இப்படித்தான் பிடித்திருக்கிறது
இப்படித்தான் பிடித்திருக்கிறது


ஒரு சிலரை இப்படித்தான் பிடித்திருக்கிறது.
அவர்கள் எவ்வளவு கண்றாவியாக இருந்தாலும் ரசித்துத் தொலைப்போம். அவர்கள் எத்தனை அழிச்சாட்டியம் செய்தாலும், 'சரி இனியாவது ஒழுங்கா இரு' என மன்னித்துக்கொண்டே இருப்போம்.
அவர்கள் எவ்வளவு கடுப்பேற்றினாலும், வெறுத்து ஒதுக்கத் தெரியாமல் முழிப்போம். அவர்கள் எவ்வளவு அழவைத்தாலும், கண்களைத் துடைத்தபடி 'சாப்பிட்டியா?' என்று குறுஞ்செய்தி அனுப்புவோம். அவர்கள் நம்மை கோபத்தின் விளிம்புக்கே தள்ளினாலும், 'ஏன் என்னை சாவடிக்கிற? ஒழுங்காத்தான் பேசித்தொலையேன்' என்று கோபமாய் கெஞ்சுவோம்.
அவர்கள் நம்மை விரக்தியின் உச்சத்திற்கே தள்ளினாலும், எழவு டிசைனை நொந்தபடி வாட்சப் லாஸ்ட் சீனை பார்த்துக்கொண்டு காத்திருப்போம்.
ஆம், ஒரு சிலரை இப்படித்தான் பிடித்திருக்கிறது.