நீயே
நீயே
காலைவரும் கதிரவனும்
கண்கவரும் கவின்மலரும்
மாலைவரும் வெண்ணிலவும்
மனங்கலரும் தென்றலதும்
விண்முளைக்கும் விண்மீனும்
வியக்கவைக்கும் மலையழகும்
மண்பூத்து மணம்வீசும்
மலர்பலவும் நீயன்றோ?
சுவாசிக்கும் ஆக்சிஜனும்
சிறகடிக்கும் இதயமதும்
நேசிக்கும் இதயமதால்
நன்றோடும் குருதியதும்
வாசிக்கும் நூல்பலதின்
வணங்குகின்ற நற்கருத்தும்
நேசமுள்ள தோழியேநின்
நெஞ்சமன்றோ இயக்குவது?

