நல்லுறவு சேர்ப்போம்...
பசிப்பிணி அரக்கனை
விறகாக்கி தீயிட்டு
அறுசுவை படைத்து
அகிலத்துயிர்
பசிப்பிணி தீர்ப்போமே...
🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻🌹🙏🏻