கடைவீதி👯
கடைவீதி👯
கடைவீதி
கலகலக்க ...
விலைவாசி
கதி கலக்க...
உள்ளாருக்கு
எல்லாமிருக்கு ...
இல்லாருக்கு
ஏக்கமே கையிருப்பாயிருக்கு ...
பண்டிகை காலத்தில்
கடைவீதி
சொர்க்கபுரிதான் ...
திண்டாட்ட
காலத்தில்
பால் புட்டிக்கு
அலைந்ததும்...
மருந்துக்கே
வருமானத்தை
விழுங்கும்
பிணிகளில் பிணைக்கப்பட்ட
வாழ்வும் கடைவீதி
கரிசனம்தான்...
பலசரக்குக்கு
பட்டியலிட்டு
பற்றாக்குறை கண்டதும்
பட்டுச்சேலைக்கு
பாசம்காட்டி
நூல்சேலைக்கு
நூதனம் ஊட்டி
மனம் நெகிழ்ந்ததும்
இல்லற மகிழ்வே
கடைவீதி தந்தது ...
அடம் பிடிக்கும்
பிள்ளைக்கு
ஆறுதலும்...அது
மிஞ்சினால்
நாலு அறையும்
கடைவீதிக்கு சமர்ப்பணம்...
புல் ஆட்டிற்கு
இறைச்சி வீட்டிற்கு
பை கூட நிறையவில்லை
கைப்பணம் காலி
கடைவீதி கேலி செய்கிறதோ...
கடைவீதி
கலப்படங்களில்
கவனம் செலுத்தி
பொருள் வாங்க
வேண்டிய சூழலை
உருவாக்கியுள்ளது
கடைவீதியில்
நம்பிக்கைக்குரிய
வியாபார தளமுண்டு
கடைவீதியில்
பாதையை
ஆக்கிரமிக்க
சிலருண்டு...
பாசமும் வேஷமுமாய்
நமை ஏய்க்க
புதியவர்களுண்டு
கடைவீதியில்
பொருளின்
புகழிடமாய்
ஏகமுண்டு...
ஏமாந்தால்
பணம்பறிக்க
பலருண்டு...
கடைவீதியில்
கூறுகெட்டவன்
கூறு வைத்ததை
எடுப்பான் என்பார்கள்
கூறு எடுத்தாலும்
கூரிய அறிவால்
நன்றை
தேர்ந்தெடுங்கள்...
பாட்டியின்
முந்தானைக்கு
பேரன் பேத்திகள்
குறி வைப்பதும்...
தாத்தாவின்
இடுப்பு வேட்டி
பணத்திற்கு
முன்னுரிமை கொடுப்பதும்
கடைவீதியில்தான்..
கடைவீதி ...
காலத்தின் வளர்ச்சி
கண்கவர் அரசாட்சி
பொருளாதார புரட்சி
மனசாட்சியின் ஆராய்ச்சி கூடமே
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
