STORYMIRROR

Uma Subramanian

Children

4  

Uma Subramanian

Children

கண்ணே பாப்பா!!

கண்ணே பாப்பா!!

1 min
395

அதிகாலையில் சீக்கிரம் எழுந்திடு!அவயங்களை நன்றாய் கழுவிடு!

அளவாய் உணவை உண்டிடு!


அம்மை அப்பனை வணங்கிடு!அழகாய் ஆடை அணிந்திடு!அன்றாடம் பள்ளி சென்றிடு!ஆசிரியரை நாளும் தொழுதிடு!ஆர்வத்தோடு கல்வி கற்றிடு!ஆடிப்பாடி தினமும் மகிழ்ந்திடு!அறிவை நீயும் வளர்த்திடு!அன்றே பாடம் படித்திடு!அன்னையிடம் இல்லறம் கற்றிடு! அவசியத்திற்கு செல்லைத் தொட்டிடு!அதிக நேரம் காணொளி தவிர்த்திடு!

அறியாதாரோடு தூரமாய் நின்றிடு!அங்கங்களைத் தொட்டுப் பேச மறுத்திடு!அச்சம் கொள்ள வெறுத்திடு!அன்பாய் எல்லோரிடமும் பழகிடு!ஆண்டவனை நன்றியோடு நினைத்திடு!அளவாய் நீயும் உறங்கிடு!அகிலம் போற்ற வாழ்ந்திடு! 

  


Rate this content
Log in

Similar tamil poem from Children