பணம்
பணம்
பாசத்தை கோட்டைவிட்ட
நிகழ்கால மனிதர்கள்
மாறுவது எப்போது?
கல்வியும் மருத்துவமும்
பணமாகிவிட்ட காலத்தில்
வெற்றி இலக்கை எட்ட
நல்ல உறவுகளை சல்லடை
போட்டு சலித்து தேடத்தான் ஆசை!
பொறாமையும் குரோதமும்
சுயநல உறவுகளின்
ஆணிவேராக மாறிய நிலைக்கு
பணமாகிவிட்ட மருத்துவம்
கைக்கெட்டாத தரமான கல்வி
ஏழைகளுக்கு கிடைக்கும்
நன்நாளே தொழில்உலகின்
முன்னேற்ற கதவின்
வெற்றித் திறவுகோல்!