STORYMIRROR

Chidambranathan N

Classics

3  

Chidambranathan N

Classics

பள்ளித் தோழியைப் பற்றிய நினைவுகள்

பள்ளித் தோழியைப் பற்றிய நினைவுகள்

1 min
231

பறவையின் சிறகுகளைப் போன்று படபடத்த உன் இமைகள் கண்டு!
பரிசுத்தமாகப் போனது என் கண்கள்!


அமைதி அற்ற உன் மான் விழிகள் அங்கும் இங்கும் அலை பாய!
அமைதியாக அசையாது அளக்கிறேன் உன் விழிகளை! 


நான் உன்னைப் பதினாறு வயதில் பார்த்தாலும்!
நான் உன்னை அறுபது வயதில் பார்த்தாலும் நீ அதே அழகுதான்!


நான் காணும் பொழுதெல்லாம் வயது முதிர்ந்த பேரழகுதான்! 
நான் உன்னை ரசித்த முகம் என்பதால் நீ என்றும் கருமையான அழகுதான்! 


நான் உன் நினைவுகளை என் இதயத்தில் சுமக்கும் வரை நீ ஒரு கருப்பு மயில்தான்!
தோழியாய் நீ வந்து என் விரல் பிடித்த நொடியிலே!
தோரணமாய் நான் சாய்ந்தேன் புது மனிதனாக உன் மடியிலே! 


மனதிற்குள்ளே நம் நினைவுகளை அசைபோடத் தடுமாறி நின்ற போதும்! 
மனதிற்குள்ளே நம் உள்ளம் மகிழ்ந்து சொல்லும் நம் நேசத்தையே!


மருத மர நிழலில் பேசி நின்றன நம் பழைய நினைவுகள்! 
மனதை விட்டு என்றும் அகலாது நம் சிந்தனை நினைவலைகளை!


Rate this content
Log in

Similar tamil poem from Classics