காதலில் வீழ்ந்தேன்💘💝
காதலில் வீழ்ந்தேன்💘💝
பலர் கரங்களில்
காதலில் விழுந்தேன்
வயதோ அன்று ஒன்றரை...
விளையாடும்
காதலில் விழுந்தேன்
அது விளையாடும் வயதது...
ஈரேழு வயதில்
காதலில் விழுந்தேன்
முகப்பரு அரும்பிய
வயதது...
தோழமையாக
காதலில் விழுந்தேன்
வசீகரத்தில் மனம்
வழுக்கிய வயதது
கனவுகளோடு
காதலில் விழுந்தேன்
சொப்பனம்
சுகம் தந்த வயதது...
பார்வை உரசலில்
காதலில் விழுந்தேன்
மனதில் பூத்தேன்
ஊறும் வயதது...
புன்னகை பாய்ச்சலில்
காதலில் விழுந்தேன்
மனதில் சொர்க்கத்தை
தேக்கும் வயதது...
ஆடை உரசலில்
காதலில் விழுந்தேன்
ஆனந்தம் பீறிட்டு
ஏங்கும் வயதது...
அணைக்கும் நிலையில்
காதலில் விழுந்தேன்
இன்னொரு பிறவியை
எடுத்த வயதது...
மாலை மாற்றி
காதலில் விழுந்தேன்
ஜென்ம விமோசனம்
கண்ட வயதது...
இருவர் மகிழ
மூன்றின் வாய்ப்பு
தாய்மையாக
காதலில் விழுந்தேன்...
காதலில்
விழுந்தவர்
காலில் விழுந்தார்
காதல் விழுதாக
அது வாய்ப்பு...
இறுதி வரையில்
அலையாய் அணைத்தார்
கரையை தாண்டாத
காதலில் விழுந்தேன்...
எடுத்தேன் பிறவி
கொடுத்தேன் என்னை
எம் சந்ததி அதற்கு சாட்சி...
காதலில் விழுந்தேன்
என்பதற்கு இதைவிட
ஏது அத்தாட்சி...
காதலில் விழுந்தேன்
விளைந்தேன்
இணைந்தேன்
இயைந்தேன்
வீழ்ந்தேன்
வீழாது வாழ்ந்தேன்
விரசம் கலவாத
விரதக் காதலில் விழுந்தேன்...
புனித கடலில்
அமுத காதலில்
நிலைத்தேன்...
பல தேன் பருகி
பழுத்தேன்
ஊணுடல் உருகி
உடனுறைந்தேன்...
ஆவி பிரியும் வரை
காதலில் நிலைப்பேன்
மறுபிறப்பிலும் இணைய விண்ணப்பம்
கொடுத்தேன்!
💘💝💘💝💝💝💘💖💘

