STORYMIRROR

hema malini

Inspirational Others

4  

hema malini

Inspirational Others

மயங்கிய நேரம்..

மயங்கிய நேரம்..

1 min
4

ஆதாம் ஏவாள் மதி மயங்கிய நேரம் பூவுலகில் பிறவிகள் அவதரித்தது...


உடன் இருக்கும் தூதுவன் பொற்காசுகளுக்கு ஆசைப்பட்டு 

 மதி மயங்கிய நேரம்

கடவுளை சிலுவையில் அறைய வைத்தது...


ஆசையில் மனம் 

மதி மயங்கிய நேரம்

இயற்கைக்கு பலவிதமாக இன்னல் விளைந்தது


பலன் தரும்

விஞ்ஞான வளர்ச்சியில் 

மதி மயங்கிய நேரம் அனைத்தும் வியாபாரம் ஆனது...


ஆண்டவன் ஆனாலும் அவன் மதி மயங்கிய நேரம் அவனுக்கு ஆபத்துகளையே விளைவித்திருக்கின்றது...


அவ்வை ஆணவத்தில் மதி மயங்கிய நேரம் அவருக்கு சுட்ட பழத்தால் ஞானம் வரவழைத்தது...


மதி மயங்கும் நேரம் தன்மதி மயங்காத மனிதர்களால் அவர்களிடம் தோற்றுப் போகின்றது...


தன் சுயமதி நன்மதி ஆனால்...

மதிமயங்கும் நேரம் 

மகத்துவம் பெறுகின்றது...


மதிமயங்கும் நேரம் 

இழி செயலால்...

தீய நடவடிக்கையால் 

அவமானத்தை ஏற்க வேண்டாம்


வெண்மதியிடம் நாம் மதி மயங்கும் நேரம் வெண்மதி அதனால் தன் மதி மயங்கும் நேரம் எதிலும் தேய்தளிலும் வளர்தலிலும் மாற்றம் கண்டதில்லை...


மானிடரும் தன் மதி மயக்கத்தை...தன் 

மதி மயங்கும் நேரம்...


அறிந்து வெண்மதி போல் ...


 தன்மதியில்...

கண்டிப்பாக இருந்து காலத்தை காட்டும் வெண்மதி போல தேய்தலிலும் காலத்தை கடக்கும் நன்மதி பெற்று நல் ஆயுளில்...

நலம் பெற்று வெல்வோம் ஆள்வோம் வாழ்வோம்...🙏🏻



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational