இரவு நேர காதலர்கள்
இரவு நேர காதலர்கள்
ஓவென்று இரைந்து
பெருநீராய் பெருக்கெடுத்து
ஒரே இரவில் கொட்டித் தீர்த்த
பெருமழையின் பின்னான
அமைதி மிக அந்தரங்கமானது
படபடவென்ற துளிகளின் நிறைவு
சிற்சில நிரல்களின் தொடக்கம்
அந்தச் சாரல் துளிகள்
மௌனமாக நிலமகளுடன்
கூடிக் களித்து
காதல் இரகசியம் பேசியது
இதைப் பொறுக்காத பறவைகள்
பேரமைதியின் சுகத்தைக் குலைக்க
பெருங்குரலெடுத்து இரைந்தன
எவ்வளவு பொறாமை
அந்தக் காதலர்களைக் கண்டு!
அந்தப் பேரமைதியின் நிலைகுலைத்து
பெருங்குரலின் சுரம் ஏற்றி
எள்ளி நகையாடின
அந்த இரவு நேர காதலர்களைக் கண்டு!