காதல் மொழி
காதல் மொழி
நீ பேசுவதற்கு முன்னே
உன் கொலுசுகள் என்னுடன்
பேசட்டும் என காத்திருந்தேன்
கொலுசுகள் மறந்த கால்களுடன்
நீ வந்தாய் இக்கால
நாகரிக மங்கையாய்
உணர்ச்சிகளின் பரிமாற்றங்கள்
சில நிமிடங்களில் முடிந்துவிடும்
மனத்தளவினில் காதல் நீடித்திட
தேவை எனக்கு அந்த
கொலுசுகளின் காதல் மொழியே..
காதல் மனதினைக் கட்டிப்போடும்
வித்தையினை ஏன் மறந்தாய்?