STORYMIRROR

Harini Ganga Ashok

Romance

3  

Harini Ganga Ashok

Romance

மௌன ராகம்

மௌன ராகம்

1 min
181

பக்குவம் அறியா

பருவத்தில் முளைத்து;

ஏதேதோ எண்ணங்களை

நெஞ்சில் வளர்த்து;

சிறகில்லாமல் வானில்

பறக்க வைத்து;

மறக்கவியலா

தருணங்களை

பரிசளித்து;

தனிமையில் இனிமை

காண வைத்து;

அகத்தையும் முகத்தையும்

அன்பால் நிறைத்து;

சாரல் மழையாக

வாழ்வை இனிக்க வைத்த

காதல் காற்று

புயலாக வீசியிருந்தாலும்

தாங்கி கொண்டிருப்பேன்,

மௌனமாக கடந்துவிட்டது

தனக்கான தனி பாதையில்!


Rate this content
Log in

Similar tamil poem from Romance