முழு நிலா
முழு நிலா
இயற்கை வரைந்த ஓவியத்தில்
சிந்திய கருப்பு மை
பூகம்பம்
கடவுள் படைத்த அனாதைக்குழந்தைகளின்
பிறப்பு ஆண்களின்
அடிமைத்திமிர்
வானமகள் பிறைநுதல் நடுவில் இட்ட
வெள்ளிப்பொட்டாய் உலகின்
அலங்கோலத்தை பிரகாசமாய் காட்டி
சாய்ந்து கிடக்கிறாள்
முழுநிலா!