உன்னை போல இருப்பேன்
உன்னை போல இருப்பேன்


நான் பிறந்த நொடி முதல் ஒவ்வொருநொடியும் என் வளர்ச்சியின் தூண்டுகோல் நீ,
உன்னால் இந்த உலகையே நான் முற்றிலும் வேறு கோணத்தில் பார்க்க முடிந்தது,
உன்னுடைய அன்பு நான் பல சாதனைகள் செய்ய உண்டுகொல்லாக இருக்கிறது.
நான் துவண்டு நின்ற தருணத்திலும் நீ என்னக்கு பலமாகவே நின்றாய்,
நீயின்றி நான் வாழ முடியாது என்ற சூழலிலும் என்னையும் இந்த மண்ணையும் பிரிந்தாய்,
அணுவும் அசையாமல் உறைந்து செய்வது அறிய நின்றேன் நானே அன்று.
>உன் வார்த்தைகள் இன்னும் ஓயாமல் என் செவிக்களில் ஒலிக்கின்றன மந்திரம் போல,,
இனி வரும் அனைத்து நொடியிலும் உன் அறிவுரைகளை பின்பற்றி வாழுவேன் நான்,
அனைவரையும் அன்போடு நேசிப்பேன்; உன்னை போல பிறருக்கு எப்போதும் உதவுவேன்.
என் அன்பு தந்தையே நீ இவ்வுலகை நீங்கிய தருணம் என் வாழ்வின் துயரமான நாள்,
அதை இன்றும் மறவேன் உன் புன்னகை முகத்தை என் கண்கள் மறக்கவே மறக்காது,
உன் எண்ணம் போல நான் சிறப்பாக வாழ்வேன்; கவலையின்றி நீ உறங்கு மேல் உலகில்.