ஒட்டாத ஏடு
ஒட்டாத ஏடு


சோகத்தில்
சொர்க்கத்தில்
நுழைந்து
துள்ளி குதித்து
வெளியே சென்றனர்
போதனை ஆகும்
சில பாடங்களில்
சில மதிய வேளை
மரண துக்கமும் வரும்
வீட்டு பாடத்தில்
விடையில்லாமலும்
விடுமுறை
பதிலுக்கு
புதிய கதையாகவும்
கதாபாத்திரத்திரமாகவும்
மதிய வேளை உணவை
இடைவேளையிலே தின்று விட்டு
திருடர்களை போல் வேறு நண்பர்கள் இடம்
வாங்கி உண்டு
கிடைத்த வேளையில் விளையாடி
இவ்வனைத்தும்
தாமரை இலை மேல்
இன்று
ஆன்லைன் இல்
அனைத்தும் சென்று
உயிர்காக்கும் பருவத்தை
சின்ன திரையில்
தொடுதிரை யில் தொலைத்துக் கொண்டிருக்கும்
தருணம்
ஒட்டாத ஏடு