முயல்குட்டி🐇🐇
முயல்குட்டி🐇🐇
முயலுகுட்டி...நீ
மனித இனத்தை போல
பாலூட்டி...
முயல்குட்டி
உன் சிங்கார
விழி காட்டி
மயக்குகிறாய்...
காளையரை
மிரட்டும்
கன்னி விழிகளையும்
நீ உன்வசம்
திரட்டுகிறாய்...
பஞ்சு தேகத்தில்
நின் பரிணாமம்
அணிச்சத்திலும் அழகு
நின் துள்ளும் இளமையை
பூஞ்சோலை உலகு...
எலியின்
வம்சாவழி நீ
வலை செய்யத்தெரியாத
வனவாசி...
புதருக்குள்
மண்டியிடும்
புல்மேயும்
காட்டுவாசி...
உனக்கும் நாலுகால்
நாயிற்கும் நாலுகால்
நாய் வேட்டைக்கு நீ
எப்போதுமே தூண்டுகோல்..
நாயிடம் ஜீவகாருண்யம்
பேசினால்...நாய்
நான் பிடித்த முயலுக்கு
மூன்றுகால் என்கிறதே...
முயல்குட்டி நீ
முதலுக்கு முதலீடாய்
வளர்க்கப்படுகிறாய்...
உன்னை நாயிடம் மீட்டு
நன்றி கெட்ட
மனிதரிடம்
உணவாக்கப்படுகிறாய்
சேவகம் செய்து
பாதகம் செய்பவரின்
பாதுகாவலில்
பணத்திற்கு
விலையாக்கப்படுகிறாய்...
பாவத்தின் சம்பளம்
மரணம் ...
மரணத்தின் சம்பளம்
பணம்...
முயல்குட்டியின்
வாழ்வின் தரம்
மன ஆசையின்
விலைவாசி தரம்...
அச்சத்திலே
வாழ்ந்து
மிச்சத்திலே
கறியாகி ...
மனிதமும் மிருகமும்
உணவாக்கும்
முயல் குட்டியே...உனக்கு
காதுகளும் பின்காலும் நீளம் ...உன்
வாழ்நாள் மனித மிருகம்
ருசிக்கும் வரையே...
உன்னை
வேட்டையாட
வனம் தடுத்தாலும்
உன்னை
ருசி பார்க்க இன்னும்
தடையில்லையே...
உனை
கழுகும் கருடனும்
தூக்கி பறக்கும்
தூக்கு கயிறில்லாமல்
உனை
வனவிலங்கு
வேட்டையாடும்
விசுவாசமில்லாமல்
உனை
மனித இனம்
விலைபேசும்
பணம் கைவசமில்லாமல்...
மனித நாக்கு ருசிக்கு
கடிவாளமில்லாமல்...
இவைகளில் மீள
முயலே...
நீ முயலு
இல்லையேல்
மறைந்தே உயிர் வாழு .
ஏனென்றால்
நீ மறைந்து வாழ
உனக்கு புதர்...இங்கே
இறைச்சி வேட்கையில்
எத்தனையோ மனிதபதர்!
🐇🐇🐇🐇🐇🐇🐇🐇🐇
