காதல் பறவைகள்
காதல் பறவைகள்


உன் அழகை ரசிக்க இரு கண்களும் போதாது உனது சிவப்பு வண்ண அலகினை கொண்டு ஓட்டினிலே தீட்டி கூர்மை கொண்டுள்ளாயே..!
உன் கண்களை சுற்றி வெள்ளை நிற வளையம் போட்டு வைத்திருக்கிறாயே..!
உன் பலவித நிறமும் என் மனதை கொள்ளை கொள்கின்றதே..!
ஒன்றோடு ஒன்றாக சேர்ந்து கூட்டினுள் செய்யும் காதலை பார்க்க ஓடோடி வந்தேனே..!
பெண்கிளி அடை காக்க ஆண்கிளி இரை தேடி ஊட்டி கொஞ்சி தழுவி மகிழ்கின்றதே..!
வானிலே காற்றோடு பறந்து சென்றாலும் காதலோடு சுதந்திரமாய் ஒன்றோடு ஒன்று பிரியாமல் பறக்கின்றதே..!
என்ன ஒரு அற்புதமான காதல் இது கேட்கும் போதே மெய்சிலிர்கின்றதே..!