தாமரை மலரைப் போன்ற காதலின் நினைவுகள்!
தாமரை மலரைப் போன்ற காதலின் நினைவுகள்!
தாமரை மலரைப் போன்ற எனது காதலியினை நினைத்து!
தாமரை மலரைப் போன்ற எனது சிந்தனைகளைச் சிறிது நேரம் சிதைத்து!
தாமரை மலரைப் போன்ற இதமாக இதயத்தினை வருடிவிடும் வாழ்க்கைப் பயணத்தினை நேசித்து!
தாமரை மலரைப் போன்ற மென்மையான கரங்களைக் கொண்டு தன் கூந்தலினை சரி செய்த எனது காதலியினை நினைத்து!
தாமரை மலரைப் போன்ற காஞ்சிப் பட்டுச் சேலையினை அணிந்து கொண்டு வந்த எனது காதலியினை நினைத்து!
தாமரை மலரைப் போன்ற எனது காதலியின் மென்மையான இமைகள் இரண்டையும் மூடித் திறந்ததை நினைத்து!
தாமரை மலரின் தேனைப் போன்று இனிமையாக யார் மனதையும் நோகாமல் பேசி விட்டுச் செல்லும் எனது காதலியினை நினைத்து!
தாமரை மலரின் சித்திரத்தினை தன் கால் விரல்களால் மணல் வெளியில் கோலமிட்டுச் செல்லும் எனது காதலியினை நினைத்து!
தாமரை மலரினை வாங்கித் தன் தலையில் சூடிக் கொண்டு என்னைக் காதலுடன் பார்த்துவிட்டுச் செல்லும் எனது காதலியினை நினைத்து!
தாமரை மலரின் மெல்லிய நறுமணம் போன்று என்னைக் காதல் வலையில் வீழ்த்திய எனது காதலியின் கண்களை நினைத்து!
தாமரைக் குளத்தில் என் காதலியினை நினைத்து அமர்ந்து இருக்கும் ஒரு சிறு வினாடியில் இந்த உலகம் மறந்து!
தாமரை மலரின் தேனைச் சுவைத்துக் கொண்டு எனது கடந்து காலத்தின் ஒருதலைக் காதலினை உணர்ந்தேனே!

