STORYMIRROR

Chidambranathan N

Romance

3  

Chidambranathan N

Romance

கனவுலகக் காதல்

கனவுலகக் காதல்

1 min
182

நீ என் கண்ணைப் பார்த்த முதல் கணமே!
நான் உன் அனுமதியின்றி காதல் செய்கிறேன்!


காந்தம் போன்ற உன் கண்களால்!
கவர்ந்திழுக்கப் பட்டு வீழ்த்தப்படுக் கிடக்கிறேன்!


என்னால் உன் கண்களைப் பார்ப்பதற்காக 
என் கண்களைச் செல்லமாகக் கடிந்து கொண்டேன்!


என் இமை மூடப் பயந்தேன்!


என் நிமிடங்களைக் கணக்கிட்டு செலவு செய்தேன்!


உன்னிடம் பழகிய நிகழ்வுகளை!
உனது செல்வமாய் என் மனதில் புதைத்திருக்கிறேன்!


உன்னைக் காணமுடியாத நேரங்களை!
உன் நினைவுகளால் என்னை அமைதிப்படுத்த முயற்சி செய்கிறேன்!


உன் முன் என் வார்த்தைகளைத் தொலைத்துவிட்டு!
உன் கண்கள்மூலம் என் காதலைச் சொல்ல முயன்றேன்!


என் காதல் உனக்குப் புரிந்ததா? இல்லையா?
என்று எண்ணித் தூக்கத்தைத் தொலைத்தேன்!


உண்மைகளை நம்பவில்லை கனவுகளை நம்பினேன்!
உண்ணாமல் உறங்காமல் உன்னால் அலைந்தேன்! 
உன் மனதில் என் மனதுடன் உயிராக வாழ!


கனவுலகை விட்டுப் பிரியப் போகிறேன்!
கண்ணீருடன் உன் அனுமதியின்றி! 
கடந்த கால நினைவுகளை உன்னிடம் கடனாகப் பெற்று!


காரணம் கேட்காதே!
இது கனவுலகக் காதல்!


Rate this content
Log in

Similar tamil poem from Romance