கரு
கரு
அன்னாசிப் பழமாய்
எனக்கு உயிர்தரு பொருளாய்
நினைத்து விழுங்கிய
யானைத் தாயே!
மனித மனங்களில்
இன்னமும் ஆலகால விஷம்
பதிந்த காரணத்தினால்
உன் முகம்
பார்க்காமலே மடிகின்றேன்!
இனியொருமுறை
செடியின் மடியில்
விளைந்த பழங்களை
மட்டுமே உணவாக
எடுத்துக்கொள்வாயா!
மனிதர் கைகளால்
தரும் பாவங்களை
வாங்கும் அவலம்
நமக்கு இனி எதற்கம்மா?
போகும் வழியில்
தும்பிக்கையானிடம்
நீயும் வந்து சேர
பிரார்த்திக்கிறேன்!