புதிய காதலைப் புரிய வைத்தாய்!
பார்த்துப் பார்த்துப் பதற வைத்தாய்!
பேசாமல் கனவு காண வைத்தாய்!
எட்டாத உயரத்தில் என் இதயத்தைப் பறக்க வைத்தாய்!
கிட்டத்தட்ட உறைய வைத்தாய்!
கிட்டாமல் நோக்க வைத்தாய்!
கோபக் கனலை உமிழ்ந்துதான் உன் காதலைச் சிந்திக்க வைத்தாய்!
மணம் வீசும் பூவைப் போல உந்தன் காதலை உணரவைத்தாய்!
ஒருநாள் விதையானாய் மனதிற்குள்ளே!
வழிபார்க்கும் போதே மரமாய் நெஞ்சுக்குள்ளே!