STORYMIRROR

Chidambranathan N

Classics Fantasy Inspirational

4  

Chidambranathan N

Classics Fantasy Inspirational

புதுமைப் பெண்ணாகிய அழகிய தோழியின் நினைவுகள்

புதுமைப் பெண்ணாகிய அழகிய தோழியின் நினைவுகள்

1 min
233

என்னை மெய்சிலிர்க்க வைத்த அழகிய தோழியின் நினைவுகள்!

நீர்வீழ்ச்சியில் கொட்டும் அழகிய காட்டாறு பொன்ற உன் தமிழ் இலக்கணப் பேச்சு வரிகள்!

துவண்ட மனிதனையும் எழுச்சி பெறவைக்கும் உனது தன்னம்பிக்கையான வார்த்தைகள்!

எளிய மக்களின் பெண்ணியம் போற்றும் உன் சமூக சிந்தனைக் கருத்துக்கள்!

பொருளாதாரக் குறைவினால் யாருக்கும் அடிபணியாத உன் ஆணவ ஆற்றல்கள்!

தமிழ்த்தாய்க்கு உன்மையான தொண்டு செய்ய வேண்டும் என்கின்ற உனது உன்னதமான வாழ்வின் இலக்குகள்!

நீ வாழும் காலங்களில் நானும் வாழ்கிறேன் என்கின்ற மகிழ்ச்சிகள்!

உன்னுடைய வாழ்வில் நீ தனித்துப் பயணித்தாலும் என்றும் என் நினைவுகளில் வாழும் உனது சமூக சீர்திருத்தக் கவிதைகள்!

நிலையற்ற இந்த உலகில் நிரந்தர புகழ் கொண்டு என் நினைவுகளில் வாழ்ந்து நிரந்தரமாகப் பயணிப்பவள்!

நீங்காத நட்பு கொண்ட எனது பாசமிகு தோழியின் நினைவுகள்!


Rate this content
Log in

Similar tamil poem from Classics