STORYMIRROR

Harini Ganga Ashok

Inspirational Children

3  

Harini Ganga Ashok

Inspirational Children

இயற்கை அன்னை

இயற்கை அன்னை

1 min
305

அம்மா என்னும் சொல்லை விட

அழகான சொல் இருந்திடுமா

அம்மா என்னும் உறவின் முன்

வேறு உறவுகள் ஜெயித்திடுமா

பத்து மாதம் சுமந்த அன்னையை

சில கணங்கள் நாம் பார்த்துக்கொண்டாலே

பூரித்து போவாள்

காலம் எல்லாம் நெஞ்சில் அவளை சுமந்தால்??

நாம் வளரும் பொழுது கூட அவள்

எதிர்பார்ப்பதில்லையே நம்மிடம்

பார்த்து பார்த்து செய்கிறாளே அவளை ஏன் கவனிக்க தவறுகிறோம்??

உலகை காட்டியவளையும் மறக்கிறோம்

உயிர் வாழ சுவாசத்தை தருபவளையும் மறக்கிறோமே

இறுதி வரை நம்மை தாங்கும்

பூமியும் தாய்தானே

இனிமேலாவது

அவளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்வோம் தோழர்களே

பசுமை என்னும் கிரீடம் என்றும் அவளை அலங்கரித்து இருக்கட்டும்...


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational