காதல் சின்னம்💘💝
காதல் சின்னம்💘💝
நாளை கணிக்கும்
காதல் சின்னம்
வான்மதி...
வாழ்நாளை கணிக்கும்
காதல் சின்னம்
மனித கதி...
காதல் சின்னம்
அன்பின் அடையாளமாக
சிறு அன்பளிப்பாக
காதல் சின்னம்
வதையின்
அடையாளமாக
ஆயுளுக்கும் அவதியாக
காதல் சின்னம்
கட்டிடக்கலையில்
தாஜ்மஹாலாக...
லசந்த மாளிகையாக
காதல் சின்னம்
பிரிவினையாக
தற்கொலையாக
விதி தின்ற
காதல் சின்னம்
மாற்றான் மனைவியாக
உயிர்நழுவிய காதலாக
விதி ஏற்ற
காதல் சின்னம்
கணவன்மனைவியாக
கடவுள் பிள்ளையாக...
காதல் சின்னம்
இதயமாக
ரோஜாவாக...
சிலருக்கு
காதலி தந்த செருப்பாக
காதலன் தந்த தாவணியாக ...
காதல் சின்னம்
பூவானால்
வாடும்வரை...
அன்பானால்
ஆயுள்வரை...
காதல் சின்னம்
அழகானால்
மற்றொரு அழகு
கிட்டும் வரை...
காதல் சின்னம்
திமிரானால்
இன்னொரு கை
மாறும் வரை...
காதல் சின்னம்
காற்றிற்கு
மலையும் கடலும்
மனிதத்திற்கு
வாழ்வும் தாழ்வும்...
மரித்த பிறகு
காதல் சின்னம்
ஊர் வியக்க ...
வாழும்போது
காதல் சின்னம்
உலகம் போற்ற...
காதல் சின்னம்
புத்தகமானால்
தாள்களை புரட்டலாம்
காதல் சின்னம்
நினைவுகளானால்
வாழ்நாளை புரட்டலாம்
ஏமாற்று பேர்வழியால்
காதல் சின்னம்
குழந்தையானால்
அனாதைகளை
உருவாக்கலாம்
காக்கும் கரங்கள்
காதல் சின்னம் ஆனால்
இல்லற ஆலயம்
உருவாக்கலாம்...
ஒருவர் வாழும்
ஆலயமும்
காதல் சின்னம்
வாழ வைத்தவருக்கும்
காதல் சின்னம்
ஆலயமாக...
காதலின் புனிதமாக...
💘💘💘💘💘💘💘💘💘
