போட்டி
போட்டி
வெண்ணிலவை பிடிக்க
போட்டி போட்ட போது
மகிழ்ச்சி மட்டுமே
நிறைந்திருந்தது
மனத்திற்குள்ளே
எங்கிருந்து வந்ததோ
நமக்குள் இந்த மாற்றம்
நீ, நான் என்று போட்டி
போடுகிறோம் பணத்திற்காக
தோற்று போய்விட்டதா??
பணத்திடம் நம் குணம்
வெறும் காகிதத்திற்காக
மற்றவர்களை பின் தள்ளி
முன்னேறுகிறோமே
இதுதானா நம் வாழ்க்கை??
அப்பாவிடம் நற்பெயர் வாங்க
அனைத்து வேலையையும் செய்வோமே மீண்டும் வாராதா
அந்த அழகிய நாட்கள்??
