பத்தாம் வகுப்பு சிறுமி
பத்தாம் வகுப்பு சிறுமி
உண்டியலில் போட்ட
உணவுக்கான சிறுதுளி
அரசின் டாஸ்மாக்
கடை வாசலில்
அப்பாவின் குடிக்காக
உடைக்கப்பட்ட
வேதனையில் நான்!
மறுநாள் குடிக்காக
பணக்காரக் கிழவனின்
மறுமணத் தேடுதலுக்காக
எனது வாழ்க்கை
நிரந்தரமாக பணயம்!
என்று தணியும்
இந்த குடிமகன்களின் தாகம்!