மழை எழுதிய கடிதம்
மழை எழுதிய கடிதம்


கனவுகள் நனவாக
சாதிகள் மதங்கள்
தடையாக இருக்கலாமா!
சாதி மதங்களினால்
ஏற்பட்ட பிளவுகளினாலன்றோ
அன்று அன்னியன்
ஆண்டான் என்ற காட்சிக்கோலம்
மறந்தால் இன்னொருமுறை
அடிமைகளாவோம்
என்பதை எத்தனைபேர்
அறிவார்!
பண்பாடு தரும் கல்வி
இன்று ஏனோ
இலஞ்சப்போர்வையில்
முடங்கியதால்
சுயநலம் தலைதூக்கி
தீவிரவாதம் வேருன்றி
அசுரத்தனமாக விஷவிருட்சமாய்
தலைதூக்கி நிற்கிறது!
பசுமை வளம் மறந்து
இயற்கைச்செல்வத்தை
பேணி வளர்க்க
மறந்த மாக்கள்
இன்று நீருக்காக
பூமித்தாயின்
மடியை சிரட்டையால்
சுரண்டிக்கொண்டிருக்கின்ற
அவல நிலை தொடர்ந்தால்
புவிமகள் தன்மடியில் அனைவரையும்
நிரந்தரமாக தாலாட்ட
வைத்திடுவாள்!