தீயின் சாபம்
தீயின் சாபம்


சின்னஞ்சிறு ரோஜா மொட்டுகள்,
வான் தேடும் இளங்காற்று,
நாளை பற்றி யோசிக்காமல்,
இன்று என்ன என்று சிந்திக்காமல்,
பிஞ்சு குழந்தைகள் பள்ளிக்கு சென்றனர்,
அறியாத வயதில் அவர்களும்,
தன் பிள்ளை,மகள் பிற்காலத்தில்
சாதிப்பார்கள் என்று
நம்பி,
பள்ளிக்கு அனுப்பினர்
சமையல் கூடத்தில் தீ,
குழந்தைகள் அறியாமல் படித்து இருந்தனர்,
தீ கொழுந்தினை கிளம்பியது,
சின்னஞ்சிறு குழந்தைகள் என்ன செய்வார்?
நெடிய படிக்கட்டக்கள் குழந்தை எப்படி வெளியே வருவார்கள்?
ஆசிரியர்கள் குழந்தைகளை காப்பாற்றாமல் தங்கள் உயிரை
காக்க ஓடினர்,
சின்னஞ்சிறு குழந்தைகளின் அழுகுரல் இந்த மனசாட்சியற்ற ஆசிரியர்களுக்கு கேட்கவில்லை,
பிஞ்சு குழந்தைகள் என்ன பாவம் செய்தனர்?
அவர்கள் ஓடவும் முடியவில்லை, தீயைக் கண்டு அஞ்சினர்,
வஞ்சகம் நெஞ்சை க
ொண்டவர்களுக்கு இந்த பச்சிளம் குழந்தைகள் தீக்கிரையாகின,
எங்கும் கதறல் எங்கும் அழுகை சத்தம்,
பெற்றோர்கள் கதறி துடித்தனர்,
பார்ப்பவர்கள் நெஞ்சமெல்லாம்
பதைபதைத்தது,
பிஞ்சுகள் உடல் கருகி இறந்தனர்,
91 குழந்தைகள் இந்த வஞ்சக ஆசிரியர்களால் தீக்கு இறை ஆகினர்
பார்ப்பவர்கள் எல்லாம் கண்ணீர் வடித்தனர்,
நெஞ்சை உருக்கும் இந்த கொடியை தீ விபத்து கும்பகோணம் பள்ளியில்,
வருடங்கள் உருண்டோடி நாளும் பிஞ்சு குழந்தைகளையும் மறக்க முடியவில்லை,
தங்கள் கடைசி காலத்தில் தன் மகனையும் மகளையும் இழந்த பெற்றோருக்கு யார் ஆறுதல் சொல்வர்,
ஆசிரியர்களோ வெளியில்,
குழந்தைகளின் பெற்றோர்
வேதனையில்,
என்று போகுமோ இந்த வேதனை,
காலங்கள் மறைந்தாலும் சின்னஞ்சிறு குழந்தைகளின் அழுகுரல் இன்று நமது செவவியல், அரசு இதற்கு எபொழுதுஒரு தீர்வு காணும்,
என்ற நம்பிக்கையில்
..#sm boss