Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

hema malini

Inspirational Others

5  

hema malini

Inspirational Others

இணைபிரியா உறவுகள்

இணைபிரியா உறவுகள்

1 min
4



விண்ணில்...

உதயகதிரும் கிழக்கும் 

மறைகதிரும் மேற்கும் 


மண்ணில்...

கடலும் அலையும் 

நதியும் கரையும்...

மண்ணும் மலையும் 


உடலில்...

மனமும் ஆசையும் 

இணைபிரியா உறவுகள்...


மாயையில்...

கற்பனையும் கனவும் 

கோடையும் கானலும்...

இணைபிரியா உறவுகள்...


மர்மத்தில்...

அபூர்வமும் அதிசயமும் 

மாயமும் விஞ்ஞானமும் 

இணைபிரியா உறவுகள்...


ஆடையில்...

மானமும் மதிப்பும் 

பெண்ணில்...

தெய்வீகமும் 

தாய்மையும் 

இணைபிரியா உறவுகள்...


ஆபரணத்தில் 

அழகும் ஆபத்தும் 

இணைபிரியா உறவுகள்...


பறவையில் அன்றில் 

போல் ஒன்றில் 

மனிதமும் இணைபிரியா

உறவுகள் காண்பது 

இல்லறம்...


சாலையும் சக்கரமும் 

சிலையும் தெய்வீகமும் 

வாழ்வும் வளமும் 

நட்பும் புனிதமும் 

இணைபிரியா உறவுகள் ஆகுதல் 

என்றும் சிறப்பே காப்பே🤗🤗🤗🤗


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational