கவிதை
கவிதை
எழுத்துக்களை அ(ஆ)சையாக்கி ……
அ(ஆ)சைகளை சீராக அடுக்கி….
அடுக்கிய சீர்களை நேராகவும்…
நிறையாகவும் திரட்டி…
நான்கு தளைகளாகக் கட்டி…
தளைகளை ஐந்து அடிகளாக்கி….
அழகிய எண்தொடைகளாகத் தட்டி….
உள்ளத்தில் எழும் வார்த்தைப் பூக்களை…..
கற்பனையென்னும் நூல் கொண்டு தொடுத்து…
நயம் குறையாது அணிகளை அணிகலன்களாக்கி….
செய்யுள் என்னும் ஆபரணம் செய்து….
அழகிய தமிழ்ப் பெண்ணின் அங்கங்களுக்குச் சூட்டி….
அவள் அங்கங்களை ரசித்து…ருசித்து….
வாசகனாம் மணமகன் இன்புறுவதே கவிதை!