நான் உன்னைப் பார்க்கும்பொழுது நீ என்னைத் திருப்பிப் பார்க்கையில்!
நாணித் தலை குனிந்து நான் பரவசம் கொண்டேன்!
நான் உன்னிடம் பேசும் தருணத்தில் உன் உதடுகள் அசையும்பொழுது!
உன் பேச்சுத் திறமை வெளிப்படுவதைக் கண்டு சிலிர்ப்பு கொண்டேன்!
நான் உன்னிடம் பழகும்பொழுது உன் கண்களில்!
நாணம் கொஞ்சுவதைக் கண்டு நானும் சிறிது நாணம் கொண்டேன்!
நான் உன்னையே பார்த்துக்கொண்டு இருக்கும் நேரங்களில்!
நாலா புறமும் உன் கண்களை அலையவிட்டு பின் என்னை நோக்குவதைக் கண்டு நன்றாக ரசித்துக் கொண்டேன்!
நான் இல்லாத நேரங்களில் உன் கண்களில்!
நாரைப் பறவைகளின் படபடப்பைப் பார்த்துக் கொண்டேன்!
நான் உன் கையைப் பிடித்துக் கொண்டு சாலையைக் கடக்கையில்!
நான்காம் விரலுக்குக் கீழே உள்ள உன் கரு மச்சத்தினை கண்டு கிளர்ச்சி கொண்டேன்!
நான் வாழ்க்கையில் நன்கு முன்னேற நினைக்கையில்!
நான்கு நல்வாக்குகளை உன் வாயிலிருந்து கேட்க ஒற்றைக் கால் தவம் கொண்டேன்!
நான் உன்னிடம் நீ பேசும் ஆங்கில அறிவைக் கற்கும்பொழுது!
நாணல் போன்ற உன் புருவ உயர்வைக் கண்டு நான் மிரட்சி கொண்டேன்!
நாம் பயணம் செய்யும் வேளையிலே நீ உன் முரட்டுக் கைகளால் அழைக்கும்பொழுது!
நாம் உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தினர் என்று உணர்ந்து கொண்டேன்!